Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
கச்சா எண்ணெய்

சந்தை நிலவரம்...

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சந்தை நிலவரம்...

Published:Updated:
கச்சா எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
கச்சா எண்ணெய்

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி) 

தங்கத்துக்கும் பங்குச் சந்தைக்கும் உள்ள எதிர்மறையான உறவு மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய வாரம் பங்குச் சந்தை இறங்குமுகமாக இருந்தபோது, தங்கம் ஏறுமுகமாக இருந்தது. சென்ற வாரம் பங்குச் சந்தை மீண்டும் வலிமையாக மாறியபோது, தங்கம் இறங்குமுகமாக மாறியிருக்கிறது. தங்கத்துக்கு முந்தைய வாரங்களில் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 40300-ஐ உடைத்து வலிமையாக ஏறியது. மூன்று நாள்கள் வலிமையான ஏற்றத்தைக் கொடுத்து 41315-ஐ தொட்டது.

தங்கம், வெள்ளி
தங்கம், வெள்ளி

பட்ஜெட் அன்று ஒரு டோஜியை உருவாக்கியது. எனவே, ஏற்றம் முடிவுக்கு வருவதை அது காட்டியது. அதன் பிறகு, கடந்த வாரம் முழுவதும் வலிமையாக இறக்கத்தைக்கொண்டிருந்தது. இதனால் ஏற்றம் முழுவதையும் இழந்து, மீண்டும் ஆதரவு எல்லையைத் தொட்டிருக்கிறது.

தங்கம் வலிமையான இறக்கத்துக்குப் பிறகு, 39970 என்ற எல்லையை ஆதரவாக எடுத்திருக்கிறது. மேலே 40660 என்ற எல்லை வலிமையான தடைநிலையைக் கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி  டிரேடிங்! மெட்டல் & ஆயில்

வெள்ளி (மினி)

வெள்ளி, தங்கம் நகர்ந்ததுபோலவே நகர்ந்தாலும் அதன் வீச்சு மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. சில நாள்களில் தங்கம் இறங்கினாலும், வெள்ளி ஏறியது.

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 46520-ஐ உடைத்து வலிமையாக ஏறி, 47315 என்று உச்சத்தைத் தொட்டது. இந்த ஏற்றத்தின் முடிவில் ஸ்பின்னிங் டாப்பை உருவாக்கியிருக்கிறது. அதன் பிறகு வலிமையாக இறங்கி எல்லா ஏற்றத்தையும் இழந்து முடிவில் ஒரு டோஜியை உருவாக்கியிருக்கிறது.

வெள்ளி இறங்கி 45680 என்ற ஆதரவை எடுத்திருக்கிறது. மேலே 46720 என்ற வலிமையான தடைநிலையாக உள்ளது.

கச்சா எண்ணெயின் நீண்ட நெடிய இறக்கத்துக்குப் பிறகு ஒரு புல்பேக் ரேலி நடந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் (மெகா லாட்)

கச்சா எண்ணெய் முன்பு தங்கத்துடன் நேர்மறையான உறவைக்கொண்டிருந்தது. ஆனால், தற்போது தனித்தன்மையுடன் இயங்க ஆரம்பித்துள்ளது. முந்தைய வாரங்களில் தங்கம் வலிமையாக ஏறினாலும், கச்சா எண்ணெய் வலிமையாக இறங்கியிருக்கிறது.

கமாடிட்டி  டிரேடிங்! மெட்டல் & ஆயில்

நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 3910-ஐ உடைத்து இறங்கி, 5.2.2020 அன்று குறைந்தபட்ச எல்லையாக 3551-ஐ தொட்டது. அதன் பிறகு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியிருக்கிறது.

கச்சா எண்ணெயின் நீண்ட நெடிய இறக்கத்துக்குப் பிறகு ஒரு புல்பேக் ரேலி நடந்திருக்கிறது. மேலே 3725 என்பது தடைநிலையாக உள்ளது. கீழே 3540 என்பது முக்கிய ஆதரவு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும்.

காப்பர், தங்கத்துக்கு எதிர்த்திசையில் நகர்ந்துவருகிறது. முந்தைய வாரங்களில் காப்பர் இறங்குமுகமாக இருந்துவந்தது. நாம் கொடுத்திருந்த ஆதரவான 441-ஐ உடைத்து இறங்கியது. இந்த இறக்கம் வலிமையானதாக மாறி, குறைந்தபட்சமாக 420 என்ற புள்ளியைத் தொட்டது.

அதன் பிறகு மீண்டும் வலிமையாக ஏற ஆரம்பித்து 439 வரை ஏறிய காப்பர், டோஜியை உருவாக்கியிருக்கிறது.

காப்பர் டோஜியை உருவாக்கியதால் 437ஐ தடைநிலையாகவும், கீழே 428ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism