இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வெளியான சில முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் இங்கே....
சுதர்சன் கெமிக்கல் (Sudarshan Chemical)
மார்ச் காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 11.07% அதிகரித்து ரூ.449.12 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 404.36 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 5.77% அதிகரித்து 27.31 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 25.82 கோடி ரூபாயாக இருந்தது. எபிட்டா 20.99% குறைந்து 54.99 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 69.60 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ம் ஆண்டில் 3.70 ரூபாயாக இருந்த இந்த பங்கின் இ.பி.எஸ், 2020, மார்ச் மாதத்தில் 3.90 ரூபாயாக அதிகரித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் (Aegis Logistics)
கடந்த மார்ச் காலாண்டு நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 32.98% குறைந்து 1,241.65 ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,852.64 ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 44.72% குறைந்து 34.11 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 61.70 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா 5.36% அதிகரித்து 112.51 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 106.76 கோடி ரூபாயாக இருந்தது. 2019, மார்ச்சில் 2.11 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் 2020, மார்ச்சில் 1 ரூபாயாகக் குறைந்துள்ளது.
பிலிப்ஸ் கார்பன் பிளாக் (Phillips Carbon Black)
கடந்த மார்ச் காலாண்டு முடிவின்படி, இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 23.95% குறைந்து 700.38 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 920.99 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 2.91% அதிகரித்து 72.76 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 70.70 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா 6.08% குறைந்து 108.43 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 115.45 கோடி ரூபாயாக இருந்தது. 2019, மார்ச்சில் 4.05 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் கடந்த மார்ச் மாதத்தில் 4.23 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கம்புஏஜ் இன்ஃபோகாம் (Compuage Infocom)
மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 19.4% குறைந்து 1,043.41 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,294.51 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 76.43% அதிகரித்து 10.45 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.92 கோடி ரூபாயாக இருந்தது.
எபிட்டா 44.24% அதிகரித்து 32.31 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 22.40 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 91 பைசாவிலிருந்து 1.28 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்தியன் பேங்க் (Indian Bank)
கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 13.4% அதிகரித்து 1,999.30 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,763.11 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர இழப்பு 41.25% அதிகரித்து 267.20 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 189.18 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் 36.88% அதிகரித்து 1,703.33 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,244.42 கோடி ரூபாயாக இருந்தது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 11.51% அதிகரித்து 2,929.28 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,626.87 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர இழப்பு 18.56% குறைந்து 2,713.03 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3,331.45 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் 50.53% அதிகரித்து 2,654.65 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,763.57 கோடி ரூபாயாக இருந்தது.
மேன் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) ( Man Industries (India))
இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 151.54% அதிகரித்து 681.61 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 270.98 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 277.64% அதிகரித்து 12.50 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 3.31 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா 62.45% அதிகரித்து 47.42 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 29.19 கோடி ரூபாயாக இருந்தது.

பாலாஜி அமின்ஸ் (Balaji Amines)
கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 13.86% அதிகரித்து 258.03 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 226.62 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 16.48% அதிகரித்து 30.82 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 26.45 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா 18.85% அதிகரித்து 57.19 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 48.12 கோடி ரூபாயாக இருந்தது.

மார்ச் 2019-ல் 8.16 ரூபாயாக இருந்த இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 2020 மார்ச் மாதத்தில் 9.51 ரூபாயாக அதிகரித்துள்ளது.
யூ.எஃப்.ஓ மூவிஸ் இந்தியா (UFO Moviez India)
இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 42.74% குறைந்து 109.34 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 190.96 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 79.79% குறைந்து 6.78 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 33.54 கோடி ரூபாயாக இருந்தது. எபிட்டா 58.02% குறைந்து 27.52 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 65.56 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ல் 11.83 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் கடந்த மார்ச் மாதத்தில் 2.39 ரூபாயாகக் குறைந்துள்ளது.

பெர்ஜர் பெயின்ட்ஸ் இந்தியா (Berger Paints India)
கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 7.96% குறைந்து 1,354.84 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,472.09 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 7.26% குறைந்து 103.72 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 111.84 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா 1.38% குறைந்து 225.07 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 228.21 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ல் 1.15 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் கடந்த மார்ச் மாதத்தில் 1.06 ரூபாயாகக் குறைந்துள்ளது.