Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
மெட்டல் & ஆயில்

சந்தை நிலவரம்...

ங்கம், வெள்ளி, காப்பர், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் போக்கு குறித்துப் பார்ப்போம்.

தங்கம் (மினி) 

‘தங்கம் பக்கவாட்டு நகர்வின் உடனடித் தடைநிலையாக 40800-ல் இருந்துவந்தது. தங்கம் முந்தைய வாரம் திங்கள் அன்று இந்தப் பக்கவாட்டு நகர்வின் தடைநிலையை உடைத்து மிக வலிமையான ஒரு ஏற்றத்தைக் கொடுத்துள்ளது’ என்று தங்கத்தின் பலத்தைக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். தடையை உடைத்து பலமாக ஏறிய நிலையில், 43700 என்ற அடுத்தகட்ட எல்லையில் தடுக்கப்பட்டு, சற்றே பின்னோக்கி இறங்கிய தங்கம், மீண்டும் பலமாக ஏறுவதற்கான முயற்சியில் உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தங்கம் உச்சமாக 44881-ஐ 16.03.20 அன்று தொட்டது. அதன் பிறகு தொடர் இறக்கமாக இருந்து, கடும் வீழ்ச்சியை அடைந்தது. இந்த இறக்கம் 16.03.20 வரை தொடர்ந்து குறைந்தபட்சப் புள்ளியாக 38419-ஐ தொட்டது. இந்த இறக்கம் என்பது 14% வீழ்ச்சி. இந்த பலமான வீழ்ச்சிக்குப் பிறகு, 20.03.20 வரை ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்துவந்தது. இந்தப் பக்கவாட்டு நகர்வின் உடனடித் தடைநிலையாக 40800 என இருந்தது. சென்ற வாரம் திங்கள் அன்று இந்தப் பக்கவாட்டு நகர்வின் தடைநிலையை உடைத்து மிக வலிமையான ஒரு ஏற்றத்தைத் தங்கம் கொடுத்திருக்கிறது.

சென்ற வாரம் தங்கத்துக்கு நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 42070-ஐ மிகச் சிறப்பாகத் தக்கவைத்துக்கொண்டு, மேலே கொடுத்த தடைநிலையான 44200-ஐ தாண்டாமல் இரண்டு எல்லைகளுக்குள்ளாகவே சுற்றியது. தங்கம் முந்தைய வாரம் மிக வலிமையான ஏற்றத்தைக் கொடுத்த பிறகு 43700-ஆல் தடுக்கப்பட்டு, ஏற்றத்தின் இறக்கமாக இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் படிப்படியாக நிகழ்ந்து கீழே 42666 வரை இறங்கியது. சென்ற வாரம் வியாழன் அன்று ஒரு கேப் டவுன் மூலம் 42666-ஐ தொட்டபிறகு, அது பியர்சிங் பேட்டர்ன் மூலம் வலிமையான ஏற்றத்தைக் கொடுத்தது. பிறகு மீண்டும் ஏறுமுகமாக மாறியிருக்கிறது.

தங்கம் இன்னும் 44200-ஐ உடனடித் தடைநிலையாகக் கொண்டிருக்கிறது. கீழே 42850 உடனடி ஆதரவு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெள்ளி (மினி)

வெள்ளி சற்றே வலிமை குன்றி காணப்பட்டாலும், ரீடிரேஸ்மென்ட் முடிந்து மேலே திரும்பியிருக்கிறது.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

வெள்ளி சென்ற வாரம் திங்கள் அன்று நாம் கொடுத்திருந்த 42830 என்ற தடைநிலையைத் தக்கவைத்துக்கொண்டு, கீழே இறங்க ஆரம்பித்தது. இது ஒரு ஏற்றத்தின் இறக்கம். இந்த இறக்கம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 39200-க்கு சற்றே அருகில் வந்து மீண்டும் ஏற ஆரம்பித்திருக்கிறது.

வெள்ளி மீண்டும் ஏற ஆரம்பித்த நிலையில், மேலே 42200 என்பது தடைநிலையாகவும், கீழே 40100 என்பது உடனடி ஆதரவாகவும் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கச்சா எண்ணெய் (மெகா லாட்)

கச்சா எண்ணெய் பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லையைத் தொட்டுவிட்டு, பிறகு மேல் எல்லைக்கு அருகில் வந்துள்ளது. கச்சா எண்ணெய் சென்ற வாரம் வலிமை குன்றி இறங்கி, ஆதரவு எல்லையான 1680-ஐ உடைத்து 1550 வரை இறங்கியது. வாரத்தில் நான்கு நாள்களும் வலிமை குன்றி காணப்பட்ட நிலையில், கடைசி நாளான வெள்ளி அன்று வலிமையாக ஏறியிருக்கிறது.

கச்சா எண்ணெய் 2160 என்ற எல்லையை வலிமையான தடைநிலை ஆகவும், கீழே 1930-ஐ ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

காப்பர்

(மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கவனமாக வியாபாரம் செய்யவும்.)

காப்பர், சென்ற வாரம் இறங்கி ஆதரவான 368-ஐ உடைத்து 366-ஐ தொட்ட பிறகு, மேலே திரும்பி ஏற ஆரம்பித்துள்ளது. ஆனாலும் ஏற்றம் 382.50 வரை ஏறி, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 383-க்கு அருகில் முடிந்துள்ளது.

காப்பர், தற்போது பக்கவாட்டு நகர்வில் உள்ளது. தற்போது கீழ் எல்லையைத் தொட்டுவிட்டு, ஏறி மேல் எல்லைக்கு அருகில் உள்ளது. 383 இன்னும் தடைநிலையாக உள்ளது. கீழே 370 என்பது முக்கிய ஆதரவு நிலை.