Published:Updated:

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

நான்காம் காலாண்டு
முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காம் காலாண்டு முடிவுகள்

மார்ச் காலாண்டில் டிவிஸ் லேப் நிறுவனத்தின் நிகர விற்பனை 9.67% அதிகரித்து 1,389.71 கோடி ரூபாயாக இருக்கிறது!

ந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வெளியான சில முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் இங்கே....

டி.வி.எஸ் எலெக்ட்ரானிக்ஸ் (TVS Electronics)

கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 5.77% குறைந்து 53.40 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 56.67 கோடி ரூபாயாக இருந்தது.

மார்ச் காலாண்டில் நிகர இழப்பு 5.69 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் நிகர லாபம் 1.96 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 100.57% குறைந்து, 5 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 5.14 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குஜராத் காஸ் (Gujarat gas)

கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 39.79% அதிகரித்து 2,666.63 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில்1,907.55 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் 114.82% அதிகரித்து 250.46 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 116.59 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 63.3% அதிகரித்து 445.57 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 272.86 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் 1.69 ரூபாயிலிருந்து 3.64 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டிவிஸ் லேப் (Divis Labs)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவன நிகர விற்பனை 9.67% அதிகரித்து 1,389.71 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 1,267.13 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் 32.97% அதிகரித்து 388.23 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 291.97 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 13.98% அதிகரித்து 521.18 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 457.24 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் 11.00 ரூபாயிலிருந்து அதிகரித்து 14.62 ரூபாயாக இருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா! (SBI)

கடந்த மார்ச் காலாண்டில் இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 0.54% அதிகரித்து 25,483.04 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 25,347.22 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் 455.25% அதிகரித்து 6,909.95 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 1,244.47 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 2.38% குறைந்து 17,735.21 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 18,168.32 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வங்கியின் இ.பி.எஸ் 0.88 ரூபாயிலிருந்து அதிகரித்து 7.74 ரூபாயாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரீவ்ஸ் காட்டன் (Greaves cotton)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை கடந்த மார்ச் காலாண்டில் 28.55% குறைந்து 386.19 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 540.50 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் 98.32% குறைந்து 0.57 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 33.89 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு
முடிவுகள்
நான்காம் காலாண்டு முடிவுகள்

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 64.45% குறைந்து 26.83 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 75.47 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 1.39 ரூபாயிலிருந்து 0.02 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

எல் அண்டு டி (L & T)

கடந்த மார்ச் காலாண்டில், இந்த நிறுவன நிகர விற்பனை 2.18% அதிகரித்து 44,245.28 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 43,303.40 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் 6.47% குறைந்து 3,197.07 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 3,418.24 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 1.78% குறைந்து 7,717.15 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 7,856.76 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 24.37 ரூபாயிலிருந்து குறைந்து, 22.78 ரூபாயாக இருக்கிறது.

பி.வி.ஆர்! (PVR)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில், 13.87% குறைந்து 623.51 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 723.90 கோடி ரூபாயாக இருந்தது. நிகர இழப்பு 263.22% அதிகரித்து 75.62 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 46.33 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 26.49% அதிகரித்து 186.63 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 147.55 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

டைட்டன் (Titan)

கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவ னத்தின் நிகர விற்பனை 3.63% குறைந்து 4,711.50 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 4,888.77 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் 2.08% குறைந்து 346.25 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 353.59 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 29.59% அதிகரித்து 654.16 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 504.79 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 3.98 ரூபாயிலிருந்து 3.90 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் (Jindal stainless)

கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 10.68% குறைந்து 2,903.96 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 3,251.28 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 168.09% குறைந்து 21.98 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 32.28 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 18.97% குறைந்து 252.08 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 311.11 கோடி ரூபாயாக இருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் (Exide Industries)

மார்ச் காலாண்டில், இந்த நிறுவன நிகர விற்பனை 18.46% குறைந்து 3,474.68 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 4,261.53 கோடி ரூபாயாக இருக்கிறது.

இதன் நிகர லாபம் 22.24% குறைந்து 235.57 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 302.94 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 29.11% குறைந்து 368.22 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 519.42 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 3.56 ரூபாயிலிருந்து 2.92 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.