Published:Updated:

ஆதாயத்தை அள்ளிக் கொடுத்த குளோபல் ஃபண்டுகள்! - 2020-ல் முதலீட்டு லாபம்...

குளோபல் ஃபண்டு
பிரீமியம் ஸ்டோரி
News
குளோபல் ஃபண்டு

OPPERTUNITY

கொரோனா வைரஸ் பரவல் 2020–ம் ஆண்டு இறுதியில் கணிசமான அளவில் குறைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குச் சந்தைகள் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன.

மேலும், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளும் நல்ல வருமானம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் குளோபல் மியூச்சுவல் ஃபண்டுகள் கணிசமான வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன.

குளோபல் ஃபண்டு
குளோபல் ஃபண்டு

பி.ஜி.ஐ.எம் இந்தியா குளோபல் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டிஸ் ஃபண்ட் (ஓராண்டு வருமானம் 76%), எடெல்வைஸ் கிரேட்டர் சீனா ஈக்விட்டி ஆஃப்-ஷோர் ஃபண்ட் (58%), மோதிலால் ஆஸ்வால் நாஸ்டாக் 100 எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்(இ.டி.எஃப்) (54%), ஃப்ராங்க்ளின் இந்தியா ஃபீடர் ஃப்ராங்க்ளின் யூ.எஸ் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (47%), டி.எஸ்.பி வேர்ல்டு கோல்டு ஃபண்ட் (42%) கோட்டக் குளோபல் எமெர்ஜிங் மார்க்கெட் ஃபண்ட் (30%), ஏ.பி.எஸ்.எல் குளோபல் எமெர்ஜிங் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (26%) ஆகிய ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. ஒருவர் தன் முதலீட்டுக் கலவையில் சர்வதேச நிறுவனப் பங்குகள் மற்றும் குளோபல் ஈக்விட்டி ஃபண்டுகளில் சுமார் 10-15% முதலீடு செய்வதன் மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதுடன் லாபத்தையும் அதிகரிக்க முடியும்.