Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி

Commodity trading
பிரீமியம் ஸ்டோரி
News
Commodity trading

கமாடிட்டி

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் மற்றும் மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

தங்கம் (மினி) 

தங்கம் ஆகஸ்ட் 2019-ல் ஆரம்பத்தில் குறைந்தபட்ச புள்ளியாக 34760-லிருந்து ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் புதிய சரித்திரங்களைப் படைத்துக்கொண்டு பலமாக ஏறியது. ஆகஸ்ட் மாதத்தின் முடிவில் உச்சமாக 38998 என்ற புள்ளியைத் தொட்டது. இந்த ஏற்றம் ஒரு வரலாறாக இருந்தாலும், தற்போது இந்த ஏற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதோ என்றும் தோன்றுகிறது. ஒருவேளை உலகச் சந்தைகள் மற்றும் இந்தியப் பங்குச் சந்தையும் ஏறுமுகமாக மாறினால், தங்கத்தின் தற்போதைய ஏற்றம் முடிவுக்கு வந்து, ஒரு புதிய தற்காலிக இறக்கத்திற்குக்கூடத் தயாராகலாம்.

தி.ரா.அருள்ராஜன்
தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in
தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் நெருக்கமாக நகர்ந்து கொண்டிருப்பதால், அதன் உடனடி ஆதரவு 37530 ஆகும். மேலே 37800 ஆகும். எந்தப் பக்கம் உடைக்கிறதோ, அந்தப் பக்கம் வலிமையான நகர்வு வரலாம்.’’

தங்கம், சென்ற வாரம் தொடர்ந்து நாம் கொடுத்த தடைநிலை யான 37800-ஐ உடைத்து மெள்ள ஏறி உச்சமாக 38998-ஐ தொட்டது. கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் ஏறினாலும், வாரத்தின் முடிவில் ஏற்றத்தின் பெரும்பான்மையானவற்றை இழந்துள்ளது. இனி ஒரு பக்கவாட்டு நகர்வுக்கோ அல்லது சிறிய அளவில் இறக்கத்திற்கோ தயாராகலாம்.

இனி அக்டோபர் கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். தற்போதைய இறக்கத்தில் 38560 என்ற எல்லையை ஆதரவாக எடுக்கலாம். மேலே 39250 என்பது வலிமையான தடைநிலை ஆகும்.

வெள்ளி (மினி)

வெள்ளி, சென்ற வாரம் தங்கத்தின் நகர்வில் இருந்து மாறுபட்டு, மிக வலிமையான ஏற்றத்திற்கு மாறியது. தற்போதைய நிலையில் வெள்ளி தங்கத்தைவிட மிக பலமாக இருந்துவருகிறது.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளியின் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி நவம்பர் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். வெள்ளி தற்போது 44620-ஐ ஆதரவாகவும், மேலே 45430-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 44620-ஐ உடைத்து பலமாக ஏறி உச்சமாக 48800 என்ற புள்ளியைத் தொட்டது. அதன்பின் ஒரு ஸ்பின்னிங் டாப் தோன்றி உள்ளதால். இந்த ஏற்றத்திற்கு ஒரு தற்காலிக தடுப்பு வந்துள்ளது. வெள்ளி, தற்போது ஒரு ரீடிரேஸ்மென்ட் முறையில் சற்றே இறங்கலாம். உடனடித் தடைநிலை 48500 ஆகும். முக்கிய ஆதரவு 47250 ஆகும்.

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 3850 என்ற புள்ளிக்கு அருகில் வந்து, தொட்டு அதன்பின் வலிமையாக ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் நாம் கொடுத்த தடைநிலையான 4030 நோக்கி நகர்ந்தது. அந்த எல்லையைத் தாண்டி உச்சமாக 4094-ஐ தொட்டாலும், மீண்டும் 4030-க்கு உள்ளாகவே முடிந்துள்ளது.

கச்சா எண்ணெய் பாட்டத்திலிருந்து வலிமை யாக ஏறினாலும் தற்போது 4090-ல் வலிமையாக தடுக்கப்படுகிறது. உடனடி ஆதரவு 3920 ஆகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கவனமாக வியாபாரம் செய்யவும்.

சென்ற வாரம் சொன்னது… “காப்பர் ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி செப்டம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்ளலாம். காப்பர் தற்போது 448-ஐ உடனடித் தடைநிலையாகவும், கீழே 438-ஐ உடனடி ஆதரவாகவும் கொண்டுள்ளது.’’

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி

காப்பர், சென்ற வாரம் நாம் கொடுத்த தடை நிலையான 448-ஐ தக்கவைத்துள்ளது. அதாவது உச்சமாக 447.90 வரை சென்று பின் இறங்கி உள்ளது. அதேபோல் கீழே கொடுக்கப்பட்ட ஆதரவு எல்லையான 438-ஐ தக்கவைத்துள்ளது.

காப்பர் தற்போது அதே 448-ஐ தடைநிலை யாகவும் கீழே 440-ஐ உடனடி ஆதரவாகவும் கொண்டுள்ளது.

மென்தா ஆயில்

மென்தா ஆயில், சென்றவாரம் அதன் டிரெண்ட் பற்றிக் கூறியிருந்தோம். அதாவது டிரெண்ட் ரிவர்ஷல் ஆகி மேலே ஏறிக்கொண்டிருக் கிறது என்று கூறியிருந்தேன். எப்போது ஒரு டிரெண்ட் ரிவர்ஷல் ஆகி ஏறும்போதும் நடுவே அவ்வப்போது இறங்கித்தான் ஏறும். அதை ரீடிரேஸ்மென்ட் என்று அழைப்போம்.

தற்போது மென்தா ஆயில் நன்கு ஏற ஆரம்பித்தாலும், ஒரு ரீடிரேஸ்மென்ட் முறையில் இறங்க ஆரம்பித்துள்ளது. அப்படி ரீடிரேஸ்மென்ட் முறையில் இறங்கிய இறக்கம் என்பது 1369-லிருந்து 1309 ஆகும். இந்த 60 புள்ளி இறக்கம், முந்தைய ஏற்றமான 1235-லிருந்து 1369 வரை ஏறியதற்கான இறக்கம் ஆகும். அதாவது 134 புள்ளிகளின் ஏற்றத்திற்கு 60 புள்ளி இறக்கம். அதையே 50% ரீடிரேஸ்மென்ட் என்று சொல்லலாம். ஆனால், சென்ற வாரம் 60 புள்ளிகள் இறக்கத்தைத் தாண்டி தொடர்ந்து இறங்கி 1301-ஐ தொட்டுள்ளது. எனவே, இது தொடர் இறக்கமாக மாறுமோ என்ற சந்தேகத்தைக் கொடுத்துள்ளது.

மென்தா ஆயில் சென்ற வாரம், நாம் கொடுத்த தடைநிலையான 1330 என்ற எல்லையைத் தக்கவைத்துள்ளது. சென்ற வாரம் திங்களன்று கேப் அப்பில் துவங்கினாலும், முடியும்போது 1320ல் முடிந்து இறக்கத்தை உறுதி செய்துள்ளது.அதன்பின் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் சிறிய ஏற்றத்தின் மூலம் 1326 வரை சென்று, தொடர்ந்து ஏற முடியாமல் இறங்கி 1300-ஐ தொட்டுள்ளது.

மென்தா ஆயில், தற்போது இறங்குமுகமாக மாறியுள்ள நிலையில், உடனடித் தடைநிலை 1325 ஆகும். உடனடி ஆதரவு நிலை 1295 ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காட்டன்

காட்டன் தன்னுடைய இரண்டு வாரகால ஏற்றத்தைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த வாரம் உச்சமாக 19930-ஐ தொட்டபின், இறங்கி 19700-ல் முடிந்தது. இந்த இறக்கம் ஏற்றத்தின் இறக்கமா அல்லது டிரெண்ட் ரிவர்ஷல் ஆகி, இறங்குமுகமாக மாறுமா என்பதை வரும் வாரத்தில் முடிவு செய்யலாம். ஆனால், டவுண் டரெண்ட்டை நோக்கி நகரவும் இப்போது ஆரம்பித்துள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி

காட்டன் தடையான 19850-ஐ தக்கவைத்துள்ளது. எனவே, காட்டன் வலிமைகுன்றிக் காணப் படுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

சென்ற வாரம் திங்களன்று கேப்டவுனில் தொடங்கி(19450) ஏறி முடியும்போது 19620-ல் முடிந்துள்ளது. அடுத்த நாள் ஏறி உச்சமாக 19790-ஐ தொட்டாலும் டோஜி தோன்றி ஏற்றத்தைத் தடுத்துள்ளது. அடுத்தடுத்த நாள்கள் இறங்குமுகமாகவே முடிந்துள்ளது.

காட்டன் இறங்குமுகமாக மாறிய நிலையில் 19450 முக்கிய ஆதரவாகவும், மேலே 19690 முக்கிய தடைநிலையாகவும் உள்ளது.

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. 

சென்னா, கடந்த வாரம் நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 4070-ஐ திங்களன்றே உடைத்து 3993 என்ற குறைந்தபட்சப் புள்ளியைத் தொட்டது. எனவே, இது இறக்கம் தொடருவதைக் குறிக்கிறது. அடுத்த நாளும் இறங்கி குறைந்தபட்சப் புள்ளியாக 3956-ஐ தொட்டது. அதன்பின் தொடர்ந்து மூன்று நாள்களும் பக்கவாட்டு நகர்விலேயே இருந்தது.

சென்னா நன்கு இறங்கி பக்கவாட்டு நகர்வில் உள்ள நிலையில் தடைநிலையான 4060-ஐ உடைத்தால் புல்பேக் ரேலி வரலாம். கீழே 3960 என்ற ஆதரவை உடைத்தால் இறக்கம் தொடரலாம்.