Published:Updated:

கம்பெனி டிராக்கிங் : அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்!

அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்

(NSE SYMBOL: ALKYLAMINE)

கம்பெனி டிராக்கிங் : அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்!

(NSE SYMBOL: ALKYLAMINE)

Published:Updated:
அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனமான அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத்தான் நாம் இந்த வாரம் கம்பெனி டிராக்கிங் பகுதியில் பார்க்கப் போகிறோம். 1979-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், அலிபேட்டிக் அமின்கள், அமின் டெரிவேட்டிவ்கள் மற்றும் பல ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களை உற்பத்தி செய்துவருகிறது.

கம்பெனி டிராக்கிங் : அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்!

நிறுவனத்தின் வளர்ச்சி

கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், மஹாராஷ்டிராவில் படல்கங்கா மற்றும் குர்கும்ப், குஜராத்தில் தாேஹஜ் ஆகிய மூன்று இடங்களில் 12 விதமான உற்பத்தி மையங்களைக்கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனம் உலக அளவில் பார்மெச்சூட்டிக்கல்ஸ், அக்ரோ கெமிக்கல்ஸ், ரப்பர் கெமிக்கல்ஸ், தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் அமின்ஸ் சார்ந்த வேதிப்பொருள்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்துவருகிறது.

1982-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான, `லியோனார்ட் பிராசஸ் கம்பெனி’யுடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்து `ஈத்தைல் அமின்கள்’ எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் முதல் உற்பத்தி மையத்தை படல்கங்காவில் நிறுவியது. பின்னர் அதே இடத்தில், மற்ற அமின்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி மையங்களை அமெரிக்க நிறுவனமான ஆசிட் அமின்ஸ் டெக்னாலஜீஸுடன் தொழில்நுட்பரீதியாகக் கூட்டணி அமைத்து விரிவாக்கம் செய்தது. இன்றைக்கு இந்த உற்பத்தி வசதியில் ஆண்டொன்றுக்கு 25,000 மெட்ரிக் டன் அளவிலான பல்வேறுவிதமான அமின்களை உற்பத்திசெய்யும் பல்நோக்கு உற்பத்தி வசதியைக் கொண்டிருக்கிறது அல்கைல் அமின்ஸ் லிமிடெட்.

கம்பெனி டிராக்கிங் : அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்!

1995-ம் ஆண்டில் குர்கும்ப் எனும் இடத்தில் அமின்கள் மற்றும் அமின் டெரிவேட்டிவ்கள் உற்பத்தி செய்வதற்கான மையங்களைக் கொண்ட உற்பத்தி வளாகத்தை ஆரம்பித்தது. இன்றைக்கு இந்த இடத்தில் ஆண்டொன்றுக்கு 70,000 டன் அளவிலான வேதிப்பொருள்களை உற்பத்தி செய்யும் வகையிலான ஒன்பது உற்பத்திமையங்களைக் கொண்டிருக்கிறது.

2018-ம் ஆண்டில் தஹிஜ் எனும் இடத்தில் உற்பத்தி மையத்தை ஆரம்பித்த இந்த நிறுவனம், தற்போது இந்த இடத்தில் ஆண்டொன்றுக்கு 30,000 டன் அளவிலான அமின்களை உற்பத்தி செய்யும் வசதியைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தனக்குத் தேவையான ஆராய்ச்சி வசதிகளை புனேவில் உள்ள ஹதஸ்பார் என்னும் இடத்தில் நிறுவியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக கெமிக்கல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனம் இது!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிறுவனத் தயாரிப்புகள்

தயாரிப்புகள் என்று பார்த்தால், அலிபேட்டிக் அமின்கள், அமின் டெரிவேட்டிவ்கள், பைன் கெமிக்கல்கள் போன்ற மூன்று பெரும் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். அலிபேட்டிக் அமின்களில் மீத்தைல் அமின்கள், ஈத்தைல் அமின்கள், ஐசோப்ரொப்பைல் அமின்கள், ப்ரொப்பைல் அமின்கள், ப்யூட்டைல் அமின்கள் சைக்ளோஎக்சைல் அமின்கள் போன்றவற்றை உற்பத்தி செய்துவருகிறது இந்த நிறுவனம். அமின் டெரிவேட்டிவ்களில் அமைடுகள் ஹைட்ரோ குளோரைடுகள், மிக்ஸட் அமின்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

Alkyl Amines Chemicals Ltd
Alkyl Amines Chemicals Ltd

கெமிக்கல்கள்துறை ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமான ஒன்று. பல்வேறு தொழில்துறைகளுக்கும் தேவைப்படும் கெமிக்கல்களை சப்ளை செய்யும் அல்கைல் அமின்ஸ் நிறுவனம், கெமிக்கல்கள் உற்பத்தியிலும், கெமிக்கல்களைக் கையாள்வதிலும் நீண்ட அனுபவம் கொண்டிருக்கிறது. பொருளாதாரரீதியாக நாடு வளர்ச்சியைச் சந்திக்கும் சூழலில், இந்தத் துறையில் இயங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

ரிஸ்க் உண்டா?

கெமிக்கல்துறையில் இயங்கிவரும் அனைத்து நிறுவனங்களுக்கும் உரித்தேயான ரிஸ்க்குகள் இந்த நிறுவனத்துக்கும் பொருந்தும். பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்திருக்கும் துறையாக இருப்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவிலான வளர்ச்சி பெறாமல் போனாலோ, எதிர்பாராதவிதமாக தேக்கநிலையைச் சந்தித்தாலோ அதன் பிரதிபலிப்புகள் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டிலும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும், இந்த நிறுவனத்தின் ஒரு சில தயாரிப்புகள் கமாடிட்டிகளாக இருப்பதால், மூலப்பொருள்களின் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் பாதிப்புகளைக் கொண்டுவந்து சேர்க்கலாம். மேலும், கெமிக்கல் உற்பத்தி என்பது சுற்றுச்சுழல் சார்ந்திருப்பதால், சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கை மாறுதல்கள் இந்தத் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

கம்பெனி டிராக்கிங் : அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்!

இப்படி ரிஸ்க்குகள் பல இருந்தாலும் தொழில்ரீதியாக நீண்ட அனுபவத்தையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பையும் கொண்ட நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் பங்குகளை அதிகப்படியான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் மட்டும் சந்தை ஏதாவது ஒரு காரணத்தால் நல்லதொரு வீழ்ச்சியைச் சந்திக்கும்போது வரும் கணிசமானதொரு விலை இறக்கத்தில் மட்டும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாங்கப் பரிசீலிக்கலாம். அதாவது தங்களுடைய மூன்று ஆண்டுகாலத்துக்கு மேலான போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ள தொடர்ந்து டிராக் செய்துவரலாம்.

கம்பெனி டிராக்கிங் : அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்!

அண்மையில் இந்தப் பங்குகள் கணிசமான அளவில் விலை ஏற்றத்தைச் சந்தித்ததால், கணிசமானதொரு விலை இறக்கம் வரை மிகவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியம்.

ஏற்கெனவே கெமிக்கல்துறையில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளை அதிகம்கொண்ட போர்ட்ஃபோலியோவை வைத்திருப்பவர் களும், பங்கை வாங்கிய பிறகு தாங்களாகவே இந்த நிறுவனம் மற்றும் துறையின் செயல்பாட்டை டிராக் செய்ய முடியாதவர்களும் இந்தப் பங்கை வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது!

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One-year Price history of the daily closing price of the securities covered in this report is available http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose symbol: ALKYLAMINE) /name of company/time duration)