Published:Updated:

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்
ங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகிவருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் முடிவுகளை இங்கே பார்ப்போம்.

புளூ ஸ்டார்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 18.58% குறைந்து ரூ.1,299.36 கோடியாக இருக்கிறது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,595.84 கோடியாக இருந்தது. நிகர லாபம் 88.85% குறைந்து ரூ.8.90 கோடியாக உள்ளது. எபிட்டா 62.18% குறைந்து ரூ.43.68 கோடியாக உள்ளது. புளூ ஸ்டார் பங்கின் இ.பி.எஸ் 8.29 ரூபாயிலிருந்து 0.92 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிலையன்ஸ் பவர்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை, நான்காம் காலாண்டில் 13.39% அதிகரித்து ரூ.1,798.05 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,585.66 கோடியாக இருந்தது. நிகர இழப்பு 18.21% அதிகரித்து ரூ.4,206.38 கோடியாக உள்ளது. எபிட்டா 28.62% குறைந்து ரூ.537.07 கோடியாக உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

சொனட்டா சாஃப்ட்வேர்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 11.15% அதிகரித்து ரூ.928.68 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.835.55 கோடியாக இருந்தது. நிகர லாபம் 5.45% குறைந்து ரூ.61.79 கோடியாக உள்ளது. எபிட்டா 0.73% குறைந்து ரூ.95.21 கோடியாக உள்ளது. இ.பி.எஸ் ரூ.6.29-லிருந்து ரூ.5.95-ஆகக் குறைந்துள்ளது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஹேவல்ஸ் இந்தியா

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 19.51% குறைந்து ரூ.2,217.44 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2,754.77 கோடியாக இருந்தது. நிகர லாபம் 10.67% குறைந்து ரூ.177.73 கோடியாக உள்ளது. எபிட்டா 23.13% குறைந்து ரூ.265.23 கோடியாக உள்ளது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 3.18 ரூபாயிலிருந்து 2.84 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

ரிலையன்ஸ் கேப்பிட்டல்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 31.5% குறைந்து ரூ.3,780 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.5,518 கோடியாக இருந்தது. நிகர இழப்பு 6.52% குறைந்து ரூ.2,123 கோடியாக உள்ளது. எபிட்டா 11.68% குறைந்து ரூ.1,348 கோடியாக உள்ளது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஜே.கே.பேப்பர்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 8.83% குறைந்து ரூ.735.86 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.807.16 கோடியாக இருந்தது. நிகர லாபம் 17.43% குறைந்து ரூ.92.69 கோடியாக உள்ளது. எபிட்டா 13.5% குறைந்து ரூ.207.25 கோடியாக உள்ளது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 6.34 ரூபாயிலிருந்து 5.20 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

மஹிந்திரா ஹாலிடேஸ்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 2.83% குறைந்து ரூ.616.61 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.634.59 கோடியாக இருந்தது. நிகர இழப்பு 456.58% அதிகரித்து ரூ.164.57 கோடியாக உள்ளது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

பிரமல் என்டர்பிரைசஸ்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 9.2% குறைந்து ரூ.3,341 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ3,679.67 கோடியாக இருந்தது. நிகர இழப்பு 472.53% அதிகரித்து ரூ.1,701.93 கோடியாக உள்ளது. எபிட்டா 93% குறைந்து ரூ.141.96 கோடியாக உள்ளது.

கோத்ரேஜ் பிராப்பர்டீஸ்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 10.44% அதிகரித்து ரூ.1,163.05 கோடியாக இருக்கிறது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,053.09 கோடியாக இருந்தது. நிகர லாபம் 35.48% குறைந்து ரூ.101.08 கோடியாக உள்ளது. எபிட்டா 11.49% குறைந்து ரூ.280.57 கோடியாக உள்ளது. கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் பங்கின் இ.பி.எஸ் 6.83 ரூபாயிலிருந்து 4.01 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை, நான்காம் காலாண்டில் ரூ.1,798.05 கோடியாக உள்ளது.
நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 9.64% குறைந்து ரூ.3,625.86 கோடியாக இருக்கிறது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.4,012.65 கோடியாக இருந்தது. நிகர இழப்பு 95.34% குறைந்து ரூ.153.84 கோடியாக இருக்கிறது.

ஸ்ரீ சிமென்ட்ஸ்

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 2.13% குறைந்து, ரூ.3,415.14 கோடியாக இருக்கிறது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.3,489.35 கோடியாக இருந்தது. நிகர லாபம் 57.6% அதிகரித்து, ரூ.535.93 கோடியாக உள்ளது. எபிட்டா 22.58% அதிகரித்து ரூ.1,154.90 கோடியாக இருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர வட்டி வருமானம் (NII), நான்காம் காலாண்டில் 17.09% அதிகரித்து ரூ.10,715.59 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.9151.68 கோடியாக இருந்தது. நிகர லாபம் 68.76% அதிகரித்து ரூ.1,975.12 கோடியாக உள்ளது. எபிட்டா 15.12% அதிகரித்து ரூ.8,542.42 கோடியாக உள்ளது.