இயான் கஸல் ஒரு முழு நேர முதலீட்டாளர். தரமான பங்குகளைக் கண்டறிவதில் புலி. நம் ஊர் ஸ்மால்கேப் நிபுணர் பொரிஞ்சு வெளியாத்துக்கு முன்னோடி. இயான் குறிவைப்ப தெல்லாம் 100 மடங்கு வளரக்கூடிய சிறு, குறு பங்குகளைத்தான் (Microcap and Nanocap). அவைதானே மல்ட்டி பேகர்களாக மாறி பணமழை பொழியும்?

2011-ல் தன்னைப் போலவே, ஆராய்ச்சி மனப்பான்மை உடையவர் களுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்வதற்குமாக மைக்ரோகேப் க்ளப் என்ற குழு ஒன்றை ஆரம்பித்தார்.

அவர் தன் வலைதளத்தில் சிறு/குறு பங்குகளைக் கண்டறிவது பற்றி நிறைய எழுதியிருக்கிறார். வாரன் பஃபெட் போல, இவரும் வாங்கிச் சேர்ப்பதில் மன்னர். ஆனால், தன் எதிர்பார்ப்பு பூர்த்தியானதும் அவற்றை விற்று வெளியேறுவது இவர் ஸ்டைல்.

ஸ்மால்கேப் சிக்கல்கள்...

சிறு, குறு பங்குகளில் முதலீடு செய்வதில் உள்ள ஒரு சிரமம் என்ன வென்றால், அவை பற்றிய நல்ல செய்திகளும் சரி, கெட்ட செய்திகளும் சரி, எளிதில் வெளிவராது. இந்தப் பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளோ, அந்நிய நிதி நிறுவனங்களோ (Foreign Institutional Investors) வாங்குவதில்லை என்பதால், இவை பற்றி எழுத பத்திரிகைகளும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆகவே, இது இருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடும் கதைதான். ஆனால், இயான் கஸல் தன் ஒவ்வொரு முதலீட்டையும் பற்றிய விவரங்களைத் தன் விரல்நுனியில் வைத்திருப்பவர். சந்தையில் வெற்றி பெற அவர் தரும் சில டிப்ஸ்கள் இனி...

கோழியாக அல்ல, பருந்தாக இருங்கள்...

கோழியின்முன் நீங்கள் எதைப் போட்டாலும், தானியமோ, குப்பையோ அது என்ன, ஏதென்று பார்க்காமல் கொத்தித் தின்ன ஆரம்பித்துவிடும். நாள் முழுவதும் தின்றாலும் அதன் வயிறு நிரம்பாது. ஆனால், பருந்தின் கதையே வேறு. அதன் பார்வை மிகக் கூரியது; மனிதக் கண்களைவிட எட்டு மடங்கு சக்தி வாய்ந்தது. உதாரணமாக, ஒரு 10 மாடிக் கட்டடத்தின் மேல் நின்று ஒரு எறும்பை முழுவதுமாகப் பார்க்கக்கூடிய அளவு சக்தி படைத் தது. ஆகவே, அது தன் இரையின் வடிவம், அளவு, வேகத்திறன் போன்றவற்றைத் துல்லியமாக அளந்து, தகுந்த இரை கிடைத்தால் மட்டுமே செயலில் இறங்கும். அதேபோல, முதலீட்டாளரும் தன்முன் வரக்கூடிய வாய்ப்புகளில் 99.99 சதவிகிதத்தை ஒதுக்கத் தயங்கக் கூடாது. மீதி இருக்கும் அந்த 0.01% வாய்ப்பு ஒருவரின் செல்வ நிலையை உயர்த்தப் போதுமானது.

அடைகாக்கும் பொறுமை உண்டா..?

ஒரு பங்கின் பயணம் ஏற்ற, இறக்கங்கள் நிரம்பியது. எந்தவொரு பங்கும் நிலையாக மேலே ஏறியதாக சரித்திரம் இல்லை. பல வருடங்கள் பக்கவாட்டு நகர்விலிருந்த ஒரு பங்கு மூன்றே மாதங்களில் 100% ஏறிய கதைகள் உண்டு. (ரிலையன்ஸ் பங்கு ஜூன் 2020-ல் ஏறியதுபோல).

உங்களிடம் இருக்கும் பங்கு சிறந்ததாக இருக்கும்பட்சத்தில் அதைக் கைவிடவே கூடாது. பொதுவாக, முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் ஒரு பங்கு 40% ஏறியதும், அதை விற்றுவிட்டு வேறெங்காவது முதலீடு செய்யலாமா என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள். ஒன்பது மாதங்கள் காத்திருக்காமல் ஒரு குழந்தை உருவாவதில்லை. ஆனால், பொறுமை இல்லாதவர்கள் சந்தை ஏறியதும் வாங்குவதும், இறங்கியதும் விற்பது மாக வெற்று செயல் பாடுகளில் ஈடுபட்டு, பணத்தை மெல்ல மெல்ல இழக் கிறார்கள். இப்படிப் பட்டவர்கள் மல்ட்டி பேகர் பங்குகளைத் தேடி அலைவது வீண். ஏனெனில், அதை அடையாளம் கண்டு வாங்கினாலும், அடைகாக்கும் பொறுமை அவர்களிடம் இருப்ப தில்லை.

ஒரே தவணையில் அத்தனை பணம்...

டிவி, பத்திரிகைகள், நண்பர்கள், முதலீட்டு ஆலோசகர்கள் என்று யார் எவ்வளவு சிபாரிசு செய்தாலும் ஒரே முறையில் மொத்தப் பணத்தையும் ஒரு பங்கில் இறக்க வேண்டாம். அந்தப் பங்கு மேலே ஏறிவிட்டால் கைக்கெட்டாமல் பறந்துவிடுமோ என்ற அச்சம் தேவை இல்லை. பங்கு மேலேறும்போது குறைந்தது மூன்று தவணைகளாக முதலீடு செய்யலாம். சிலர் பங்கு இறங்க இறங்க வாங்குவார்கள். இது தவறு. பங்கு மேலேறும்போது வாங்குவதுதான் சரியான முறை.

உங்கள் தவற்றை ஒப்புக்கொள்ளுங்கள்...

ஒரு பங்கை வாங்கும்போதும், விற்கும்போதும் நாம் மற்றவர்களை விட முன்னதாகச் செயல்பட வேண்டியிருக்கும். மற்றவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்று கணித்து அதற்கேற்ப நம் செயல் பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டி யிருக்கும். அப்போது நம் யூகத்தில் சில தவறுகள் நேர்வது சகஜம். நாம் வாங்கிய பங்கு தகுதியற்ற பங்காக இருப்பின், அதன் விலை சரிய நேரிடும். இத்தகைய சந்தர்ப்பத்தில் சிலர் தங்கள் தவற்றை உணர்ந்து பங்கை விட்டு வெளியேறுவதற்கு பதில், மேலும் மேலும் வாங்கிக் குவிப்பதில் ஈடுபடுவதைப் பார்த்திருக்கிறோம். (யெஸ் பேங்க் முதலீட்டாளர்கள் பலர் செய்த தவறு இதுதான்).

இதற்குக் காரணம், அவர்களின் அதீத தன்னம்பிக்கை. தான் தேர்ந்தெடுத்து வாங்கிய பங்கு கண்டிப்பாகத் தவறாகப் போகாது என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. ஆனால், எப்பேர்ப்பட்ட முதலீட் டாளரையும் முட்டாளாக்கும் வல்லமை சந்தைக்கு உண்டு. நம் தவற்றை ஒப்புக்கொண்டு சந்தைக் கேற்ப செயல்படுவதே நன்று.

இயான் கஸல் போன்ற தலைசிறந்த முதலீட்டாளர் தன் 25 வருட அனுப வத்தில் கடைந்தெடுத்துத் தந்த அறிவுரைகள், மல்ட்டிபேகர்களை வலைவீசித் தேட மட்டுமல்லாமல் சந்தையில் வெற்றி பெறவும் நமக்குப் பேருதவியாக இருக்கும். ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் வேண்டும் என்கிற வர்கள் முயன்று பார்க்கலாமே!

பிட்ஸ்

சில ஆண்டு களுக்குமுன், பாலியியல் குற்றச் சாட்டுக்கு ஆளான தகவல் தொழில்நுட்ப நிபுணர் பியானேஷ் மூர்த்தி, சதர்லேண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.-ஆக மாறியிருக் கிறார்!