Published:Updated:

இறக்கத்தில் கச்சா எண்ணெய்... என்ன காரணம்? - பொருளாதாரம் தளர்வடைகிறதா?

கச்சா எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
கச்சா எண்ணெய்

இந்தியாவைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெயின் விலைச்சரிவு, அடுத்த சில ஆண்டுகளுக்குச் சிக்கலைத் தராது!

இறக்கத்தில் கச்சா எண்ணெய்... என்ன காரணம்? - பொருளாதாரம் தளர்வடைகிறதா?

இந்தியாவைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெயின் விலைச்சரிவு, அடுத்த சில ஆண்டுகளுக்குச் சிக்கலைத் தராது!

Published:Updated:
கச்சா எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
கச்சா எண்ணெய்
2020-ம் ஆண்டில் சில கமாடிட்டிகளின் விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கமாக வர்த்தகமாகி வருகின்றன. கோவிட்-19 உலக அளவில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருவதால், சில கமாடிட்டிகளின் தேவை குறைந்துவருகிறது. இதனால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பதுடன், வேலை இழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்திருப்பது சந்தைகளைக் கவலை அடையச் செய்துள்ளதுடன், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும் கச்சா எண்ணெய் விலைப்போக்கை மாற்றி வருகின்றன.

கடந்த சில நாள்களில் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் சுமார் 10% என்ற அளவுக்குக் குறைந்தது. அதாவது, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 38 டாலர்களை ஒட்டியும், நைமெக்ஸ் கச்சா எண்ணெய் 36 டாலர்களை ஒட்டியும் வர்த்தகமாகின. இந்தச் சரிவு மேலும் நீடிக்குமா, இந்தச் சரிவுக்கு மற்ற ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.

இறக்கத்தில் கச்சா எண்ணெய்... என்ன காரணம்? - பொருளாதாரம் தளர்வடைகிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேல் எண்ணெய் கையிருப்பு அதிகரிப்பு

அமெரிக்காவில் கச்சா எண்ணெயின் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரம் சென்ற வார மத்தியில் வெளியிடப்பட்டது. வாரம்தோறும் வெளியாகக்கூடிய அமெரிக்க கச்சா எண்ணெய் இருப்பு பற்றிய புள்ளிவிவரம் சென்ற புதன்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் எரிசக்தித் தகவல் ஆணையத்தின் அறிக்கையின்படி, 4.3 மில்லியன் பேரல்கள் என்ற அளவுக்குக் கையிருப்பு அதிகரித்துள்ளது. கமாடிட்டி சந்தையைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெய் கையிருப்பு குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கையிருப்பானது நான்கு மடங்குக்கும் கூடுதலாக இருப்பது சந்தைகளை அதிர்ச்சியடையச் செய்தது. இதனால் சென்ற வியாழக்கிழமை வர்த்தகத்தில் சுமார் 5 - 6% என்ற அளவுக்கு விலை இறக்கம் கண்டது. மேலும், எண்ணெய் எடுக்கும் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், வரும் காலங்களில், ஷேல் எண்ணெயின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டதையடுத்து சரிவு நீடித்தது. இந்த இறக்கமானது, கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு மிகப்பெரிய சரிவாகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவிட் 19-ன் இரண்டாம்கட்ட தாக்கமும், வளர்ந்த நாடுகளின் பொது முடக்கமும்!

பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அயர்லாந்து போன்ற நாடுகள் கோவிட் 19-ன் இரண்டாம் கட்ட தாக்கம் உணரத் தொடங்கியுள்ளன. இதனால் அந்த நாடுகள் அத்தியாவசியத் தேவைகள் தவிர, மற்ற அனைத்துச் சேவை களையும் நிறுத்துவதற்காகக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. வளர்ந்த நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவைச்சந்திக்கும் என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே காணப்படுகிறது. கோவிட்-19-ன் முதல்கட்ட தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத நிலையில், மீண்டும் இத்தகைய நிலை ஏற்படுவதால், சந்தைப் பொருள்களின் மீதான தேவைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என கமாடிட்டி சந்தைகள் உணர்த்தத் தொடங்கியுள்ளன.

இறக்கத்தில் கச்சா எண்ணெய்... என்ன காரணம்? - பொருளாதாரம் தளர்வடைகிறதா?

2021-ம் ஆண்டின் கடைசி வரையிலும் கோவிட்-19-ன் தாக்கம் இருக்க வாய்ப்பிருப்ப தாகக் கருதப்படுவதால், பொருளாதாரத்தில் சகஜநிலை உடனடியாகத் திரும்புவதற்கான முகாந்திரங்கள் ஏதும் இல்லை என்றே சொல்லப்படுகின்றன. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, கோவிட் -19-க்கு முன் இருந்த நிலையை அடைவதற்கு மேலும் சில வருடங்கள் காத்திருக்கும் சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ள நிலையில், தேவை என்பது அதிகரிக்க வாய்ப்பில்லை என்றே கருதப் படுகிறது. கச்சா எண்ணெயின் உலகத் தேவையானது சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 11-12% வரை குறைவாக இருக்கலாம் என்று கணிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, நாள் ஒன்றுக்கு 88 - 89 மில்லியன் பேரல்கள் மட்டுமே தேவை இருக்க வாய்ப்புண்டு என்றே தற்போது கருதப்படுகிறது.

ஒபெக் நாடுகளின் உற்பத்திக் குறைப்பு  நடவடிக்கைகளில் எழுந்துள்ள சிக்கல்கள்!

தற்போது நடைமுறையில் இருந்து வரும் உற்பத்திக் குறைப்பு அளவானது நாளொன்றுக்கு 7.7 மில்லியன் பேரல்களாக இருக்கின்றன. இது வருகிற டிசம்பர் வரையிலான காலத்துக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பதால், 2021 ஜனவரிக்குப் பிறகு, இந்த உற்பத்திக் குறைப்பு நடவடிக்கைகளை நீடிக்கச் செய்வதில், ஒபெக் நாடுகளில் இருக்கும் ஒரு சில உறுப்பு நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இதில், இராக், யு.ஏ.இ மற்றும் குவைத் நாடுகளில் இராக் தவிர, மற்ற இரண்டு நாடுகளும் உற்பத்திக் குறைப்பில் மிகப்பெரிய அளவுக்குத் தங்களின் பங்களிப்பை ஆற்றி வருகின்றன. இந்த மூன்று நாடுகளுமே 2021 ஜனவரிக்குப் பிறகு, நாள் ஒன்றுக்கு இரண்டு மில்லியன் பேரல்கள் என்ற அளவுக்கு உற்பத்தி அளவை அதிகரித்துக்கொள்ள முடிவு செய்திருந்தன. மேற்கண்ட நாடுகளின், தற்போதைய உற்பத்தி அளவானது, தத்தமது நாடுகளின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் போதுமானதாக இல்லை என்று கருதுகின்றன. ஒபெக் நாடுகளின் உற்பத்திக் குறைப்பு ஒப்பந்தங்களில் இல்லாத நாடான லிபியா, தனது அதிகபட்ச உற்பத்தித் திறனை எட்டியுள்ளது. அதாவது, நாள் ஒன்றுக்கு 6,80,000 பேரல்களாக அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதியில் மேலும் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேரல்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இறக்கத்தில் கச்சா எண்ணெய்... என்ன காரணம்? - பொருளாதாரம் தளர்வடைகிறதா?

வளைகுடா பிராந்தியத்தில் இருக்கிற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்,  தங்களின் பொருளாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு ஆர்வத்தைக் காட்டி வருகின்றன. இத்தகைய உற்பத்திக் குறைப்பு முயற்சிகளில் ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், கச்சா எண்ணெயின் விலைச்சரிவை யாராலும் தடுக்க இயலாத ஒன்றாகிவிடும் என்ற அச்சமும் காணப்படுகிறது. லிபியாவின் உற்பத்தி அதிகரிப்பு, கோவிட் அச்சுறுத்தல் ஆகியவற்றின் காரணமாக அடுத்தாண்டு உற்பத்திக் கட்டுப்பாட்டில் சில தளர்வுகளைக் கொண்டு வரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றன.

ஆக மொத்தத்தில், இந்தியாவைப் பொறுத்தவரை, கச்சா எண்ணெயின் விலைச்சரிவு, அடுத்த சில ஆண்டுகளுக்குப் பெரிய அளவிலான சிக்கலைத் தராது என்று நம்பலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்கத் தேர்தலும், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியும்!

அமெரிக்காவானது ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எத்தகைய மாற்றங்களைச் சந்திக்க இருக்கின்றன என்பதைச் சந்தைகள் கவனித்து வருகின்றன. ஒருவேளை, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஈரான் விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கக்கூடும் என்ற விவாதங்களும் நடந்துவருகின்றன. ஈரான் மீதான புதிய அதிபரின் பொருளாதார முடிவுகள் மிதமான தாக்கத்தை ஏற்படுத்துமேயானால், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி உலகச் சந்தைக்கு வருவதற்கு வழிவகை செய்யும். இதனால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் இறக்கமடையும் வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism