Published:Updated:

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

அமர ராஜா பேட்டரீஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 0.94% அதிகரித்து, ரூ.1,581.39 கோடியாக இருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

அமர ராஜா பேட்டரீஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 0.94% அதிகரித்து, ரூ.1,581.39 கோடியாக இருக்கிறது.

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்
ந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வெளியான முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள்....

இன்டர்குளோப் ஏவியேஷன்

இண்டிகோ விமான நிறுவனத்தை இயக்கும் இன்டர்குளோப் ஏவியேஷன், கொரோனா வைரஸ் லாக்டௌன் காரணமாக பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது. மார்ச் காலாண்டில் ரூ.870.80 கோடி இந்த நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்த நிறுவனம் ரூ.595.80 கோடி லாபம் ஈட்டியது. கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 5.3% அதிகரித்து ரூ.8,299.10 கோடியாக அதிகரித்திருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிறுவனம் 2019-20-ம் நிதியாண்டில் ரூ.233.70 கோடியை நிகர இழப்பாகப் பதிவு செய்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.157.20 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

பிரிட்டானியா

பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த மார்ச் காலாண்டில் வரிக் குறைப்பால் 26% அதிகரித்து ரூ.374.75 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.297.23 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 2.5% அதிகரித்து ரூ.2,867.70 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 4.1% அதிகரித்து ரூ.454.28 கோடியாக இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தாம்பூர் சுகர்ஸ்

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் சற்றுக் குறைந்து ரூ.104.07 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.108.82 கோடியாக இருந்தது.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,092.75 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.879.37 கோடியாக இருந்தது. 2019-20-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்து ரூ.215.62 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய 2018-19-ம் நிதியாண்டில் ரூ.250.92 கோடியாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

2019-20-ம் நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.3,556.21 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.2,910.71 கோடியாக இருந்தது.

எரிஸ் லைஃப்சயின்சஸ்

மார்ச் மாத காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 4.02% அதிகரித்து, ரூ.56.05 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.53.88 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ.248.56 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.214.82 கோடியாக இருந்தது.

2019-20-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.296.29 கோடியாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.291.14 கோடியாக இருந்தது. அதேபோல, 2019-20-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,074.05 கோடியாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.982.16 கோடியாக இருந்தது.

வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ்

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 35.08% குறைந்து ரூ.470.71 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.725.07 கோடியாக இருந்தது. நிகர லாபம் 206.77% அதிகரித்து ரூ.90.68 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.29.56 கோடியாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

எபிட்டா வருமானம் 0.82% அதிகரித்து ரூ.96.08 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.95.30 கோடியாக இருந்தது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 2 ரூபாயிலிருந்து 6.11 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

லெமன் ட்ரீ ஹோட்டல்

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 142% குறைந்து, ரூ.62.05 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.73.37 கோடியாக இருந்தது. நிகர லாபம் 79.73% குறைந்து ரூ.7.68 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.37.87 கோடியாக இருக்கிறது. எபிட்டா வருமானம் 18.2% குறைந்து ரூ.25.49 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.31.16 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 48 பைசாவிலிருந்து 10 பைசாவாகக் குறைந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.டி.பி.ஐ பேங்க்

இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் மார்ச் காலாண்டில் 46.14% அதிகரித்து ரூ.2,364.38 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.1,617.93 கோடியாக இருந்தது. நிகர லாபம் 103.37% அதிகரித்து 163.60 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 31.34% அதிகரித்து 1,932.38 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.1,417.57 கோடியாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங்

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 3.57% அதிகரித்து ரூ.1,009.25 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.974.42 கோடியாக இருந்தது. அதே நேரம், இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு 134.13% குறைந்து ரூ.50.68 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.148.47 கோடியாக இருந்தது. எபிட்டா வருமானம் 54.93% குறைந்து ரூ.207.65 கோடியாக இருக்கிறது.

இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.460.70 கோடியாக இருந்தது.

அமர ராஜா பேட்டரீஸ்

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 0.94% அதிகரித்து ரூ.1,581.39 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.1,566.73 கோடியாக இருந்தது. நிகர லாபம் 14.5% அதிகரித்து ரூ.136.65 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.119.34 கோடியாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

எபிட்டா வருமானம் 3.56% அதிகரித்து ரூ.257.26 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.248.42 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 6.99 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

எவெரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ்

மார்ச் காலாண்டில் இந்த நிறுவன நிகர விற்பனை 21.15% குறைந்து ரூ.289.67 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.367.35 கோடியாக இருந்தது. அதே நேரம், இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு 124.91% குறைந்து ரூ.3.66 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.14.69 கோடியாக இருந்தது.

எபிட்டா வருமானம் 92.96% குறைந்து ரூ.1.83 கோடியாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.26 கோடியாக இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism