தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர், மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

தங்கம், கொஞ்சம் இறங்குமுகமாகத்தான் மாறியிருக்கிறது. பங்குச் சந்தைக்கும் தங்கத்துக்கும் எதிர்மறையான உறவுமுறை இருப்பதை அவ்வப்போது நினைவுபடுத்திவருகிறோம். இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது. நிஃப்டி அதைத் தொடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி குறியீட்டு எண்களும் புதிய உச்சங்களைத் தொட்டுவருகின்றன.

இவையெல்லாம் சேர்ந்து தங்கத்தைச் சென்ற வாரம் இறங்குமுகமாக மாற்றியுள்ளன. இந்த இறக்கம் தொடருமா அல்லது மீண்டெழுமா என்பதை இனிதான் பார்க்க வேண்டும். ஆனாலும், `பங்குச் சந்தையின் உச்சம் தாக்குப் பிடிக்குமா?’ என்ற கேள்வியும் கூடவே இருப்பதால், நல்ல இறக்கத்துக்குப் பிறகு தங்கம் மீண்டெழ வாய்ப்பிருக்கிறது.

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் இன்னும் பக்கவாட்டு நகர்விலேயே உள்ளது. கீழே 38030 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும், மேலே 38650 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.”

தங்கம் முந்தைய வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று வலிமையாக ஏறி, உச்சமாக 38576-ஐ தொட்டுவிட்டு, பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையை இடித்து நின்றது. எனவே, நாம் கொடுத்த தடைநிலையான 38650-ஐ தக்கவைத்திருக்கிற. சென்ற வாரத்தின் முதல் நாள் குறுகிய நகர்வில் இருந்தாலும், அடுத்த நாள் மிக வலிமையாக இறங்கி நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 38030-ஐ உடைத்தது. அதன் பிறகு புதனன்று ஒரு நம்பிக்கையைக் கொடுத்து சற்றே ஏறினாலும், வியாழன் அன்று பெரும் இறக்கத்தைக் கொடுத்தது.

தங்கம் முந்தைய ஆதரவான 38030-ஐ தற்போது தடைநிலையாகக் கொண்டிருக்கிறது. கீழே 37350-ஐ அடுத்த ஆதரவாகக் கொண்டுள்ளது.

வெள்ளி (மினி)

வெள்ளி, தங்கத்தின் திசையில் நகர்ந்து வந்தாலும் அதன் வீச்சு மாறிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதைப்போலவே, தங்கம் சென்ற வாரம் இறங்கும் வேகத்தைவிட வெள்ளி மிக வேகமாகவே இறங்கியது.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளியும் பக்கவாட்டு நகர்வில் இருந்தாலும், ஒரு ஹையர் பாட்டத்தை ஏற்படுத்த முயல்கிறது. தற்போது 46000 என்பது உடனடி ஆதரவாகவும், மேலே 47300 வலிமையான தடைநிலையாகவும் உள்ளன.’’

வெள்ளி, சென்ற வாரம் நாம் கொடுத்த தடைநிலையான 47300-ஐ தக்கவைத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்திருக்கிறது. நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 46000-ஐ பலமாக உடைத்து 43800 வரை இறங்கியது.

வெள்ளி வலிமை குன்றிவரும் நிலையில்,44500-ஐ வலிமையான தடைநிலையாகவும், கீழே 43400-ஐ முக்கிய ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் தற்போது 3775 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 3940 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.’’

தங்கம் இறங்கியபோது கச்சா எண்ணெய் வலிமையான ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறது. நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 3775-ஐ தக்கவைத்துக்கொண்டு, மேலே 3940 என்ற தடையை உடைத்து வலிமையாக ஏறியிருக்கிறது. இந்த ஏற்றத்தின் உச்சமாக 4109-ஐ தொட்டுள்ளது.

கச்சா எண்ணெய் நாம் முன்னர் கொடுத்த தடைநிலையான 3940-ஐ ஆதரவாகக் கொண்டிருக்கிறது. மேலே 4100 வலிமையான தடைநிலையாக உள்ளது.

காப்பர்

காப்பரின் மெகா–லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும். காப்பர், நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 435-ஐ தக்கவைத்துக்கொண்டு, தடைநிலையான 443-ஐ உடைத்து வலிமையாக ஏறி 446.20-ஐ தொட்டது. காப்பர் பக்கவாட்டு நகர்விலிருந்து மேல் எல்லையை உடைத்திருக்கிறது. தற்போது காப்பர் 441-ஐ உடனடி ஆதரவாகவும், மேலே 447.50 வலிமையான தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.

மென்தா ஆயில்

நீண்ட தொடர் இறக்கத்துக்குப் பிறகு, ஒரு ரவுண்டிங் பாட்டத்தைத் தோற்றுவித்திருக்கிறது மென்தா ஆயில். டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலம் இதை ஆராயும்போது, மென்தா ஆயில் ஒரு வலிமையான ஏற்றத்துக்குத் தன்னைத் தயார் செய்வதுபோலிருக்கிறது. நாம் கொடுத்திருந்தபடியே மென்தா ஆயில் ரவுண்டிங் பாட்டத்தின் விளிம்பான 1225-ஐ உடைத்து மிக பலமான ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த ஏற்றம் உச்சமாக 1282-ஐ தொட்டது குறிப்பிடத்தக்கது. மென்தா ஆயில் நான்கு வாரங்களாகப் பக்கவாட்டில் இருந்தாலும், தற்போது மிக பலமான ஏற்றத்தை அடைந்துள்ளது. மென்தா ஆயில் ஆதரவு எல்லையான 1210-ஐ எல்லையைத் தொடர்ந்து நான்காவது வாரமாகத் தக்கவைத்திருக்கிறது. மேலே தடைநிலையான 1230-ஐ சென்ற வாரம் திங்கள் அன்றே உடைத்து உச்சமாக 1250-ஐ தொட்டது. அதன் பிறகு தினமும் ஒரு புதிய உச்சத்தைத் தோற்றுவித்துக்கொண்டே போனது.

சென்ற வாரம் வியாழனன்று உச்சமாக 1275-ஐ தொட்ட பிறகு வலிமை குன்றி, முடியும்போது 1257 என்ற புள்ளியில் இறங்கி முடிந்தது. இது கரடிகளின் ஆதிக்கம் ஆரம்பமாவதைக் காட்டியது. அடுத்து வெள்ளியன்று அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் ஒரு கேப் டவுனில் 1255 என்ற புள்ளியில் தொடங்கி, கீழே 1251-ஐ தொட்டது. ஆனால், காளைகள் களத்தில் இறங்கியதால், விலை 1251 என்ற குறைந்தபட்சப் புள்ளியிலிருந்து வலிமையாக மாறி, உச்சமாக 1282-ஐ தொட்டது.

மென்தா ஆயில் வலிமையாக ஏறியுள்ள நிலையில் 1248 முக்கிய ஆதரவாகவும், மேலே 1285 உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.

காட்டன்

காட்டன், முந்தைய வாரம் சற்றே வீரியம் காட்டி எழ ஆரம்பித்தது என்று கூறியிருந்தோம். ஆனால், சென்ற வாரம் அதற்கு நேர்மாறாக, பெரிய மாற்றமில்லாமல் பக்கவாட்டு நகர்விலேயே இருந்துவந்திருக்கிறது.

காட்டன் சென்ற வாரம் திங்களன்று நாம் கொடுத்த ஆதரவான 19360-ஐ தக்கவைத்துக் கொண்டு ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றத்தின் தொடர்ச்சியாக தடைநிலையான 19480-ஐ உடைத்து உச்சமாக 19580-ஐ தொட்டது. ஆனாலும், இது ஒரு ஸ்பின்னிங் டாப் வகை கேண்டிலாக இருந்திருப்பதால், ஏற்றம் நிச்சயமற்றதாக இருந்தது. அடுத்தடுத்த நாள்களில் காட்டன் விலை மெள்ள மெள்ளக் குறைய ஆரம்பித்தது. தினமும் புதிய குறைந்தபட்ச புள்ளியைத் தோற்றுவித்துக்கொண்டே போனது. வாரத்தின் முடிவில் 19260 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டு முடிந்திருக்கிறது.

காட்டன் இன்னும் டவுன் டிரெண்டில்தான் இருக்கிறது. புதிய இறக்கத்துக்குத் தயாரான நிலையில் 19380-ஐ முக்கியத் தடைநிலையாகவும், கீழே 19210-ஐ உடனடி ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. முந்தைய வாரம் ரீடிரேஸ்மென்ட் முறையில் இறங்கிக்கொண்டிருந்தது என்று கூறியிருந்தோம். சென்ற வாரம் ரீடிரேஸ்மென்ட் முடிந்து வலிமையான ஏற்றத்தைத் திங்களன்றே கொடுத்தது. திங்கள் அன்று 4475 என்ற புள்ளியில் தொடங்கி, தடைநிலையான 4490-ஐ உடைத்து ஏறி உச்சமாக 4560-ஐ தொட்டது. அதன் பிறகு வாரம் முழுவதும் இறங்கி, ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது.

சென்னா, பக்காட்டு நகர்வுக்கு மாறியிருக்கிறது. தற்போது 4420-ஐ முக்கிய ஆதரவாகவும், மேலே 4510-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.