Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

காப்பர்
பிரீமியம் ஸ்டோரி
காப்பர்

சந்தை நிலவரம்...

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சந்தை நிலவரம்...

Published:Updated:
காப்பர்
பிரீமியம் ஸ்டோரி
காப்பர்

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி) 

41300 என்ற தடைநிலை உடைக்கப்பட்டால் மிகப்பெரிய ஏற்றம் வரலாம்; தங்கம் மிக வலிமையான ஏற்றத்தில் இருக்கிறது என்று கூறியிருந்தோம். உலகச் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நிலவிவரும் வரை ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பிருந்தது. சென்ற வாரம் தங்கம் தொடர் ஏற்றத்தில் இருந்தது. முந்தைய வாரத்தில் 42500 என்ற எல்லையிலிருந்து, மீண்டும் ஒரு பலமான ஏற்றத்தைக் கொடுத்தது. இந்த ஏற்றத்தால், தங்கம் உச்சமாக 43585 என்ற எல்லையைத் தொட்டது. இது மீண்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய உச்சம்.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது... “தங்கம், வலிமையாக ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் 41530 என்ற எல்லை உடனடி ஆதரவு. தங்கம் புதிய உச்சத்தில் இருப்பதால், எல்லா இறங்கங்களிலும் 41530-ஐ ஸ்டாப்லாஸாக வைத்து வாங்கலாம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

தங்கம் சென்ற வாரம் கொடுத்திருந்த ஆதரவுநிலையான 41530-ஐ தக்கவைத்திருக்கிறது. அதேநேரம் தடைநிலையான 41530-ஐ தாண்டி பலமான ஏற்றத்தைக் கொடுத்தது. தங்கம் சென்ற வாரம் திங்கள் அன்று உச்சமான 43585-ஐ தொட்ட பிறகு, இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் செவ்வாய் முதல் ஆரம்பித்து, வாரம் முழுவதும் தொடர்ந்தது. சென்ற வாரம் செவ்வாய் அன்று பலமான இறக்கத்தைக் கண்டாலும், அடுத்தடுத்த நாள்களில் சிறிய இறக்கங்களையே கண்டது. தங்கம், மார்ச் கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், இனி ஏப்ரல் கான்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். தங்கம் தற்போது 42100 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 42800-ஐ தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.

காப்பர் தொடர் இறக்கத்தில் இருப்பதால், 411 மிக முக்கிய ஆதரவு. மேலே 423 தடைநிலை. உடைத்தால் புல்பேக் ரேலி வரலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெள்ளி (மினி)

வெள்ளி, சென்ற வாரம் தங்கம் நகர்ந்த திசையில்தான் நகர்ந்திருக்கிறது. ஆனால் தங்கத்தின் இறக்கத்தைவிட வெள்ளியின் இறக்கம் என்பது ஒரு வீழ்ச்சியாகவே அமைந்திருந்தது.

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 49400-ஐ உடைத்து ஏறி 50144 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும், கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது. நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 47740-ஐ உடைத்து, தொடர்ந்து இறங்கி 45266 என்ற எல்லையைத் தொட்டது.

வெள்ளி தொடர் சரிவில் இருப்பதால், இன்னும் கொஞ்சம் இறங்கி, 44900-ஐ ஆதரவாக எடுக்கலாம். பின் உடனடித் தடைநிலையான 46700-ஐ உடைத்தால் புல்பேக் ரேலி வரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் (மெகா லாட்)

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 3995-ஐ தக்கவைத்துக்கொண்டது. ஆனால், ஆதரவு எல்லையான 3840-ஐ உடைத்து, பெரிய வீழ்ச்சியை அடைந்தது. சென்ற வாரம் முழுவதும் இறங்குமுகமாகவே இருந்தது. கச்சா எண்ணெய் மிக பலமாக இறங்கிய நிலையில் 3190 என்பது ஆதரவு எல்லை. உடனடித் தடைநிலை 3380. ஒரு புல்பேக் ரேலி வரலாம்.

காப்பர்
காப்பர்

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும். காப்பர், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 440-ஐ தக்கவைத்துக்கொண்டு, ஆதரவு எல்லையான 431-ஐ உடைத்து இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் தினசரி தொடர்ந்ததால்415-ஐ தொட்டது.

காப்பர் தொடர் இறக்கத்தில் இருப்பதால், 411 மிக முக்கிய ஆதரவு. மேலே 423 தடைநிலை. உடைத்தால் புல்பேக் ரேலி வரலாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism