Published:Updated:

கம்பெனி டிராக்கிங் : கெயில் (இந்தியா) லிமிடெட்!

கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்

(NSE SYMBOL: GAIL)

கம்பெனி டிராக்கிங் : கெயில் (இந்தியா) லிமிடெட்!

(NSE SYMBOL: GAIL)

Published:Updated:
கம்பெனி டிராக்கிங்
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி டிராக்கிங்
ந்திய அரசு நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிடெட்டைத்தான் இந்த வாரம் நாம் டிராக்கிங் பகுதியில் அலசி ஆராயப் போகிறோம்.

நிறுவனத்தின் வரலாறு!

1984-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கெயில், மத்திய அரசின் பொது நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நிறுவனம் ஹசிரா-விஜய்பூர்-ஜகதீஷ்பூர் போன்ற நகரங்களுக்கு இடையேயான இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லக் குழாய்களை அமைத்துப் பராமரித்துத் தருவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதுதான் இந்தியாவில் இயற்கை எரிவாயுவை உருவாக்கி வளர்த்தெடுப்பதற்கான அடித்தளமாக இருந்தது.

கம்பெனி டிராக்கிங் : கெயில் (இந்தியா) லிமிடெட்!

1988-ம் ஆண்டு விஜய்பூரில் எல்.பி.ஜி-யைப் பிரித்தெடுக்கும் உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான அனுமதி இந்த நிறுவனத்துக்குக் கிடைத்தது. எல்.பி.ஜி-யைப் பிரித்தெடுப்பதில் ஆண்டொன்றுக்கு நான்கு லட்சம் டன் என்ற நிர்மாணிக்கப்பட்ட அளவுடன் திட்டமிடப்பட்டது. முதலில் இரண்டு லட்சம் டன்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட பிரித்தெடுக்கும் கட்டுமானம் உருவாக்கப்பட்டது. 1990-91-ம் நிதியாண்டில் திட்டமிட்ட காலத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே எல்.பி.ஜி உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து விஜய்பூரில் இரண்டாவது பிரிவின் கீழ், 1992-ம் ஆண்டில் உற்பத்தி தொடங்கப்பட்டது. 1993-94-ம் நிதியாண்டில் இந்திய அரசு இந்த நிறுவனத்துக்கு புரோபேன் (Propane) வேதிப்பொருளைச் சந்தைப்படுத்த அனுமதியை வழங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1994-ம் ஆண்டு, பிரிட்டிஷ் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து மும்பை நகரத்தின் தேவைக்கான எரிவாயுவை விநியோகம் செய்வதற்காக, `மஹாநகர் கேஸ் லிமிடெட்’ எனும் நிறுவனத்தை ஆரம்பித்தது. 1995-96-ம் நிதியாண்டில் விஜய்பூரில் இரண்டு புரோபேன் மீட்டெடுக்கும் வசதியை நிறுவியது.

கம்பெனி டிராக்கிங் : கெயில் (இந்தியா) லிமிடெட்!

பங்குச் சந்தையில்...

1996-ம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனத்துக்கு 1997-98-ம் நிதியாண்டில் மத்திய அரசு ‘நவரத்னா’ என்ற அங்கீகாரத்தை அளித்தது. 1997-ம் ஆண்டு டெல்லி நகரத்தில் வீட்டு மற்றும் வணிக உபயோகத்துக்கான எரிவாயுவை குழாய் மூலம் விநியோகம் செய்வதற்கான மாதிரித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. அதே ஆண்டில் பாரத் பெட்ரோலியம் மற்றும் டெல்லி அரசுடன் இணைந்து `இந்திர பிரஸ்தா கேஸ் லிமிடெட்’ எனும் நிறுவனத்தை ஆரம்பித்தது.

1999-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பெட்ரோகெமிக்கல் காம்ப்ளெக்ஸை நிறுவியது. இந்த பெட்ரோகெமிக்கல் காம்ப்ளெக்ஸில் 2,60,000 டன் ஹெச்.டி.பி.இ மற்றும் எல்.டி.பி.இ-யை உற்பத்தி செய்யும் வசதி உருவாக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு கெயில் இந்தியா, ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி மற்றும் ரஷ்ய நிறுவனமான காஸ்ப்ரோம் போன்ற நிறுவனங்கள் இணைந்து கோரிய ஒப்பந்தப் புள்ளியில் இரண்டு பிளாக்குகளை மத்திய அரசு ஒதுக்கியது. அவற்றில் ஒன்று ஒடிசாவில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்துடனும், மற்றொன்று வங்காளத்தில் காஸ்ப்ரோம் (Gazprom) நிறுவனத்துடனும் இணைந்து செயல்பட்டு எண்ணெய் வளத்தைக் கண்டுபிடிக்கும் பணியைச் செய்வதற்கான ஒப்பந்தங்கள்.

1999-ம் ஆண்டு மத்திய அரசு குஜராத்தில் ஒரு நாளைக்கு ஐந்து மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு க்யூபிக் மீட்டர் அளவிலான எரிவாயுவை பிராசஸ் செய்யும் வசதியை உருவாக்குவதற்கான அனுமதியை அளித்தது. 2001-ம் ஆண்டு இந்த உற்பத்தி வசதியை நிறுவி, அதில் சோதனை முறையில் உற்பத்தியை ஆரம்பித்தது.

இந்த நிறுவனத்துக்கு 1997-98-ம் நிதியாண்டில் மத்திய அரசு ‘நவரத்னா’ என்ற அங்கீகாரத்தை அளித்தது.

2001-ம் ஆண்டு ஜாம்நகர் முதல் லோனி என்ற இடம் வரையிலான எல்.பி.ஜி குழாய் அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தது. ஜாம்நகர்-லோனி குழாய் இணைப்பு குஜராத்தில் ஆரம்பித்து ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி வழியாக உத்தரப்பிரதேசம் வரை 1,269 கிலோமீட்டர் தூரத்துக்குச் சென்றடைகிறது. இதன் மூலம் ஓராண்டுக்கு 1.7 மில்லியன் டன் அளவிலான எல்.பி.ஜியைக் கொண்டு செல்ல முடியும்.

கம்பெனி டிராக்கிங்
கம்பெனி டிராக்கிங்

2003-04-ம் ஆண்டு தஹிஜ்-விஜய்பூர் இடையே 610 கிலோ மீட்டர் தூரத்துக்கான 42 இன்ச் அளவிலான குழாய் அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்தது இந்த நிறுவனம். இந்த பைப்லைன் வாயிலாக மறுவாயுவாக்கம் (Regasification) செய்யப்பட்ட எல்.என்.ஜி கேஸை குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்திலிருக்கும் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும்.

2007-ம் ஆண்டு கெயில் இந்தியா நிறுவனம் தஹிஜ்-பான்வெல்-தபோல் குழாய் இணைப்பை ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் நிர்மாணித்து முடித்தது. இந்தக் குழாய் இணைப்பின் மூலமாக, ஆர்-எல்.என்.ஜி தஹிஜிலிலுள்ள பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிடெட் நிறுவனத்தின் எல்.என்.ஜி டெர்மினலிலிருந்து, ரத்னகிரி கேஸ் அண்ட் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தபோல் மின் உற்பத்தி நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

2009-ம் ஆண்டு காற்றாலை மின் உற்பத்தி வசதிகளை உருவாக்குவதில் கால்பதித்தது இந்த நிறுவனம். 2015-ம் ஆண்டு ஜகதீஷ்பூர்-ஹால்தியா நடுவேயான 2,050 கிலோமீட்டர் தூரத்துக்கான நேச்சுரல் கேஸ் குழாய் அமைக்கும் கட்டுமானப் பணியைத் தொடங்கியது. 2016-ம் ஆண்டு வாரணாசி நகரில் எல்.என்.ஜி-யை விநியோகம் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளை அடிக்கல் நாட்ட ஆரம்பித்தது.

நிறுவனத்தின் தொழில் பிரிவுகள்

இந்த நிறுவனத்தின் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், எரிவாயுவைக் கொண்டு செல்லுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் (11,000 கிலோமீட்டர் தூரத்துக்கான நெட்வொர்க்குடன்), பெட்ரோகெமிக்கல் (இந்திய உள்நாட்டுச் சந்தையில் 15% சந்தைப் பங்களிப்பு கொண்டுள்ளது), லிக்விட் ஹைட்ரோ கார்பன், ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் செய்யப்படும் மின்சார உற்பத்தி (118 மெகாவாட் காற்றாலை உற்பத்தி வசதி) மற்றும் 10.7 மெகாவாட் அளவிலான சோலார் மின் உற்பத்தி போன்றவற்றில் ஈடுபட்டுவருகிறது.

கம்பெனி டிராக்கிங் : கெயில் (இந்தியா) லிமிடெட்!

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

எரிவாயு உற்பத்தி மற்றும் குழாய் மூலம் எடுத்துச் செல்லுதல்/ சந்தைப்படுத்துதல் துறையில் செயல்படும் அனைத்து நிறுவனங் களுக்கும் உரித்தான ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மேலும், தொழில் ரீதியான போட்டி, கட்டுமானத்துக்கான மூலப் பொருள்கள் விலை உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் ரிஸ்க்குகளே. மேலும், இந்த நிறுவனம் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்து இயங்கும் துறையில் செயல்படும் நிறுவனம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

கம்பெனி டிராக்கிங் : கெயில் (இந்தியா) லிமிடெட்!

ரிஸ்க்குகள் பல இருந்தாலும் தொழில் ரீதியான நீண்ட அனுபவம் மற்றும் மத்திய அரசின் மஹாரத்னா அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளை, சந்தை ஏதாவது ஒரு காரணத்தால் நல்லதொரு இறக்கத்தைச் சந்திக்கும்போது வரும் கணிசமான விலை இறக்கத்தில் மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாங்கலாம். வாங்கி தங்களுடைய ஐந்து ஆண்டுக் காலத்துக்கும் மேலான போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ள, கொஞ்சம் அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்டவர்கள் மட்டும் தொடர்ந்து டிராக் செய்து வரலாம்.

ஏற்கெனவே இந்தத் துறையில் செயல்படும் பங்குகளை அதிகம்கொண்டிருக்கும் போர்ட் ஃபோலியோவை வைத்திருப்பவர்களும், பங்கை வாங்கிய பிறகு தாங்களாகவே இந்தத் துறை மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டை டிராக் செய்துகொள்ள முடியாதவர்களும் இந்தப் பங்கை வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது.

This section is not a buy/sell recommendation at the current price levels, but only a compilation of information about the company and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One-year Price history of the daily closing price of the securities covered in this report is available in the following URL (https://www.nseindia.com/get-quotes/equity?symbol=GAIL#info-historicaldata) – in this URL select historical data and then click on 1Y and click Filter to get one year price of the stock.