Published:Updated:

என்.எல்.சி இந்தியா... ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்!

காலாண்டு முடிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்!

ஜூன் காலாண்டில் ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை ரூ.49.2 கோடி!

டப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகள் சில...

ஃப்யூச்சர் லைஃப் ஸ்டைல் ஃபேஷன்ஸ் (Future Life style Fashions)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு, 352.95 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபமானது 24.54 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் குறைய முக்கிய காரணம் வருமானம் குறைந்திருப்பதாகும். இதன் மொத்த வருமானமானது 96.38 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,551.11 கோடி ரூபாயாக இருந்தது.

என்.எல்.சி இந்தியா... ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்.எல்.சி இந்தியா (NLC India)

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபமானது ஜூன் காலாண்டில் 21% உயர்ந்து 343.48 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஒருங்கிணைந்த நிகர லாபமானது 283.77 கோடி ரூபாயாக இருந்தது. இதன் ஒருங்கிணைந்த வருவாய் 3,065.80 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,330.69 கோடி ரூபாயாக இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் (Hinduja Global solutions )

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 21.7% உயர்ந்து, 49.2 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபமானது 40.4 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 1.5% உயர்ந்து, 1,235.8 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,218 கோடி ரூபாயாக இருந்தது. இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 8.7% உயர்ந்து காணப்படுகிறது.

என்.எல்.சி இந்தியா... ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்!

இன்ஃபி பீம் அவென்யூஸ் (Infi beam avenues)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 58.6% குறைந்து, 12 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபமானது 29 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் வருவாய் 44.6% குறைந்து, 103 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 186 கோடி ரூபாயாக இருந்தது.

என்.எல்.சி இந்தியா... ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்!

சத்பவ் இன்ஜினீயரிங் (Sadhbhav Engineering)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு 123.45 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 30.04 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மொத்த வருவாய் 456.43 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,342.60 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் மொத்தச் செலவு 577.04 கோடி ரூபாயாகக் குறைந்திருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,353.55 கோடி ரூபாயாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாடின் கிரெடிட் கேர் நெட்வொர்க் (Satin Creditcare Network )

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 13 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 41 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மொத்த வருமானம் 310.55 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 353.16 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானமானது ரூ.199 கோடியிலிருந்து 25 % குறைந்து 150 கோடியாக உள்ளது.

என்.எல்.சி இந்தியா... ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்!

இந்த நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பானது 14% உயர்ந்து 8,119 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 7,139 கோடி ரூபாயாக இருந்தது.

கோல் இந்தியா (Coal India)

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம், ஜூன் காலாண்டில் 55.1% குறைந்து 2,077.5 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் லாபமானது 4,630 கோடி ரூபாயாக இருந்தது. இதன் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருமானம் 25.9 சதவிகிதமாக சரிந்து 18,487 கோடி ரூபாயாக இருக்கிறது.