Published:Updated:

இரண்டாம் காலாண்டு டிவிஸ் லேப் ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!
முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

குஜராத் காஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 1.87% உயர்ந்து, 2559.91 கோடி ரூபாயாக இருக்கிறது!

பிரீமியம் ஸ்டோரி
செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. முக்கிய நிறுவனங்கள் சிலவற்றின் முடிவுகள் இங்கே...

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (Bharath Electronics)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 16.26% உயர்ந்து, ரூ3,195.24 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,748.32 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 16.04% உயர்ந்து, ரூ.399.01 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.343.85 கோடியாக இருந்தது.

இரண்டாம் காலாண்டு டிவிஸ் லேப் ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 16.87% உயர்ந்து, ரூ.654.77 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.560.25 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 1.42 ரூபாயிலிருந்து 1.64 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஆர்.இ.சி (REC)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனையானது 17.82% உயர்ந்து, ரூ.8,810 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 7,477.56 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 66.14% உயர்ந்து, ரூ. 2,197.14 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,322.47 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 24.45% உயர்ந்து, ரூ.8,195.60 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 6,585.20 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 6.70 ரூபாயிலிருந்து 11.14 ரூபாயாக உயர்ந்துள்ளது.

எஃப்.டி.சி (FDC)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 8.8% உயர்ந்து, ரூ.375.54 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.345.17 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 45.38% உயர்ந்து, ரூ.91.12 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.62.68 கோடியாக இருந்தது.

இரண்டாம் காலாண்டு டிவிஸ் லேப் ரிசல்ட் எப்படி? - முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 29.32% உயர்ந்து, ரூ. 127.92 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.98.92 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 3.64 ரூபாயிலிருந்து 5.33 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டிவிஸ் லேபரட்டரீஸ் (Divi’s Laboratories)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 45.63% உயர்ந்து, ரூ.519.59 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.356.78 கோடியாக இருந்தது.

இதன் ஒருங்கிணைந்த வருமானம் ரூ.1,762.94 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,492.60 கோடியாக இருந்தது.

பெர்ஜர் பெயின்ட்ஸ் (Berger Paints)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 9.01% உயர்ந்து, ரூ.1,742.55 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,598.58 கோடியாக இருந்தது.

இதன் நிகர லாபம் 13.31% உயர்ந்து, ரூ. 220.94 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.194.98 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 34.3% உயர்ந்து, ரூ. 358.39 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.266.85 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 2.01 ரூபாயிலிருந்து 2.28 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டால்மியா பாரத் (Dalmia Bharath)

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை செப்டம்பர் காலாண்டில் 7.78% உயர்ந்து, ரூ. 2,410 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2236 கோடியாக இருந்தது.

இதன் நிகர லாபமானது 759.26% உயர்ந்து, ரூ.232 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 27 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 43.08% உயர்ந்து, ரூ. 744 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 520 கோடியாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 1.40 ரூபாயிலிருந்து 12.24 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்தியன் ஹோட்டல் கம்பெனி (Indian Hotel Company)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 72.4% குறைந்து, ரூ.165.21 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.598.51 கோடியாக இருந்தது. இதன் நிகர இழப்பானது, ரூ.141.59 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.118.94 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 125.48% குறைந்து, 37.64 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.147.74 கோடியாக இருந்தது.

கன்டய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Container Corporation of India)

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை செப்டம்பர் காலாண்டில் 14.03% குறைந்து, ரூ. 1,509.30 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,755.61 கோடியாக இருந்தது.

இதன் நிகர லாபம் 155.62% உயர்ந்து, ரூ.184.62 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.331.95 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 20.19% குறைந்து, ரூ. 380.63 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 476.91 கோடியாக இருந்தது.

குஜராத் காஸ் (Gujarat Gas)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 1.87% உயர்ந்து, ரூ.2,559.91 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,512.91 கோடியாக இருந்தது.

இதன் நிகர லாபம் 8.04% குறைந்து ரூ. 475.48 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் ரூ.517.03 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 91.14% உயர்ந்து, ரூ. 753.81 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.394.38 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 7.51 ரூபாயிலிருந்து, 6.91 ரூபாயாகக் குறைந் துள்ளது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (United Spirits)

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை, செப்டம்பர் காலாண்டில் 6.55% குறைந்து, ரூ. 2,145.90 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 2,296.20 கோடியாக இருந்தது.

இதன் நிகர லாபமானது 42.83% குறைந்து, ரூ. 128.40 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 224.60 கோடியாக இருந்தது. எபிட்டா வருமானம் 34.2% குறைந்து, ரூ. 282.50 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 429.30 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 3.09 ரூபாயிலிருந்து, 1.76 ரூபாயாகக் குறைந்துளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு