Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி

பிரீமியம் ஸ்டோரி

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் மற்றும் மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

தங்கம் விலை ஏற்றத்தில் மீண்டும் சரித்திரம் படைத்துள்ளது. 01.08.19-லிருந்து ஏற ஆரம்பித்த தங்கம், ஒவ்வொரு நாளும் பலமான ஏற்றத்திற்கு உள்ளாகி புதிய உச்சங்களைத் தோற்றுவித்துக்கொண்டே வந்துள்ளது. சென்ற வாரமும் தங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சமான 38125 என்ற புள்ளியைத் தொட்டு சரித்திரம் படைத்தது. பங்குச் சந்தை, உலகப் பொருளாதாரம் போன்றவை நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், தங்கம் பலமாக ஏறிக்கொண்டிருக்கிறது. அதேசமயம், நிலைமை மாறினால், அதைப்போன்ற இறக்கமும் வரலாம். கவனம் தேவை.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தற்போது பலமாக ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் முந்தைய ஆதரவான 35380 தற்போது உடனடி ஆதரவாக மாறி வருகிறது. மேலே வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தில் இருப்பதால், ஆதரவை உடைக்காதவரை இறக்கங்கள் எல்லாம் வாங்குவதற்கான வாய்ப்பே.’’

தங்கம் இறங்கும்போதெல்லாம், வாங்குவதற்கு வாய்ப்பே என்று கடந்த இரண்டு வாரங்களாகக் கூறி வந்தோம். அவ்வாறே நிகழ்ந்துள்ளது. சென்ற வாரம் திங்களன்று 36000 என்ற புள்ளியில் தொடங்கிய தங்கம், அன்று மட்டுமே 37089 என்ற உச்சத்தைத் தொட்டது. செவ்வாயன்று சற்று பக்கவாட்டு நகர்வில் இருந்தது. புதனன்று மீண்டும் வலிமையாக ஏறி 38125 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின் சற்றே இறங்கி ரீடிரேஸ்மென்டில் உள்ளது. ஆனாலும், இனி கவனமாகவே இருக்கவேண்டும். ஏனெனில், இறக்கம் வந்தால் வலிமை யானதாக இருக்கலாம்.

தங்கம் வலிமையான ஏற்றத்திற்குப் பிறகு ரீடிரேஸ்மென்டில் உள்ளது. தற்போது 37670 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது. கீழே 37280 உடனடி ஆதரவு ஆகும்.

வெள்ளி (மினி)

வெள்ளி, சென்ற வாரம் தங்கத்தின் பாதையைப் பின்பற்றி, அதைப்போலவே ஏறி, ரீடிரேஸ்மென்டில் உள்ளது.

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 41770-ஐ திங்களன்றே உடைத்து வலிமையாக ஏறியது. அன்றே உச்சமாக 42664-ஐ தொட்டது. அடுத்து செவ்வாயன்று பக்கவாட்டில் நகர்ந்து, புதனன்று வலிமையாக ஏறி உச்சமாக 43850-ஐ தொட்டது. ஆனால், வாரத்தின் முடிவில் சற்றே இறங்கி பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி தற்போது 42400 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 43530 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 3945-ஐ உடைத்து 3957 வரை சென்றாலும், இறங்கி 3905 முடிந்தது. எனவே, காளைகளின் முயற்சி தோல்வியடைந்தது. ஆனால், கரடிகள் நாம் கொடுத்துள்ள ஆதரவான 3710-ஐ உடைத்து 3603 வரை இறங்கியது. அதன்பின் இப்போது புல்பேக் ரேலியில் உள்ளது.

இனி என்ன செய்யலாம்? 

கச்சா எண்ணெய், புல்பேக் ரேலியில் ஏறும்போது 3855-ஐ தடைநிலையாக கொண்டுள்ளது. கீழே 3690 உடனடி ஆதரவு ஆகும்.

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கவனமாக வியாபாரம் செய்யவும்.

காப்பர், சென்ற வராம் நாம் கொடுத்த தடைநிலையான 443-ஐ உடைத்து ஏற ஆரம்பித்துள்ளது. கீழே கொடுத்த ஆதரவு எல்லையான 432-ஐ தக்கவைத்துள்ளது. சென்ற வாரம் கீழ் எல்லையான 432-ல் ஆரம்பித்து படிப்படியாக ஏறி தடைநிலையான 443-ஐ உடைத்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி

இனி என்ன செய்யலாம்?

காப்பர், தற்போது 452 என்ற எல்லையைத் தடைநிலை யாகவும், கீழே 443 ஆதரவாகவும் கொண்டுள்ளது.

மென்தா ஆயில்

மென்தா ஆயில், கடந்த இரண்டு வாரங்களாக ஒரு பக்கவாட்டு நகர்வுக்குள்ளாகவே இருந்து வந்தது. அதாவது 18.07.19-ல் உச்சமாக 1337-ஐ தொட்டு இறங்கியது; 29.07.19-ல் 1235-ஐ தொட்டது. அதன்பின் அது ஒரு புல்பேக் ரேலி மூலம் ஏற ஆரம்பித்தது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி

ஆனால், புல்பேக் ரேலியின் உச்சமாக 31.07.19 அன்று 1281-ஐ தொட்ட பிறகு கீழே இறங்காமல், ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது. இந்த பக்கவாட்டு நகர்வு என்பது சென்ற வார கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து, மென்தா ஆயில் வலுவான ஏற்றத்தைக் கொடுத்துள்ளது.

மென்தா ஆயில் சென்ற வாரம், நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 1240-ஐ உடைக்கவில்லை. சென்ற வாரம் திங்கள் முதல் வியாழன்வரை, மேலே கொடுத்த தடை நிலையான 1290-வையும் உடைக்கவில்லை.

இந்த வலுவான பக்கவாட்டு நகர்வில் இருந்து மென்தா ஆயில், வெள்ளி அன்று மேல் எல்லையான 1290-ஐ உடைத்து 1299 என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த பிரேக்அவுட், தொடர்ந்தால் முந்தைய உச்சமான 1334-ஐ கூட தொடலாம்.

இனி என்ன செய்யலாம்? 

மென்தா ஆயில், பிரேக் ஆன நிலையில், உடனடி ஆதரவு 1285 ஆகும். மேலே 1305-ஐ உடைத்தால் இந்த ஏற்றம் இன்னும் வலிமையாகத் தொடரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காட்டன்

காட்டன் தொடர் இறக்கத்தில் இருக்கிறது. இந்த இறக்கத்தின்போது அவ்வப்போது ஒரு புல்பேக் ரேலி வந்துபோனாலும், திசையில் அடிப்படையில் தொடர்ந்து கீழ்நோக்கியே நகர்ந்து வருகிறது என்று சொல்லிவந்தோம். அந்த உண்மை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனாலும், சென்ற வாரம் இந்தத் தொடர் இறக்கத்தில் வரும் புல்பேக் ரேலி, சற்றே வலுவானதாக மாறியுள்ளது.

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in
தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

காட்டன் சென்ற வாரம் நாம் கொடுத்த ஆதரவு எல்லையை ஒரு கேப்டவுன் மூலம் உடைத்து இறங்கியது. இந்த இறக்கம் 19880-ல் ஆரம்பித்து, கீழே 19520 வரை இறங்கினாலும், முடியும்போது 19730-ல் முடிந்துள்ளது. இது ஒரு ஹேமர் மாதிரி அமைப்பைத் தோற்றுவித்துள்ளது.

எனவே, வலுவான ஏற்றத்திற்கு வழி அமைத்துக் கொடுத்தது. அதன் பின் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தோற்றுவித்து வலுவாக ஏறியது. ஆனால், வெள்ளியன்று மட்டும் ஏற முடியாமல் டோஜி அமைப்பைத் தோற்றுவித்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

காட்டன் புல்பேக் ரேலியில் உள்ளது. உடனடித் தடைநிலை 20520 ஆகும். கீழே 28300 உடனடி ஆதரவு ஆகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. 

சென்ற வாரம் சொன்னது… “சென்னா நல்ல இறக்கத்திற்குப் பிறகு, 4205 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. இதை உடைத்தல் நல்ல இறக்கம் வரலாம். மேலே 4260 என்பது உடனடித் தடைநிலையாக உள்ளது.”

சென்னா, கடந்த வாரம் நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 4205-ஐ உடைத்து 4155 வரை இறங்கியது. சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாயன்று, சற்றே பக்கவாட்டு நகர்வில் இருந்த சென்னா, புதனன்று வலிமையாக இறங்கி, ஆதரவை உடைத்தது. இன்னும் இறக்கத்தில் உள்ள சென்னா, அதன்பின், தற்போது ஒரு புல்பேக் ரேலியில் உள்ளது.

இனி என்ன செய்யலாம்?

சென்னா, ஆகஸ்ட் கான்ட்ராக்ட் டென்டர் பீரியடுக்குள் நுழைவதால், நாம் செப்டம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். புல்பேக் ரேலியின் உடனடி ஆதரவு 4244 ஆகும். மேலே 4295-ஐ உடைத்தால் பலமான ஏற்றம் வரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு