Published:Updated:

சிறு முதலீட்டாளர்களை விஞ்சும் எஃப்.ஐ.ஐ-க்கள்! - அதிக வருமானம் ஈட்டுவது எப்படி?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்கு சார்ந்த ஃபண்டுகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்தால், வங்கி டெபாசிட்டைவிட அதிகம் வருமானம் கிடைக்கலாம்!

மியூச்சுவல் ஃபண்டில் பெரு நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்.ஐ.ஐ-க்கள்), பெரும் பணக்காரர்கள், சிறு முதலீட்டாளர்கள் என பலரும் முதலீடு செய்தாலும், எஃப்.ஐ.ஐ-க்கள் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். காரணம், அவர்கள் நீண்டகால முதலீட்டாளர்களாக இருப்பதே.
சிறு முதலீட்டாளர்களை விஞ்சும் எஃப்.ஐ.ஐ-க்கள்! - அதிக வருமானம் ஈட்டுவது எப்படி?

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்திருக்கும் சிறு முதலீட்டாளர்கள் 53.56 சதவிகிதம். இதுவே, எஃப்.ஐ.ஐ-க்களில் 83.07 சதவிகிதமாகவும் பெரு நிறுவனங்களில் 35.71 சதவிகிதமாகவும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 7.53 சதவிகிதமாகவும், பெரும் பணக்காரர்களில் 45.7 சதவிகிதமாகவும் உள்ளது. பொதுவாக, சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் சிறிய ஏற்ற இறக்கத்துக்கு எல்லாம் எதிர்வினை காட்டுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் சந்தையின் போக்கைக் கணித்து நிதானமாக முதலீடு செய்கிறார்கள். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டிலும் அவர்களின் முதலீட்டு அணுகுமுறை இப்படித்தான் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பங்குச் சந்தை அல்லது பங்கு சார்ந்ந்த ஃபண்ட் முதலீடு என்ற போது, குறைந்தபட்சம் ஐந்தாண்டு காலத்துக்குமேல் முதலீட்டைத் தொடர்ந்தால், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட வரிக்கு பிந்தைய நிலையில் ஓரிரு சதவிகிதம் கூடுதல் வருமானம் பெற முடியும் என்பதே சிறந்த முதலீட்டாளர்களின் அனுபவமாக இருக்கிறது.

காத்திருந்தால், நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்..!