Published:Updated:

நீண்டகாலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு...

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

நீண்டகாலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு...

கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ங்குச் சந்தையில் முதலீடு செய்ய புதிதாக நுழையும் ஒவ்வொருவரும் `நீண்டகாலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும்’ என்ற உறுதியோடுதான் வருகிறார்கள். காலப்போக்கில் அவர்களின் முதலீட்டுக் காலம் குறித்த எண்ணம் மங்கத் தொடங்கி, இறுதியில் அந்த உறுதிமொழியே மறந்துவிடுகிறது. முதலீட்டு உலகில் இந்த பிரச்னை மிகவும் பொதுவானது. இதற்கு தர்க்கரீதியாகவும், மாறுபட்ட கோணத்திலும் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். எனினும், நடைமுறைக்குச் சாத்தியமான, செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைப் பார்க்கலாம்.

முதலீடு என்பது ஓரிடத்தில் தேங்கியிருக்கும் நிதியைச் செயல்படவைப்பது. சொத்து வாங்கி அதன் மூலம் வருமானம் அல்லது லாபம் பார்ப்பது, முதலீடு செய்து அதன் மூலம் வட்டி வருமானம் பெறுவது என்றெல்லாம் பலரும் பலவிதமாக இதை வரையறுக்கிறார்கள். ஆனால், எங்கே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதலீடு செய்யப்பட்ட நிதியின் மதிப்பு அதிகரிக்கிறதோ அதுவே முதலீடு. பின்வரும் வரிகள் முதலீடு என்பதைத் தெளிவுபடுத்தும்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

1. நிதியை வருமானம் ஈட்டுவதுபோல் செயல்படவைப்பது.

2. நீண்டகாலத்துக்கு நிதி பயன்படுத்தப்படுவது.

3. நிதிக்கு அதிக மதிப்பைச் சம்பாதித்துக் கொடுப்பது.

இவற்றை நாம் புரிந்துகொண்டால், நம் முதலீட்டில் பின்பற்றும் முரண்பாடுகளை ஒவ்வொரு நாளும் புரிந்துகொள்வோம். முதலீடு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தின் மதிப்பை உயர்த்துவதற்காகச் செய்யக்கூடியது. இதில் முக்கியமானது, பணத்தின் மதிப்பை உயர்த்த அதற்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

ஆம். ஒரு விதை செடியாகி, மரமாகி அறுவடைக்குத் தயாராகக் காலம்தான் முக்கியத் தேவையாக இருக்கிறது. இதை நாம் புரிந்துகொண்டால் நீண்டகால முதலீட்டையும் எளிதில் புரிந்துகொள்ளலாம். விவசாயத்தில் குறுகியகாலத்தில் காய்கறிகளை விளைவிக்க வேண்டும்மென்றாலும் குறைந்தது 25-30 நாள்களாவது காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில், அதிக பலன்களைத் தரும் பெரிய மரங்கள் வளர நீண்டகாலம் ஆகும்.

அந்த அளவுகோலை நாம் முதலீட்டில் வைத்துப் பார்த்தால், நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும்போது நல்ல வருமானம் கிடைப்பதற்கு முதலீட்டுக் காலத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம். பங்குச் சந்தையில் வர்த்தக நாளின் இடையே நடத்தப்படும் வர்த்தகம் முதலீட்டு வகையில் வராது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலீட்டில் முதலில் எழும் கேள்வி: `எந்தப் பங்கில், எவ்வளவு காலம் முதலீடு செய்வது?’ இந்தக் கேள்வியைச் சற்று மாற்றி, `நான் முதலீடு செய்யாவிட்டால் என்னவாகும்?’ என்று கேட்கலாம். நாம் உடற்பயிற்சி செய்வதற்கு ஒப்பானதுதான் பணத்தை முதலீடு செய்வதும். நம் உடலை நன்கு பராமரிப்பதற்கு உடற்பயிற்சி அவசியம். அதேபோல நிதியை நல்ல முறையில் பராமரிக்க முதலீடு அவசியம்.

நீண்டகாலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு...

காலம் மாற மாறப் பணத்தின் மதிப்பு குறைகிறது. எனவே, முதலீடு செய்யத் தவறினால், பணவீக்கம் நம் பணத்தின் மதிப்பைக் குறைத்துவிடும். முதலீடு செய்வதற்கான முதன்மையான காரணம், நாம் பணவீக்கத்தால் பாதிக்கப்படாமல் இருப்பது.

நீண்டகால முதலீட்டின் மூலம் பணத்தின் மதிப்பை அப்படியே காப்பாற்றுவதோடு, அதிலிருந்து கூடுதல் வருமானத்தையும் பெறலாம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம், காலம் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது. அது பணத்தின் மதிப்பைக் குறைக்கவும் செய்யும்; அதிகரிக்கவும் செய்யும். ஒரு குறிப்பிட்ட பங்கில் நாம் முதலீடு செய்யும் காலம், அந்தப் பங்கானது நம் பணத்தைத் திடமாகப் பராமரிக்கும் திறனைப் பொறுத்தது. நிதியை நல்ல முறையில் பராமரிக்க முடியாமல் போகும்போது, லாபம் தராதபோது முதலீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டியிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலீட்டுக் காலம் என்பது சில நாள்கள், சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் எனக் கால அளவீட்டில் வேறுபடக்கூடியதாக இருக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பங்குகளின் செயல்பாடுகளைச் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

`என் முதலீட்டுக்கான பங்கை எப்படித் தேர்ந்தெடுப்பது?’ என்பது இரண்டாவதாக எழும் கேள்வி. பொதுவாகவே, நமக்குத் தோன்றுவதைத்தான் செய்கிறோம். பெரும்பாலும் நம் முதலீட்டுச் சூழலுக்கேற்றபடி, தனிப்பட்ட விருப்பத்தின்படி தேர்வு செய்கிறோம். சில நேரங்களில் நிறுவனப் பங்குகள் தேர்வில் நம் கண்ணோட்டம் மாறுபடக்கூடும்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இப்படிச் செய்வதால், எந்த நிறுவனப் பங்குக்கு முன்னுரிமை கொடுப்பதென்று எழும் சவாலை எதிர்கொண்டு, சரியான பங்கில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு உண்டாகும். இது, விதையை தூவுவதற்கு முன்னதாக மண்ணைப் பரிசோதனை செய்வது போன்றது. அந்த இடத்தில் எது வளருமோ அதைத் தவிர வேறு செடி/மரம் வளராது. அதுபோலத்தான் பங்குகளும். நிறுவனங்கலையும் அவற்றின் பங்குச் செயல்திறனையும் மதிப்பீடு செய்வது மண் பரிசோதனை போன்றதே. அதைச் செய்யாமல் முதலீடு செய்வதில் இறங்கக் கூடாது.

ஒவ்வொரு காலாண்டிலும் பங்குகளின் திறன் மதிப்பீடு செய்வது, முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்!

ஒவ்வோர் அறுவடைக்குப் பின்னரும் மண் பரிசோதனை செய்வது மண்ணின் தன்மை எப்படி மாறியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள உதவும். அதேபோல ஒவ்வொரு காலாண்டிலும் பங்குகளின் திறனை மதிப்பீடு செய்வது முதலீட்டு முடிவுகளை நாம் எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும். அந்தப் பங்கு நன்கு செயல்படும்வரை நீண்டகாலத்துக்கு முதலீட்டைத் தொடருங்கள். இதைப் புரிந்துகொள்ள, சில நிறுவனப் பங்குகளில் சிறிய தொகையை முதலீடு செய்து பெறும் அனுபவம் உதவும்.

சுரேஷ் கிருஷ்ணாவுக்கு குவாலிட்டி ரத்னா விருது!

டி.வி.எஸ் என்றாலே தரம்தான். இந்தக் குழுமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நிறுவனமும் தரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்துவருகின்றன. அதைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் சுந்தரம் ஃபாசனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ‘குவாலிட்டி ரத்னா’ விருதைத் தந்து கெளரவித்திருக்கிறது சி.ஐ.ஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி. இந்த அமைப்பு தரும் இந்த விருதைப் பெறும் முதல் தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணாதான்.

நீண்டகாலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு...

‘‘தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழிலிலும் தரத்தைப் பின்பற்றுவதில் ஒரு ரோல்மாடலாகவே இருந்துவருகிறார். 1998-ம் ஆண்டிலேயே ஜப்பான் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளான்ட் மேனேஜ்மென்ட்டுடன் இணைந்து டி.பி.எம் கிளப்பை உருவாக்கி, அந்த அமைப்பின் முதல் தலைவராகவும் இருந்திருக்கிறார். அவருடைய தொடர்ச்சியான வழிகாட்டுதலால் ஜப்பானுக்கு அடுத்து அதிக அளவில் உறுப்பினர்கள்கொண்ட நாடாக இந்தியாவில் உள்ள டி.பி.எம் கிளப் இருக்கிறது’’ என்று குவாலிட்டி ரத்னா விருதை அளித்துப் பாராட்டியிருக்கிறது சி.ஐ.ஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி அமைப்பு. சுரேஷ் கிருஷ்ணாவைப்போல, ஒவ்வொரு தொழில் அமைப்பும் தரத்தில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும்!

- ஆகாஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism