Published:Updated:

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

முதலாம் காலாண்டு முடிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
முதலாம் காலாண்டு முடிவுகள்!

ஆக்ஸிஸ் பேங்க் நிகர வட்டி வருமானம் 19.54% உயர்ந்து 6,985.31 கோடி ரூபாயாக இருக்கிறது.

டப்பு 2020-2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகள் இங்கே...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

டி.சி.எம் ஸ்ரீராம் (DCM shriram)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 1.17% உயர்ந்து 1,886.14 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 1,864.27 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 70.82% குறைந்து 62.48 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 214.15 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 50.27% குறைந்து 182.71 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 367.42 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 13.73 ரூபாயிலிருந்து 4.01 ரூபாயாகக் குறைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹிந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 20.01 %குறைந்து 3,989 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 4,987 கோடி ரூபாயாக இருந்தது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

நிகர லாபம் 23% குறைந்து 1,359 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 1,765 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 22.23% குறைந்து 2,260 கோடி ரூபாயாக இருக்கிறது.

இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 2,906.00 கோடி ரூபாயாக இருந்தது. ஜூன்2019-ல் 4.18 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் 2020, ஜூனில் 3.22 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

ஆக்ஸிஸ் பேங்க் (Axis bank)

முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 19.54% உயர்ந்து 6,985.31 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 5,843.65 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 18.82% குறைந்து 1,112.17 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 1,370.08 கோடி ரூபாயாக இருந்தது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 0.82% குறைந்து 5,844.40 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 5,892.76 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 5.29 ரூபாயிலிருந்து 3.94 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் (HUL)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 4.41 %உயர்ந்து, 10,560 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 10,114 கோடி ரூபாயாக இருந்தது.

நிகர லாபம் 7.18% உயர்ந்து 1,881 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 1,755 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 0.21% உயர்ந்து 2,800 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 2,794 கோடி ரூபாயாக இருந்தது. ஜூன் 2019-ல் 8.11 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் 2020 ஜூனில் 8.01 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 11.38% உயர்ந்து 5,900.63 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 5,297.78 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 22.69% குறைந்து 869.50 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 1,124.73 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 9.78% குறைந்து 3,245.72 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 3,597.70 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 19.49 ரூபாயிலிருந்து 14.49 ரூபாயாகக் குறைந்துள்ளது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

டாடா எல்க்ஸி (Tata Elxsi)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 10.72 %உயர்ந்து 400.49 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 361.71 கோடி ரூபாயாக இருந்தது.

நிகர லாபம் 41.15% உயர்ந்து 68.87 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 48.79 கோடி ரூபாயாக இருந்தது. எபிட்டா வருமானம் 29.53% உயர்ந்து 106.16 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 81.96 கோடி ரூபாயாக இருந்தது. 2019, ஜூனில் 7.83 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ், 2020, ஜூனில் 11.06 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் (SBI Life Insurance)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 2.49% குறைந்து 377.11 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 386.75 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 5.11% உயர்ந்து 390.89 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 371.90 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 2.6% உயர்ந்து 387.68 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 377.84 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 3.72 ரூபாயிலிருந்து 3.91 ரூபாயாக உயர்ந்துள்ளது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் (Hatsun Agro Products)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 10.11% குறைந்து 1,279.28 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 1,423.22 கோடி ரூபாயாக இருந்தது.

நிகர லாபம் 9.6% உயர்ந்து 56.11 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 51.19 கோடி ரூபாயாக இருந்தது. எபிட்டா வருமானம் 11.08% உயர்ந்து 190.40 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 171.41 கோடி ரூபாயாக இருந்தது. 2019 ஜூனில் 3.17 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் 2020, ஜூனில் 3.50 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

கிரைசில் (CRISIL)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 25.16% குறைந்து 214.19 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 286.21 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 49.5% உயர்ந்து 69.31 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 46.36 கோடி ரூபாயாக இருந்தது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 19.51% குறைந்து 60.82 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 75.56 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 6.42 ரூபாயிலிருந்து 9.56 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் (ICICI Prudential Life Insurance)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 51.04% உயர்ந்து 773.56 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 512.14 கோடி ரூபாயாக இருந்தது.

நிகர லாபம் 0.93% உயர்ந்து 287.59 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 284.94 கோடி ரூபாயாக இருந்தது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 8.43% உயர்ந்து 311.19 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 286.99 கோடி ரூபாயாக இருந்தது.

2019, ஜூனில் 1.98 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் 2020, ஜூனில் 2.00 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.