தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

தங்கம் தொடர் ஏற்றத்திற்குப் பிறகு, ஒரு தற்காலிக இறக்கத்தில் உள்ளது என்று சொன்னோம். சென்ற வாரம், உலகச் சந்தை மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தைகள் கொஞ்சம் வலிமை பெற்றுள்ளன. எனவே, தங்கம் தற்போது இறக்கத்தில் உள்ளது என்று கூறினோம். செப்டம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை தோன்றிய கேண்டில் அமைப்பை உற்று நோக்கினால், அது ஒரு ஈவினிங் ஸ்டார் வகையைச் சேர்ந்தது என்பதை அறிய முடியும். இது ஏறும் சந்தையின் முடிவில் தோன்றினால், ஏற்றம் முடிந்து இறக்கத்தைக் காட்டக்கூடிய கேண்டில் அமைப்பு ஆகும். அதன்பின் தொடர்ந்து இரண்டு வாரங்களாக தங்கம் இறங்க ஆரம்பித்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் தற்போது 38310 என்ற எல்லையை உடனடி ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 39050 என்பது வலுவான தடைநிலை ஆகும்.”

தங்கம் சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 39050-ஐ தாண்டவில்லை. அதற்கு மாறாக ஆதரவு நிலையான 38310-ஐ உடைத்து பலமாக இறங்க ஆரம்பித்துள்ளது. சென்ற வாரத்தின் இரண்டாவது நாளே 38310 உடைக்கப்பட்டு, 38200 என்ற எல்லையைத் தொட்டது. அதன்பின் புதன், வியாழன் என்று தொடர்ந்து இறங்கி, 37662 என்ற குறைந்தபட்சப் புள்ளியைத் தொட்டது. அதன்பின் சற்றே தயங்கி நிற்கிறது.

தங்கம், நல்ல ஏற்றத்திற்குப் பிறகு, ஏற்றத்தின் மூன்றில் ஒரு பகுதியை தற்போது இழந்துள்ளதால், இந்த இறக்கத்திற்கான ஒரு புல்பேக் ரேலிகூட வரலாம். தற்போது 37500 என்பது உடனடி ஆதரவாகவும், மேலே 38200 வலிமையான தடைநிலையாகவும் உள்ளது.

வெள்ளி (மினி)

வெள்ளியும் தங்கத்தைப் போலவே செப்டம்பர் 3, 4 மற்றும் 5 தேதிகளில் ஒரு ஈவினிங் ஸ்டார் அமைப்பைத் தோற்றுவித்திருந்தாலும், வேகமும், வீச்சும் தங்கத்தைவிட குறைவாகவே இருந்து வருகிறது. அதாவது, கடந்த வாரம் தங்கம் நன்கு இறங்கிய வேளையில் வெள்ளி சற்றே பக்கவாட்டு நகர்வில் இருந்தது.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி தற்போது 49950 என்ற எல்லையைத் தடைநிலை யாகவும், கீழே 47900 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டுள்ளது.’’

வெள்ளி சென்ற வாரம் கொடுத்த தடைநிலை யான 49950-ஐ தக்கவைத்து, ஆதரவு நிலையான 47900-ஐ உடைத்தது. அதன்பின் ஒவ்வொரு நாளும் சிறிய அளவில் இறங்கி குறைந்தபட்சமாக 46932 என்ற புள்ளியைத் தொட்டு, இன்னும் பக்கவாட்டு நகர்விலேயே உள்ளது.

வெள்ளி தற்போது 46750 என்ற ஆதரவையும் மேலே 48250-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் தற்போது 3880 என்ற எல்லையை ஆதரவாகவும் மேலே 4080ஐ தடைநிலையாகவும் உள்ளது.’’

கச்சா எண்ணெய், நாம் கொடுத்த தடைநிலை யான 4080-ஐ உடைத்து, மிக வலிமையாக ஏறி உச்சமாக 4226-ஐ தொட்டது. அதன்பின் மீண்டும் இறங்க ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டது.

கச்சா எண்ணெய் செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், அக்டோபர் மாத்திற்கு மாறுகிறோம். கச்சா எண்ணெய் தற்போது 3820-ஐ முக்கிய ஆதரவாகவும், மேலே 3990-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

காப்பர்

மெகா லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும்.

காப்பர், சென்ற வாரம் நாம் கொடுத்த 457-ஐ தக்கவைத்துக்கொண்டு, ஆதரவு நிலையான 449-ஐ உடைத்து 445.20 வரை இறங்கியது. ஆனாலும், மீண்டும் வலிமையாக ஏறி, முந்தைய பக்கவாட்டு நகர்வுக்குள் நுழைந்துகொண்டது.

காப்பர் தற்போது 449-ஐ உடனடி ஆதரவாகவும், மேலே 459 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.