Published:Updated:

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

நான்காம் காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் காலாண்டு முடிவுகள்

மார்ச் காலாண்டில் சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு 834.22 கோடி ரூபாயாகும்!

ந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வெளியான சில முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் இங்கே...

சுஸ்லான் எனர்ஜி (Suzlon Energy)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு 834.22 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்த இழப்பு 294.64 கோடி ரூபாயாக இருந்தது. இதன் செயல்பாட்டு வருமானம் 2019-ம் ஆண்டின் மார்ச் காலாண்டில் 1,450.47 கோடி ரூபாயாக இருந்தது. இது 2020 மார்ச் காலாண்டில் ரூ.658.89 கோடி ரூபாயாக இருக்கிறது.

2019-20-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த நிகர இழப்பு 2,691.84 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த 2018-19-ம் நிதியாண்டில் 5,074.64 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல 2019-20-ம் நிதியாண்டில் செயல்பாட்டு வருமானம் 3,000.42 கோடி ரூபாயாக இருக்கிறது. இது முந்தைய நிதியாண்டில் 5,074.64 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்.பி.சி.சி (இந்தியா) (NBCC (India))

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 17.13% குறைந்து, 2,600.35 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,137.69 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 42.26% குறைந்து, 78.98 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 136.79 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 51.75% குறைந்து, 103.11 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 213.69 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 76 பைசாவிலிருந்து 44 பைசாவாக குறைந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

போடல் கெமிக்கல்ஸ் (Bodal Chemicals)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 7.03 சதவிகிதம் அதிகரித்து, 368.47 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 344.26 கோடி ரூபாயாக இருந்தது.

நிகர லாபம் 22% குறைந்து, 23.09 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 29.60 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 14.79% குறைந்து, 43.63 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 51.20 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ல் 2.40 ரூபாயாக இருந்த இந்த பங்கின் இ.பி.எஸ், மார்ச் 2020-ல் 2.21 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஹெச்.பி காட்டன் (HP Cotton)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவன நிகர விற்பனை 17.62% குறைந்து, 24.26 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 29.45 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 117.07% அதிகரித்து, 0.89 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.41 கோடி ரூபாயாக இருந்தது. எபிட்டா வருமானம் 19.44% அதிகரித்து, 2.58 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2.16 கோடி ரூபாயாக இருந்தது. 2019 மார்ச்சில் 1.07 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் 2020 மார்ச் காலாண்டில் 2.34 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஐ.எஃப்.பி இண்டஸ்ட்ரீஸ் (IFB Industries)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவன நிகர விற்பனை 21.62% குறைந்து, 485.66 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 619.65 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர இழப்பு 419.65% குறைந்து, 18.22 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.70 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 72.34% குறைந்து, 5.97 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 21.58 கோடி ரூபாயாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் (Indiabulls Housing Finance)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 29.92% குறைந்து, 2,950.04 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,209.53 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 86.38% குறைந்து, 137.06 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,006.15 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 42.04% குறைந்து, 2,248.08 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,878.65 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ல் இந்தப் பங்கின் இ.பி.எஸ் 23.54 ரூபாயாக இருந்தது. இது தற்போது 3.27 ரூபாயாகக் குறைந்துள்ளது.

எடெல்வைஸ் (Edelweiss)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 34.09% குறைந்து, 1,935.40 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,936.48 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர இழப்பு 1066.11% அதிகரித்து, 2,245.14 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 232.39 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 194.65% குறைந்து, 1,578.12 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,667.27 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

டைனமேட்டிக் டெக்னாலஜீஸ் (Dynamatic

Technologies)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 18.25% குறைந்து, 125.57 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 153.60 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர இழப்பு 966.43% அதிகரித்து, 61.17 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 7.06 கோடி ரூபாயாக இருந்தது. எபிட்டா வருமானம் 9.8% குறைந்து, 32.94 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 36.52 கோடி ரூபாயாக இருந்தது.

காமா ஹோல்டிங்ஸ் (Kama Holdings)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 7.98% குறைந்து, 1,869.35 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,031.45 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 3.33% அதிகரித்து, 94.18 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 91.14 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 9.84% குறைந்து, 362.62 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 402.19 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ல் இந்தப் பங்கின் இ.பி.எஸ் 296.06 ரூபாயாக இருந்தது. இது தற்போது 145.95 ரூபாயாகக் குறைந்துள்ளது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஸ்ரீ பஜ்ரங் (Shri Bajrang)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 38.23% அதிகரித்து, 75.67 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 54.74 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 281.16% அதிகரித்து, 0.22 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.12 கோடி ரூபாயாக இருந்தது. எபிட்டா வருமானம் 27.94% குறைந்து, 0.98 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.36 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ல் இந்தப் பங்கின் இ.பி.எஸ் 14 பைசாவாக இருந்தது. இது தற்போது 25 பைசாவாக அதிகரித்துள்ளது.