தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

கொரோனா வைரஸ் உலகப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்ற செய்திகள் தொடர்ந்து வரவே, உலகப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. அதிலிருந்து வெளியேறும் பணம், `பாதுகாப்பான முதலீடு’ என்று கருதப்படும் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்யப்படுகிறது.

உலகநாடுகளிலுள்ள பெரும்பான்மையான முக்கிய நிறுவனங்களின் உற்பத்திக்கு சீனாவின் தொழிற்சாலைகள் ஒரு காரணமாக இருந்து வருகின்றன. அவை முழுமையான உற்பத்தியாகவோ, உதிரிபாக உற்பத்தியாகவோ, மூலப்பொருள் உற்பத்தியாகவோ இருக்கலாம். எனவே, `உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும்’ என்று உலக வங்கியும், ஐ.எம்.எஃப் அமைப்பும் அறிவித்திருக்கின்றன. எனவே, இது தங்கத்துக்கு மிகச் சாதகமான வாரமாக அமைந்திருக்கிறது.

சென்ற வாரம் கொடுத்திருந்த ஆதரவுநிலையான 42100-ஐ தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அதே நேரம், தடைநிலையான 42800-ஐ உடைத்து மிக பலமாக ஏற ஆரம்பித்துள்ளது. கடந்த வாரத்தின் ஐந்து நாள்களிலுமே மிக வலிமையான ஏற்றத்தில் இருந்துவந்திருக்கிறது. இந்த ஏற்றமும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஏற்றமே. சென்ற வாரம் தங்கம் 10 கிராம் சுமார் ரூ.41,500 என்ற விலையிலிருந்து மிக பலமாக ஏறி 44500 ரூபாயைத் தாண்டியிருக்கிறது.

தங்கத்தின் நகர்வு மிகவும் பலமாக இருக்கும் நிலையில் 44300 உடனடி ஆதரவாகவும், மேலே 44980 உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய் ஏற்றம் முழுவதையும் இழந்து இறங்கிய நிலையில் 3180 என்பது மிக முக்கிய ஆதரவு நிலை.

வெள்ளி (மினி)

வெள்ளி, சென்ற வாரம் தங்கத்தைப் போலவே ஏறுமுகமாக இருந்தது. ஆனால், தங்கத்தைப்போல புதிய உச்சங்களைத் தொடவில்லை.

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 46700-ஐ உடைத்து ஏறி ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தோற்றுவித்துக்கொண்டே போனது. திங்கள் அன்று 45468, செவ்வாய் அன்று 46840, வியாழன் அன்று 47515 என்று தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.

வெள்ளியின் இந்த தொடர் ஏற்றத்தில் 48200 என்ற எல்லை உடனடித் தடைநிலையாகவும், கீழே 46890 முக்கிய ஆதரவாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய் (மெகா லாட்)

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 3190-ஐ தக்கவைத்துக்கொண்டு, மேலே கொடுத்த தடைநிலையான 3380-ஐ உடைத்து பலமாக ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் அடுத்தடுத்த நாள்களில் 3577 வரை தொடர்ந்தது. செவ்வாய் மற்றும் புதன் இரண்டு நாள்களுமே ஷூட்டிங் ஸ்டார் வகை கேண்டிலை தோற்றுவித்திருக்கிறது. இதனால் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் இறங்குமுகமாவே மாறிவிட்டது.

கச்சா எண்ணெய் ஏற்றம் முழுவதையும் இழந்து இறங்கிய நிலையில் 3180 என்பது மிக முக்கிய ஆதரவுநிலை. மேலே 3376 முக்கியத் தடைநிலை.

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கவனமாக வியாபாரம் செய்யவும்.

நாம் கொடுத்திருந்த ஆதரவுநிலையான 411-ஐ தக்கவைத்துக் கொண்டு, தடை எல்லையான 423-ஐ உடைத்து புல்பேக் ரேலியாக ஏறி 431.95 என்ற உச்சத்தைத் தொட்டது.

காப்பர் தொடர் இறக்கத்திலிருந்து மீண்டு ஏறியுள்ள நிலையில் 432.70 தடைநிலையாகவும், கீழே 424.40 உடனடி ஆதரவாகவும் உள்ளது.