Published:Updated:

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

நான்காம் காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
நான்காம் காலாண்டு முடிவுகள்

ஹெச்.சி.எல் இன்ஃபோ நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 77.47% குறைந்து 227.71 கோடி ரூபாயாக இருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஹெச்.சி.எல் இன்ஃபோ நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 77.47% குறைந்து 227.71 கோடி ரூபாயாக இருக்கிறது.

Published:Updated:
நான்காம் காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
நான்காம் காலாண்டு முடிவுகள்
ந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வெளியான சில முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் இங்கே....

குமின்ஸ் இந்தியா (Cummins India)

கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9% அதிகரித்து, 170.24 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 156.31 கோடி ரூபாயாக இருந்தது. அதே சமயம் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 1,129.41 கோடி ரூபாயாகக் குறைந்திருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,408.98 கோடி ரூபாயாக இருந்தது.

2019-20-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 705.61 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய 2018-19-ம் நிதியாண்டில் 742.61 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 5,932.38 கோடி ரூபாயிலிருந்து 5,448.94 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெல்ஸ்பன் கார்ப் (Welspun Corp)

கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 147.14 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 149 கோடி ரூபாயை நிகர இழப்பாகப் பதிவு செய்திருக்கிறது. இந்தக் காலாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் 2,775.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,765.26 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல நிறுவனத்தின் செலவும் 2,551.89 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,838.88 கோடி ரூபாயாக இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர் (Fortis Healthcare)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனம் 41.24 கோடி ரூபாயை ஒருங்கிணைந்த நிகர இழப்பாகப் பதிவு செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 151.19 கோடி ரூபாய் நிகர லாபமாக இருந்தது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 1,12.92 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,184.15 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்
நான்காம் காலாண்டு முடிவுகள்

2019-2020-ம் நிதியாண்டின் நிகர லாபம் 91.49 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 223.71 கோடி ரூபாயாக இருந்தது. முழு நிதியாண்டின் செயல்பாட்டு வருமானம் 4,632.32 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2018-2019-ம் நிதியாண்டில் 4,469.36 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

இந்தரபிரஸ்தா கேஸ் (Indraprastha Gas Ltd (IGL)

கடந்த மார்ச் காலாண்டு முடிவின்படி, இந்த நிறுவன நிகர லாபம் 12% அதிகரித்து, 252.63 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 224.72 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல இந்த நிறுவனத்தின் விற்பனை வால்யூம் 567 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 564 கியூபிக் மீட்டராக இருந்தது. 2019-2020-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 13% அதிகரித்து 7,131 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த 2018-19-ம் நிதியாண்டில் 6,337 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல 2019-2020-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 44% அதிகரித்து 1,135 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த 2018-19-ம் நிதியாண்டில் 786 கோடி ரூபாயாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முத்தூட் ஃபைனான்ஸ் (Muthoot Finance Ltd (MFIN))

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 52.4% அதிகரித்து, 835.78 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 548.56 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல 2019-2020-ம் நிதியாண்டின் மொத்த நிகர லாபம் 51% அதிகரித்து 3,168.68 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த 2018-19-ம் நிதியாண்டில் 2,102.96 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்
நான்காம் காலாண்டு முடிவுகள்

2019-2020-ம் நிதியாண்டின் வட்டி வருமானம் 2,562.96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2018-19-ம் நிதியாண்டில் 2,017.81 கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல இந்த நிறுவனத்தின் வருமானமும் அதிகரித்து 9,683.98 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த 2018-19-ம் நிதியாண்டில் 7,594.43 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஜே.கே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் (JK Tyre & Ind)

கடந்த மார்ச் காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 27.36% குறைந்து 1,351.42 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,860.32 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் காலாண்டில் இந்த நிறுவனம் 8.13 கோடி ரூபாயை நிகர இழப்பாகப் பதிவு செய்திருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்த நிகர இழப்பு 25.84 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 16.56% குறைந்து 143.30 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 171.73 கோடி ரூபாயாக இருந்தது.

ஹெச்.சி.எல் இன்ஃபோ (HCL Info)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை கடந்த மார்ச் காலாண்டில் 77.47% குறைந்து 227.71 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,010.50 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் காலாண்டில் இந்த நிறுவனம் 70.94 கோடி ரூபாயை நிகர இழப்பாகப் பதிவு செய்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 43.90 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஹெச்.பி.சி.எல் (HPCL)

நான்காம் காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 2.62% குறைந்து 66,154.93 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 67,938.13 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 99.1% குறைந்து 26.80 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் எபிட்டா 105% குறைந்து, 282.50 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 18 பைசாவாக குறைந்திருக்கிறது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 19.49 ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்
நான்காம் காலாண்டு முடிவுகள்

ஷாப்பர்ஸ் ஸ்டாப் (Shoppers Stop)

மார்ச் காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 10.35% குறைந்து, 709.17 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 791.06 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் காலாண்டில் நிகர இழப்பு 132.78 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 11.45 கோடி நிகர லாபமாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா 28.79% அதிகரித்து, 82.94 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 64.40 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா (Bank of Maharashtra)

மார்ச் காலாண்டில், இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 2.26% அதிகரித்து, 1,022.50 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 999.93 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் 20.46% குறைந்து 57.57 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 72.38 கோடி ரூபாயாக இருந்தது. செயல்பாட்டு லாபம் 18.73% அதிகரித்து, 595.07 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 501.18 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 10 பைசாவாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டில் 13 பைசாவாக இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism