Published:Updated:

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்

பிரீமியம் ஸ்டோரி

ங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் முதலாம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் முதலாம் காலாண்டு முடிவுகளை இனி பார்ப்போம்.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 80% அதிகரித்து, ரூ.2,260 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.1,257 கோடியாக இருந்தது. ஒரு முறை ஆதாயத்தைத் தவிர்த்தால் லாபம் 26% குறைந்து, ரூ.918 கோடியாக உள்ளது. எபிட்டா 9.11% குறைந்து, ரூ.1,941.85 கோடியாக உள்ளது. டிராக்டர் விற்பனை 15% குறைந்து, 82,013 டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 74.55% அதிகரித்து, ரூ.365.37 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.209.31 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் 13.6% அதிகரித்து, ரூ.5,832.11 கோடியாக உள்ளது. வாராக்கடனைக் குறைக்கும் நடவடிக்கை காரணமாக வாராக்கடன் தொகை ரூ.1,391 கோடியிலிருந்து ரூ.1,035 கோடியாகக் குறைந்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர்

ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் மருத்துவ நெட்வொர்க்கின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.67.8 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.70.9 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது. வருவாய் 9.2% அதிகரித்து, ரூ.1,138 கோடியாக உள்ளது. ஹாஸ்பிடல்ஸ் பிசினஸ் வருவாய் 11.3% அதிகரித்து ரூ.913 கோடியாகவும், உடற்பரிசோதனை பிசினஸ் வருவாய் 4.2% அதிகரித்து, ரூ.258.4 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.1,388 கோடியாகக் குறைந்துள்ளது. எபிட்டா லாப வரம்பு 12.5 சதவிகிதமாக உள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் 22% அதிகரித்து, ரூ.294 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.241 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருவாய் 11% அதிகரித்து, ரூ.1,768 கோடியாக உள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

எபிட்டா லாப வரம்பு 1.2 சதவிகிதம் அதிகரித்து, 22 சதவிகிதமாக உள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

ஆர்.இ.சி

ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி) நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 21.74% அதிகரித்து, ரூ.6,986.19 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.5,738.59 கோடியாக இருந்தது. நிகர லாபம் 2.22% அதிகரித்து ரூ.1,501.34 கோடியாக உள்ளது. எபிட்டா 16.31% அதிகரித்து, ரூ.6,676.66 கோடியாக உள்ளது. இ.பி.எஸ் 7.44 ரூபாயிலிருந்து 7.60 ரூபாயாக அதிகரித்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

கார்ப்பரேஷன் வங்கி

கார்ப்பரேஷன் வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 21.55% அதிகரித்து, ரூ.103.27 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.84.96 கோடியாக இருந்தது. மொத்த வாராக்கடன் விகிதம் 15.44 சதவிகிதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 5.69 சதவிகிதமாகவும் உள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

மொத்த வாராக்கடன் தொகை ரூ.20,913.07 கோடியாகவும், நிகர வாராக்கடன் தொகை ரூ.6,907.51 கோடியாகவும் குறைந்துள்ளது. வாராக்கடன் ஒதுக்கீடு ரூ.715.98 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ.1,298.67 கோடியாக உள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

இண்டியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ்

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 24% சரிவடைந்து, ரூ.802 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.1,055 கோடியாக இருந்தது. வருவாய் 12% குறைந்து, ரூ.1,522 கோடியாக உள்ளது. செயல்பாட்டு வருமானம் 12.7% குறைந்து ரூ.1,475 கோடியாக உள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம் 0.88 சதவிகிதத்திலிருந்து, 1.47 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதம் 0.69 சதவிகிதத்திலிருந்து 1.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வழங்கப்பட்டுள்ள கடன் தொகை 10% குறைந்து, 1.13 லட்சம் கோடியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் 6.5% அதிகரித்து, ரூ.244 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.229 கோடியாக இருந்தது. ஒருங்கிணைந்த வருவாய் 1% அதிகரித்து, ரூ.2,464 கோடியாக உள்ளது. எபிட்டா 2% அதிகரித்து, ரூ.861 கோடியாக உள்ளது. எரிபொருள் செலவு 1.66% குறைந்து, ரூ.1,366.43 கோடியாக உள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

ஐ.ஆர்.பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர்

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 5.92% குறைந்து, ரூ.879.23 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.934.57 கோடியாக இருந்தது. நிகர லாபம் 22.11% குறைந்து, ரூ.55.33 கோடியாக உள்ளது. எபிட்டா 7.83% குறைந்து, ரூ.145.81 கோடியாக உள்ளது. இ.பி.எஸ் 2.02 ரூபாயிலிருந்து, 1.57 ரூபாயாகக் குறைந்துள்ளது.

முக்கிய கம்பெனிகளின் முதலாம் காலாண்டு முடிவுகள்!

டைட்டன்

டைட்டன் நிறுவனத்தின் தனித்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் 6.17% அதிகரித்து, ரூ.370.73 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் தனித்த நிகர லாபம் ரூ.349.17 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் 14.72% அதிகரித்து, ரூ.4,995.64 கோடியாக உள்ளது. விற்பனை வருவாய் ரூ.4,885 கோடியாக அதிகரித்துள்ளது. நகை விற்பனை வருவாய் வளர்ச்சி 13.3% அதிகரித்து, ரூ.4,047 கோடியாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு