இந்தியப் பங்குச் சந்தைகளின் வரலாற்றில் முதன்முறையாக பி.எஸ்.இ சென்செக்ஸ் 40000 புள்ளிகளுக்கும் மேலாகச் சென்றிருக்கிறது. வரலாற்றுரீதியாகப் பார்த்தால், இது மிகப்பெரிய கொண்டாட்டத்துக்குரியது. ஆனால், முதலீட்டாளர்களிடமோ அதற்கான உற்சாகமே இல்லை!

சென்செக்ஸ் புள்ளிகள் புதியதோர் உச்சத்தை எட்டியிருந்தும்கூட, முதலீட்டாளர்களின் பங்கு முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இனி இந்த நிலைதான் எப்போதும் நிலவும் என்பது அண்மைப் பங்குச் சந்தை உயர்வில் தெளிவாகத் தெரியவந்திருக்கிறது. பின்வரும் அம்சங்களை ஆய்வு செய்தாலே இதை நன்றாகப் புரிந்துகொள்ளலாம்:

1. சென்செக்ஸ் புள்ளிகள் 40000-க்கு மேல் சென்றது எதனால்... இதற்கான காரணங்கள் என்னென்ன... முதலீட்டாளர்களின் பங்கு முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஏன் முன்னேற்றம் ஏற்படவில்லை?

2. அடுத்து வரும் நாள்களுக்கான பொருளாதாரப் பார்வை மற்றும் துறைசார்ந்த செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

40000 புள்ளிகள் உயர்வு!

இதை ஓர் ஒப்பீட்டுடன் பார்க்கலாம். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் 29,029 அடி உயரம்கொண்டது. இதுவரை இந்தச் சிகரத்தின் உச்சிவரை சுமார் 2,700-3,100 பேர் மட்டுமே வெற்றிகரமாக ஏறியிருக்கிறார்கள். அதுபோல, சென்செக்ஸ் புள்ளிகள் 40000 என்ற அளவை எட்டியிருப்பது, உயரமான சிகரத்தில் ஏறுவதற்குச் சமம். மலை ஏறுவதென்பது நம் தினசரி பயன்பாடாக இல்லையென்பதால் சிகரத்தை எட்டுவதற்கான சிரமங்கள் பற்றிய புரிந்துணர்வு நமக்கு அதிகம் இல்லை. ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நாம் எல்லோருமே ஈடுபடக்கூடிய ஒன்று என்பதால், சந்தைக்கேற்ப பணத்தைப் பெருக்குவது குறித்து அறிந்துகொள்ள வேண்டியது நம் அனைவருக்குமே நல்லது.

ஒருவகையில் மலையேறுவதும், இண்டெக்ஸ் உயர்வதும் பல வகைகளில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இரண்டுக்குமான சில தொடர்புகளைப் புரிந்துகொண்டால் சுவையான, முக்கியமான சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்.

தயார்ப்படுத்துதல்

இது மிக முக்கியமான முதல் படி. ஒரு சவாலை எதிர்கொள்ளும் மனநிலையும் உடல்நிலையும் நமக்கு வேண்டும். அதிலிருக்கும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வும், அந்தச் சாதனை எப்படிப் பட்டது என்ற புரிந்துணர்வுடன்கூடிய மனநிலையும் வேண்டும். நாம் நிகழ்த்தப்போகும் சாதனைதான் அதை நோக்கி நம்மைத் தயார்ப்படுத்தும். ஆக, சாதனையை நோக்கித் தன்னைத் தயார்ப் படுத்திக்கொள்வதுதான் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளருக்குத் தேவைப்படும் முதல்படி.

ஒழுங்கும் பயிற்சியும்

சாதிக்கத் தயாரான பிறகு ஒழுங்கும் பயிற்சியும்தான் அடுத்த படி. மலை ஏறுவதற்கு தொடர்ச்சியான உடற்பயிற்சி தேவை. அத்துடன் சகிப்புத்தன்மை, சுவாசிக்கும்திறனை மேம்படுத்துவது, சுமைதூக்கியபடி ஏறுவதற்கான பயிற்சி, எந்தச் சூழலிலும் உயிர்வாழும்திறனை வளர்த்துக்கொள்ளுதல், கைவசமிருக்கும் குறிப்பிட்ட பொருள்களைக்கொண்டே எதிர்வரும் நெருக்கடிகளைக் கையாளும் மனோதிடம் போன்ற திறமைகளை வளர்த்துக்கொள்ள முழுமையான ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மலை ஏறுவதற்கான பயிற்சியை மலை ஏறுபவர்கள் ஆண்டுக் கணக்கில் எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் சின்ன சின்ன மலைகளில் மலையேற்றப் பயிற்சி பெற்றால்தான், பிற்பாடு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான திறன் கிடைக்கும்.

முதலீடு என்பதும் இது போன்றதுதான். சந்தை சிறிய ஏற்றங்களை எட்டும்போதெல்லாம் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பாக அதை மாற்றுவதற்கு நம் திறமையையும் ஒழுங்கையும் வளர்த்துக்கொள்ளும் பயிற்சி பெற வேண்டும். இந்தப் பயிற்சி, புதிய உச்சங்களை சந்தை எட்டும்போது பெரிய லாபம் பெற உதவியாக இருக்கும். இழப்பு ஏற்படும் சூழலில் வெளியேறுவது, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது போன்றவை பங்குச் சந்தை உச்சத்தைத் தொடும்போதெல்லாம் வழிகாட்டியாக இருந்து கைகொடுக்கும்.

எதிர்பாராத சவால்களையும் ஏற்ற இறக்கங்களையும் எதிர்கொள்ளும் திறன்

எவரெஸ்ட்டை விடுங்கள், எந்த மலைப்பிரதேசத்துக்குச் சென்றாலும் அங்கிருக்கும் பருவநிலையில் எளிதில் கணிக்க முடியாத, எதிர்பாராத மாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும் போதே பெருமழை பெய்யும் சூழல் ஏற்படலாம்; இதமான வானிலை பனிமூட்டமாக மாறலாம்; காரணம் என்ன என்று அறிய முடியாமல், மலைமுகடுகளிலிருக்கும் மேகமூட்டமான பருவநிலை மாறலாம்.

இவையெல்லாம் நிகழ்வதற்கான சாத்தியம் மலைப் பகுதிகளில் அதிகம். இதேபோன்ற நிலை பங்குச் சந்தையிலும் உண்டு. அவநம்பிக்கையான சூழலிலிருந்து நம்பிக்கை தரும் சூழலுக்கு மாறுவது; வலுவான ஏற்றப்போக்கிலிருந்து திடீரென சரிவான போக்குக்கு மாறுவது... இவையெல்லாம் சந்தையில் சகஜம். இவற்றுக்கான காரணங்களை ஆராய்வதற்காகக் காத்துக்கொண்டிருந்தால் மேலும் பாதகமான சூழலுக்கு மாற நேரலாம்.

நாம் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமென்பதை மலையேற்றம் கற்றுத் தருகிறது. திடீர் நெருக்கடியில் இருந்து தற்காத்துக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவதற்கான படிப்பினையையும் கற்றுத் தருகிறது. இந்த மனநிலைதான் சந்தையில் செயல்படுவதற்கும் தேவைப்படுகிறது. திடீர் அபாயங்களைக் (Risks) கையாள்வதற்கும், சந்தையின் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஏற்ற இறக்கச் சூழல்களில் தற்காத்துக்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஏற்ற இறக்கச் சூழலிலும் எப்படி தற்காத்துக்கொண்டு சமாளிக்கிறோம் என்பதுதான் நம் பலத்தை நமக்கே உணர்த்தும் செயல். மிகச் சிலர் மட்டுமே உச்சத்தை எட்டுவதற்கும், செல்லும் வழியிலேயே பலர் தோல்வி அடைவதற்குமான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

தற்காப்பு உபகரணங்கள்

மலையேறுபவர்கள் ஒரு பையைச் சுமந்து செல்வதுபோல, பல முதலீட்டாளர்கள் சுமைகளைச் சுமந்தபடியிருப்பார்கள். அந்தப் பையில் தற்காப்புக்கான உபகரணங்கள் இருக்கும். ஆனால், முதலீட்டாளர்களோ கடந்த காலத்து மோசமான நினைவுகளை மட்டும் சுமையாகச் சுமக்கிறார்கள். இது நம் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும்.

ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர், நாம் நமது பயணங்களில் சுமந்து செல்வதுபோல பல சூட்கேஸ்களுடன் ஏறினால் எப்படியிருக்கும்..? ஏறத் தொடங்குவதற்கு முன்னரே மலையேற்றம் முடிவுக்கு வந்துவிடும். சரி, ஒரு முதலீட்டாளரின் தற்காப்புக் கருவிகளுக்கான பையில் எவையெல்லாம் இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

இழப்பு ஏற்படும் சூழலில் வெளியேறும் திறன், பனிமலையில் குத்திநிற்கும் கோடரியைப்போல, நங்கூரமிட்டிருக்கும் திறன், இழப்புகளின்போது முதலுதவி செய்வதற்கான பயிற்சி, தவறான பாதையில் முதலீடு செய்து திசைமாறித் தொலைந்தவர்களுக்கு, சரியான திசையைக் காட்டும் திசைமானியாக வழிகாட்டுவது போன்ற திறன்கள்தான் தற்காப்புக் கருவிகளாக உடன் இருக்க வேண்டும்.

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு சந்தையின் ஏற்றத்தில் பயணம் செய்யத் தெரிந்திருப்பதுபோல, சந்தையின் இறக்கத்திலும் பயணம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். வெற்றிகரமான முதலீட்டாளராகச் சந்தையில் செயல்பட, இந்த இரண்டுமே மிக முக்கியம்.

மலையேறுபவர்களுக்குக் கூடுதலாக ஒரு முக்கியமான திறன் இருக்க வேண்டும். மலை ஏறுவதைப்போலவே மலையிலிருந்து இறங்கும் திறமையும் வேண்டும். இரண்டுமே தேவையான வெவ்வேறு திறமைகள்; உங்களுக்கு மலையேறத் தெரிந்து, கீழே இறங்கத் தெரியாவிட்டால் உச்சியிலேயே நிற்க வேண்டியதுதான்.

இதேபோல, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு சந்தையின் ஏற்றத்தில் பயணம் செய்யத் தெரிந்திருப்பதுபோல, சந்தையின் இறக்கத்திலும் பாதுகாப்பாகப் பயணம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். வெற்றிகரமான முதலீட்டாளராகச் சந்தையில் செயல்பட, இந்த இரண்டுமே மிகவும் முக்கியம்.

இதைப் புரிந்துகொள்ள சென்செக்ஸ் ஏற்றத்துக்கான காரணங்களைப் பார்க்கலாம்.

கார்ப்பரேட் வரிக் குறைப்பு, கடனுக்கான வட்டி குறைப்பு, இந்தியாவை முதலீட்டுக்குச் சாதகமான இடமாகச் சித்திரித்தது, பிசினஸ் செய்வதற்கான வழிமுறைகளை எளிமைப் படுத்தியது போன்ற அனைத்தும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வழிவகுத்தன.

இதனால் சந்தையின் மூலதனம் உயர்ந்தது. மார்ச் - செப்டம்பர் இடைப்பட்ட காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறுபவர்களாக இருந்தார்கள். அக்டோபர் மாதத்தில் சந்தையின் எதிர்பார்ப்பு சாதகமான பிறகு, அவர்கள் திரும்பி வந்து ரூ.12,000 கோடிக்கும் மேலாக முதலீடு செய்யத் தொடங்க, அது இப்போதும் தொடர்கிறது.

கவனிக்க வேண்டிய துறைகள், பங்குகள்

சில வாரங்களுக்கு முன்னர் வரை உலக அளவில் முதலீட்டாளர்கள் மிகவும் அச்சுறுத்தலான சந்தைச்சூழலைச் சமாளிக்கத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வாராக்கடன் கவலைகளால் சந்தையில் இறக்கமான நிலை நிலவியது. உலக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அவற்றின் பாண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்குப் பணத்தைத் திரும்பக் கொடுப்பதில் சிக்கல் போன்ற பங்குச் சந்தைகளை நெருக்கடியின் விளிம்புக்குக் கொண்டு செல்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டன.

சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் இதுபோன்ற பிரச்னைகள் எழுந்ததால், அந்த நாடுகளின் பொருளாதாரம் அந்தந்தத் துறைகளில் வீழ்ச்சியடைந்தது. ஒரு துறை என்றில்லாமல், ஆட்டோமொபைல், நுகர்வோர், நிதிச் சேவை எனப் பல துறைகளும் இந்தப் பாதிப்பை எதிர்கொண்டன. ஐ.டி துறையில் ஆட்குறைப்பு நடந்தது.

பார்மா, ஐ.டி பங்குகள் முதலாம் காலாண்டிலும் நல்ல வருமானத்தைக் காட்டியிருக்கின்றன. மற்ற பல துறைகள் முதலாம் காலாண்டில் நல்ல வருமானத்தைக் காட்டினாலும் தற்போது வருமான இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

இவையனைத்தும் முதலீட்டாளர்களுக்கு எதில் முதலீடு செய்வது என்ற குழப்பமான மனநிலையை விதைத்தன. எந்தப் பங்கு முதலீட்டுக்குப் பாதுகாப்பானது என்று தெரிந்துகொள்வதே கடினமாக இருந்தது.

இதற்குப் பதிலளிக்க வெளியாகியிருக்கும் இரண்டாவது காலாண்டு முடிவுகளின் தரத்தை மதிப்பீடு செய்வதுதான் சரியானதாக இருக்கும். பார்மா, ஐ.டி மற்றும் நிதித்துறைப் பங்குகள் இழந்த மதிப்பைச் சரிக்கட்டி மீண்டுவந்து நல்ல வருமானத்தைக் காட்டியிருக்கின்றன.

அதேபோல, பார்மா மற்றும் ஐ.டி நிறுவனப் பங்குகள் முதலாம் காலாண்டிலும் நல்ல வருமானத்தைக் காட்டியிருக்கின்றன. மற்ற பல துறைகள் முதலாம் காலாண்டில் நல்ல வருமானத்தைக் காட்டினாலும் தற்போது வருமான இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

இனி என்ன நடக்கும்?

இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

துறை சார்ந்த நிலைப்பாடுகள் மாறக்கூடும். இவற்றுக்கு எந்த நிலையான நிலைப்பாடும் இருக்காது. மாற்றுவழிகளைக் கருத்தில் கொள்வதைத் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்தாக வேண்டும். மந்தமான சந்தைச்சூழல்கூட பார்மா போன்ற குறைந்த பீட்டா அளவுள்ள துறைக்கு முன்னுரிமை தரச் செய்கிறது.

பாதுகாப்பு குறைவான ஆட்டோமொபைல் போன்ற துறைகள் பின்தங்கியிருக்கின்றன. இந்த நிலை மாறக்கூடும். அந்த மாற்றத்தை ஏற்க நாம் தயாராக வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் பார்மா, மிட்கேப் ஐ.டி பங்குகள், ஃபைனான்ஸ், வங்கித் துறை, சிமென்ட் மற்றும் கட்டுமானத்துறை சார்ந்த பங்குகளைத் தேர்வு செய்யலாம். எஸ்.பி.ஐ., பந்தன் பேங்க், டி.சி.பி., டாடா கெமிக்கல்ஸ், எல் அண்ட் டி, வெல்ஸ்பன் கார்ப், எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ், ஹெச்.சி.எல் டெக், டெக் மஹிந்திரா, எல்.டி.டி.எஸ், சின்ஜின் (Syngene), கிரானுலெஸ் இந்தியா, அலெம்பிக் பார்மா, ஸ்ரைட்ஸ்... உள்ளிட்ட சில பங்குகளில் முதலீடு செய்வது குறித்து சிந்திக்கலாம்.

வருங்காலத்தில் இந்தப் பங்குகளின் மூன்றாம் காலாண்டு முடிவுகளையும் நாம் பரிசீலிக்க வேண்டும். அதைக்கொண்டுதான் மேலும் அவற்றை வைத்திருக்க வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதை முடிவெடுக்க வேண்டும்.

மலைச்சிகரங்களில் சீதோஷ்ண நிலை மாறிக் கொண்டேயிருக்கும். அதேபோல, சந்தையின் சூழலுக்கேற்ப நம் முடிவிலும் மாற்றம் வர வேண்டும். பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும், சந்தை வரலாற்று உச்சத்தில் உள்ளது. இந்த முரண்பாட்டுக்குள் நாம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த முரண்பாடு இரு வழிகளிலும் செயல்படக்கூடும் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். தயாராக இருங்கள். சந்தை உச்சத்துக்கு ஏறும்போது நம் திறனை வெளிப்படுத்துவதற்கான திறவுகோல் இதுதான்!