சில முக்கிய கமாடிட்டிகளின் போக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

உலகச் சந்தைகள் எல்லாம் பொருளாதாரரீதியாக ஒரு பெரிய தடுமாற்றத்தில் இருந்துவருகின்றன. இந்த நிலையில் தேவை கூடிக்கொண்டுதான் இருக்கிறது. உலகப் பொருளாதாரம் என்று எடுத்துக்கொண்டால், அமெரிக்கப் பொருளாதாரம்தான் மிகப்பெரியது. அந்த நாட்டில் கொரோனா பிரச்னை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் அதிபர் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்துவருகிறார். நமது பங்குச் சந்தையிலும் சற்று உயர்வு காணப்படுவதால், தங்கம் பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. கடந்த ஐந்து வாரங்களாக மேலே 46950 என்ற எல்லையையும், கீழே 44700 என்ற எல்லையையும் தடைநிலை மற்றும் ஆதரவுநிலையாகக் கொண்டு இயங்கிவருகிறது.

தங்கம், சென்ற வாரம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 44550-ஐ தக்கவைத்துக்கொண்டு மேலே நகர ஆரம்பித்தது. சென்ற வாரம் திங்கள் அன்று நாம் கொடுத்திருந்த தடைநிலையான 45100-ஐ தாண்டி ஏற ஆரம்பித்தது. ஆனால், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் குறுகிய நகர்வில் இருந்தது. இந்த நிலையில் வியாழன் அன்று மிக வலிமையாக ஏறி 46209 என்ற உச்சத்தைத் தொட்டது. தங்கம் ஏற முயன்றாலும், தடை சற்று வலுவாகவே இருக்கிறது.

தங்கம் தற்போது ஏற்றத்துக்குத் தடுமாறிக்கொண்டிருக்கிறது. எனவே, உடனடித் தடைநிலை 46220. கீழே 45360-ஐ உடனடி ஆதரவாகக் கொண்டிருக்கிறது.

வெள்ளி (மினி)

வெள்ளி, தொடர்ந்து பக்கவாட்டு நகர்வில் இருந்த நிலையில், கடந்த வாரம் பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையை உடைத்து ஏற ஆரம்பித்திருக்கிறது. சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 41040-ஐ தக்கவைத்துக்கொண்டு ஏற ஆரம்பித்தது. அடுத்த தடைநிலையான 42620-ஐ உடைத்து பலமான ஏற்றத்தைக் கொடுத்தது. இதனால் கடந்த வியாழன் அன்று 43564 என்ற உச்சத்தைத் தொட்டது. தொடர்ந்து ஏறவும் முயல்கிறது. வெள்ளி நல்ல ஏற்றத்துக்குப் பிறகு, 44620-ஐ தடைநிலையாகவும், கீழே 42280-ஐ முக்கிய ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் (மெகா லாட்)

கச்சா எண்ணெய் மிக மோசமான நிலையில் இருந்து மீண்டு எழுந்திருக்கிறது. ஆனாலும் அடுத்த தடைநிலைக்கு அருகில் வந்திருக்கிறது. நாம் கொடுத்திருந்த ஆதரவுநிலையான 1240-ஐ தக்கவைத்துக்கொண்டு மேலே ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் தடைநிலையான 1585-ஐ உடைத்து உச்சமாக 1924-ஐ தொடக் காரணமாக இருந்தது. இந்த வலிமையான ஏற்றத்துக்குப் பிறகு ஒரு ஷூட்டிங் ஸ்டார் தோன்றியுள்ளது. இனி ஏற்றத்துக்குச் சிரமப்படலாம். கச்சா எண்ணெய் நல்ல ஏற்றத்துக்குப் பிறகு, மேலே 1990-ஐ தடைநிலையாகவும், கீழே 1735-ஐ உடனடி ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.

காப்பர்

(மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும்.)

காப்பர், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 391-ஐ தக்கவைத்துக் கொண்டு ஏறி, மேலே தடைநிலையான 405-ஐ உடைத்து 409-ஐ தொட்டிருக்கிறது. காப்பர் ஏற்றம் என்பது மிதமாகவே இருக்கிறது. தற்போது தடைநிலைக்கு அருகில் உள்ளது. காப்பர் கடந்த வாரம் முழுவதும் ஏறினாலும், தற்போது 411.50 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே 402.50 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.

காப்பர் ஏற்றம் என்பது மிதமாகவே உள்ளது. தற்போது தடைநிலைக்கு அருகில் உள்ளது.

மென்தா ஆயில்

மென்தா ஆயில் விலை, நகர்வின் அடிப்படையில் பார்க்கும்போது, நீண்டகால இறக்கத்துக்குப் பிறகு மெள்ள மேல்நோக்கித் திரும்பியிருக்கிறது. கடந்த 45 நாள்களில் மென்தா ஆயில் நீண்டகால இறக்கத்தின் ஒரு புல்பேக் ரேலியில் இருப்பதுபோல் உள்ளது. கடந்த மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரத்திலிருந்து இந்த ஏற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மென்தா ஆயில் 1008 என்ற புள்ளியிலிருந்து நகர்ந்து, 1177 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகு மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது. இது முக்கோணம் போன்ற ஓர் உருவ அமைப்பைத் தோற்றுவித்தது. இந்த உருவ அமைப்பின் மேல் எல்லையான 1151 என்ற தடைநிலையை தற்போது தாண்டியிருக்கிறது. மென்தா ஆயில் 2020, மார்ச் வரை ஒரு தொடர் இறக்கத்தில் இருந்துவந்திருக்கிறது. அதன் பிறகுதான் மெள்ள மேலே ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் 1008 என்ற புள்ளியிலிருந்து ஆரம்பித்து, தொடர்ந்து மூன்று வாரங்கள் ஏறுமுகமாக இருந்தது. இந்த ஏற்றத்தின் முடிவில் உச்சமாக 1200 என்ற புள்ளியை மென்தா ஆயில் தொட்டது. இந்த ஏற்றம் 16.04.2020 வரை தொடர்ந்தது. அதன் பிறகு ஏற்றத்தில் இறக்கம் நிகழ்ந்து, 22.04.20 அன்று குறைந்தபட்சப் புள்ளியாக 1119 என்ற புள்ளியைத் தொட்டது. பிறகு மென்தா ஆயில் மீண்டும் ஏற ஆரம்பித்தது. ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து ஏற ஆரம்பித்தநிலையில் மீண்டும் 1200 என்ற புள்ளியில் மிக பலமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது.

மென்தா ஆயில் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1200-ஐ நோக்கி நகர்ந்தாலும் தாண்ட முடியாமல் இறங்கியது. அதேபோல் இறக்கத்தில் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1165-ஐயும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மென்தா ஆயில் குறுகிய எல்லைக்குள் சுழன்றுகொண்டிருக்கும் நிலையில் 1190 உடனடித் தடைநிலையாகவும், கீழே 1155 உடனடி ஆதரவாகவும் உள்ளது.
.மெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி.
காட்டன்

காட்டன், நீண்டகால அடிப்படையில் இறங்குமுகமாகவே இருந்துவந்திருக்கிறது. இந்த நிலையில் மார்ச் கடைசி வாரத்திலிருந்து ஏப்ரல் மாதம் முடியும்வரை குறுகிய பக்கவாட்டு நகர்வில் இருந்துவந்தது. ஆனால், சென்ற வாரம் கீழ் எல்லையை உடைத்து நன்கு இறங்க ஆரம்பித்திருக்கிறது. காட்டன் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 16410-ஐ தக்கவைத்துக் கொண்டு, கீழே கொடுக்கப்பட்ட ஆதரவு எல்லையான 16040-ஐ உடைத்து இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் சென்ற வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாள்களும் தொடர்ந்து குறைந்தபட்சப் புள்ளியாக 14800-ஐ தொட்டது. பிறகு ஒரு புல்பேக் ரேலியில் உள்ளது. காட்டன் தற்போது 15340 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 15960-ஐ தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. சென்னா, அகண்ட பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையான 4290-ஐ தாண்ட முடியாமல் இறங்க ஆரம்பித்தது. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4170-ஐ உடைத்து 4143-ஐ தொட்டது. சென்ற வாரத்தின் முதல் இரண்டு நாள்கள் இறக்கத்தின் தொடர்ச்சியாக இருந்தது. அடுத்து ஒரு புல்பேக் ரேலி மூலம் சற்றே ஏறியுள்ளது. சென்னா, தற்போது 4090 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 4200-ஐ வலிமையான தடைநிலையாகவும் கொண்டுள்ளது.