Published:Updated:

தங்கம், பங்குச் சந்தை தந்த வருமானம்... எது அதிகம்?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம்

GOLD - ஓர் ஒப்பீட்டுப் பார்வை...

இப்போது 10 கிராம் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.50,000-ஆக உள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 50000 புள்ளிகளை சமீபத்தில் தாண்டியது. கடந்த சுமார் 20 ஆண்டுகளில் தங்கம் மற்றும் சென்செக்ஸ் தந்த வருமானத்தை அனலிஸ்ட்டுகள் அலசி ஆராய்ந்ததில், கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 12 மடங்கு அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகள் (டிவிடெண்ட் மற்றும் போனஸ் பங்குகள் சேர்த்து) சுமார் 17 மடங்கு லாபம் தந்திருக்கிறது.

வரிக்கு பிந்தைய நிலையில் பார்த்தாலும் பங்குச் சந்தைதான் அதிக வருமானம் தந்திருக்கிறது. நீண்டகாலத்தில் தங்கத்துக்கு பணவீக்க விகித சரிக் கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்ட வேண்டும். இதுவே பங்குச் சந்தை எனில், நீண்டகால ஆதாயத்தில் ரூ.1 லட்சத்துக்கு வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட வருமானத்துக்கு 10% வட்டி கட்டினால் போதும்.

தங்கம், பங்குச் சந்தை தந்த வருமானம்... எது அதிகம்?

இப்படிச் சொல்வதால், இனி தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம். எல்லோருமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள் என்று சொல்ல வரவில்லை. அஸெட் அலொகேஷன் விதிமுறைகள்படி, உங்கள் மொத்த முதலீட்டில் சுமார் 10-15% தங்கத்தில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை!