Published:Updated:

தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம்! - இன்னும் விலை உயருமா?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

சர்வதேசச் சந்தையில் 2020-ம் ஆண்டில் தங்கத்தின் விலை 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம்! - இன்னும் விலை உயருமா?

சர்வதேசச் சந்தையில் 2020-ம் ஆண்டில் தங்கத்தின் விலை 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்
கோவிட் 19-ன் தாக்கங்கள் பங்குச் சந்தையைக் கீழ்நோக்கி நகர்த்தச் செய்யும் அதே வேளையில், தங்கத்தின் விலையில் அதற்கு நேர்மாறாக மேல்நோக்கி நகர்த்தவும் செய்கின்றன. ஏழு வருட உச்சத்தில் சர்வதேச விலையானது வர்த்தகமாகிவருகிறது.

இன்றைய நிலையில், உலகப் பொருளாதாரம் என்பது நிச்சயமற்றதன்மை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது. உலகையே அச்சுறுத்திவரும் கோவிட்-19 வைரஸ் 150 நாடுகளின் உற்பத்தி, போக்குவரத்து போன்ற முக்கியப் பொருளாதார இயக்கங்களைத் தடை செய்திருக்கிறது.

தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம்! - இன்னும் விலை உயருமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கத்தின் விலையேற்றம் என்பது தேவையின் காரணமாக அல்லாமல், மற்ற காரணிகள் அதற்கு அணிவகுத்து நிற்கின்றன. பொதுவாக, விற்பனைஅதிகரித்தால் தேவை அதிகரிக்கும். ஆனால், இந்த முறை அப்படியில்லாமல் மத்திய வங்கிகளின் முதலீடுகள், கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு போன்றவற்றால் விலையேற்றம் காணப்படுகிறது. இதற்கான காரணங்களை விரிவாகப் பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாதுகாப்பான முதலீடு என்ற மனநிலை!

2020-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே சர்வதேச நிகழ்வுகள் அனைத்தும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்விதமாக இல்லாமல், எதிர்மறையாகவே அரங்கேறிவருகின்றன.

தங்கம்
தங்கம்

ஒருபக்கம் கொரோனா குறித்த செய்திகள், மறுபக்கம் கச்சா எண்ணெய் விலைச்சரிவு என இந்த இரண்டுமே உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளை மிகவும் பாதித்துவருகின்றன. கச்சா எண்ணெய் விலைச்சரிவு, அமெரிக்க ஷேல் எண்ணெய் நிறுவனங்களுக்கு உற்பத்தி விலையைவிட சர்வதேசச் சந்தை விலை இறக்கம் காணும்போது, நிதிச்சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால், பெருமளவில் வேலை இழப்புகள் அதிகரித்திருக்கின்றன.

எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சம் சந்தைகளில் ‘ரிஸ்க் அஸெட்’ என்று சொல்லக்கூடிய பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் அனைத்திலும் காணப்படுகிறது. இதனால் ஏற்படும் பணவீக்கத்தை எதிர்கொள்ளக்கூடிய முதலீடாகத் தங்கம் இருப்பதால், அதன் மீதான சர்வதேச விலை அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

அமெரிக்க-சீன வர்த்தக உறவில் மீண்டும் உரசல்கள்

இரு நாடுகளுக்கும் இடையே, கடந்த இரண்டு வருடங்களாக நீடித்துவரும் வர்த்தகப் போர், கோவிட் 19-க்குப் பிறகு மீண்டும் தொடங்கியிருக்கிறது. அமெரிக்க அதிபர், வர்த்தகப் போர் தொடர்பான சீனாவின் முதற்கட்ட நடவடிக்கைகளில் தனக்கு திருப்தி இல்லை என்று அறிவித்திருப்பது சந்தைகளைக் கவலையடையச் செய்திருக்கிறது. `இப்படிப்பட்ட அறிவிப்புகளால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம்’ என்ற அச்சம் மறுபடியும் தலைதூக்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்காவின் தளர்வான நிதிக்கொள்கைகள்

அமெரிக்கப் பொருளாதாரம் சரிவடையாமல் இருப்பதற்கு, அமெரிக்க ஃபெடரல் அதிகப்படியான, முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அமெரிக்கா மட்டுமல்லாமல், பல்வேறு வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு இப்படிப்பட்ட வழிகளைக் கையாள்வது தங்கம் விலை உயர்வதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. `அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இரண்டாம் காலாண்டில் 30 சதவிகிதமாக அதிகரிக்கும்’ எனவும், ஆண்டு முழுவதற்குமான ஜி.டி.பி-யில் 30% வரை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் ஃபெடரலின் தலைமை அறிவித்திருப்பது தங்கத்துக்கு சாதகமான செய்தி. வட்டி விதங்களை மிகவும் குறைவாக வைத்திருப்பது, பொருளாதாரத்தின் வளர்ச்சியில் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அமெரிக்காவின் ஏப்ரல் மாத சில்லறை விற்பனை -16% மற்றும் தொழில் வளர்ச்சிக் குறியீடு -11.2% என்று எதிர்மறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, அமெரிக்கப் பொருளாதாரம் கோவிட்-19-ன் தாக்கத்தைப் பொருளாதார புள்ளிவிவரங்கள் வாயிலாகப் பிரதிபலிக்கிறது எனவும், எதிர்கால வளர்ச்சி குறித்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது எனவும் சந்தைகளால் உணரப்படுகிறது.

தங்கம்
தங்கம்

கோல்டு இ.டி.எஃப் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு

உலக அளவில் கோல்டு இ.டி.எஃப் முதலீடுகள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. தங்கத்தை அடிப்படை முதலீடாகக் கொண்டிருக்கும் எஸ்.பி.டி.ஆர் கோல்டு டிரஸ்ட் ஹோல்டிங்ஸ் மே 15-ம் தேதி முடிவடைந்த காலத்தில் 1,114 மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தங்கம் சார்ந்த இ.டி.எஃப்-களின் முதலீடு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுவருவது, பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருப்பது போன்றவை காரணமாகத் தங்கத்தில் முதலீடுகள் அதிகம் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.

தங்க உற்பத்தி குறைவு

2015-ம் ஆண்டுக்குப் பிறகு, தங்க உற்பத்தி குறைந்து காணப்படுகிறது. உலக தங்கக் குழுமத்தின் அறிக்கையின்படி, நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் வருடாந்தர அடிப்படையில் மூன்று சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பொது முடக்கத்தின் காரணமாகச் சுரங்கப்பணிகள் தடைப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பதும் விலையேற்றத்துக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம்! - இன்னும் விலை உயருமா?

இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராகச் சரிவு

இந்தியாவின் தங்க இறக்குமதிச் செலவினங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 2020-ம் ஆண்டில் மட்டும் 4% குறைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 71–ஆக இருந்தது, தற்போது 75-ஆக இறக்கமடைந்திருக்கிறது. சர்வதேசச் சந்தை விலையும் அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடையும்போது, உள்நாட்டில் தங்கம் ஏற்றத்தைக் காண்கிறது.

மேலும் விலை உயர வாய்ப்பிருக்கிறதா?

சர்வதேசச் சந்தையில் 2020-ம் ஆண்டில் தங்கத்தின் விலை 16% அதிகரித்துள்ளது. அதே சமயம் டாலருக்கு நிகராக இறக்கமடைந்ததன் காரணமாக உள்நாட்டில், 22 சதவிகிதமாக ஏற்றம் பெற்றுள்ளது. கோவிட்-19 நோய்க்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டால் விலை சரிவதற்கு வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால், அதன் தாக்கம், உலகப் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இது தங்கத்தின் விலையை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்ற கருத்துக்கு வலுசேர்க்கவே செய்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism