Published:Updated:

ஏற்றத்துக்குத் திரும்பிய சந்தை..! - இனி எப்படி இருக்கும்..?

சந்தை
பிரீமியம் ஸ்டோரி
சந்தை

ஊரடங்கு நிலையிலிருந்து தளர்வுகள் ஏற்படுத்தப்படுவது சந்தைக்கு ஒரு சாதகமான காரணி!

ஏற்றத்துக்குத் திரும்பிய சந்தை..! - இனி எப்படி இருக்கும்..?

ஊரடங்கு நிலையிலிருந்து தளர்வுகள் ஏற்படுத்தப்படுவது சந்தைக்கு ஒரு சாதகமான காரணி!

Published:Updated:
சந்தை
பிரீமியம் ஸ்டோரி
சந்தை
பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு போன்றவற்றால் இந்தியப் பங்குச் சந்தை தொடர் இறக்கத்தில் இருந்தது. இப்போது இறக்கத்திலிருந்து மீண்டு காளையின் போக்குக்குத் திரும்பியிருக்கிறது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, நிஃப்டி 10000 என்ற நிலையைக் கடந்து, கடந்த வியாழக்கிழமை அன்று வர்த்தக முடிவில் 10029 புள்ளிகளாக முடிவடைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் சந்தோஷப் பெருமூச்சுவிட்டனர். `இந்த நிலை தொடருமா...’ எனப் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

சந்தை
சந்தை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘மார்ச் 24 முதல் இப்போது வரை பங்குச் சந்தையின் போக்கு நிச்சயமற்றதாக இருந்தாலும், கடந்த 70 நாள்களில் நிஃப்டி குறியீடு 7511-லிருந்து 10160-ஆக முன்னேறியிருக்கிறது. இது இப்போது வரலாறு என்றாலும், பெரும்பாலான முதலீட்டாளர்களின் மனதிலுள்ள கேள்வி, `இந்த ஏற்றம் மேலும் நீடிக்குமா...’ என்பதுதான். இதற்கு, சந்தை ஏற்றத்துக்கு உதவும் காரணிகளையும், அவை சந்தையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

சந்தை தொடர்ந்து மேலே செல்ல வேண்டுமெனில், நான்கு முக்கியமான நிகழ்வுகள் நடக்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. நிறுவன முதலீட்டாளர்களின் செயல்பாடு

2020, ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒவ்வொரு மாதமும் விற்றுவந்த அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐ-கள்), மே மாதத்தில் வாங்கத் தொடங்கினார்கள். இதே போல்தான் உள்நாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்களான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் போக்கும் முதலீடு செய்வதாக இருக்கிறது.

சந்தை
சந்தை

இந்த நிகர முதலீட்டு நடவடிக்கைகள், இந்தியப் பங்குச் சந்தைகளில் குறுகியகால ஏற்றத்துக்கான சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறியீடுகள் பாசிட்டிவ் சென்டிமென்ட்டில் இயங்கவும் இது ஆதரவாக உள்ளது. நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ‘வாங்க’ (Buy) என்ற எண்ணம் இருக்கும் வரை இந்த ஏற்றம் நீடிக்கும் எனலாம்.

2. துறைரீதியான மதிப்பீடு, நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகள்!

இது காலாண்டு நிதிநிலை முடிவுகளின் காலம். மேலும், சந்தைப் பொருளாதாரம் இனி அநேகமாக `கோவிட்-க்கு முன்’, `கோவிட்-க்கு பின்’ என இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்படும். நாம் தீவிர ஊரடங்கு நிலையிலிருந்து இப்போது வெளியேறுவதால், சந்தையின் முன்னணி நிறுவனப் பங்குகள் அல்லது முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்த பங்குகளின் போர்ட்ஃபோலியோவின் எதிர்பார்ப்பில் மறுசீரமைப்பு ஏற்படுத்துகிறது.நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகளும் மறுமதிப்பீடும் இணைந்து இந்தியச் சந்தை மிதமாக இருப்பதை உறுதி செய்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3. தொழில்நுட்பப் பார்வை

சம விகிதாசாரக் குறியீடு ஆய்வின்படி (Equal weighted index study), நிஃப்டி குறியீடானது கடந்த 16 ஆண்டுகளில் (2004-2020 முதல்) அதன் சப்போர்ட் லைனைத் தொட்டு அல்லது அதன் அருகே சென்று மீண்டும் உயர்ந்திருக்கிறது. 2004, 2009–ம் ஆண்டுகளிலும் மற்றும் சமீபத்திய 7511 நிலையிலும் நிஃப்டி சப்போர்ட் லைனைத் தொட்டு மீண்டு வந்திருக்கிறது. எனவே, இது சந்தையின் ரெக்கவரி போக்கையே குறிக்கிறது. மேலும், இது சந்தைகளின் அதிகபட்ச இறக்கத்தைக் (Bottom) கண்டுபிடிக்கும் வசதியை வழங்குகிறது.

4. ஊரடங்கு நிலையில் மாற்றம்

ஊரடங்கு நிலையிலிருந்து தளர்வுகள் ஏற்படுத்தப்படுவது ஒரு சாதகமான காரணி. எதிர்பார்ப்புதான் சந்தையின் இயக்கத்தை உந்துகிறது. பொருளாதாரச் செயல்பாடு நம்பிக்கையளிப்பது, போக்குவரத்து, தொழில்கள் இயக்கத் தொடங்குவது, பொதுமக்களின் இயக்கம் இயல்புநிலைக்கு திரும்புவதன் விளைவாக நுகர்வு மற்றும் செலவினங்கள் அதிகரிப்பது ஆகியவை பங்குச் சந்தை குறியீட்டுப் புள்ளிகளை அதிகரிக்கச் செய்து, பங்கின் விலையில் ஏற்றத்தை ஏற்படுத்தும். நிஃப்டி புள்ளிகள் 12430-லிருந்து 7511 (சுமார் 4900 புள்ளிகள்) வரை இறக்கம் கண்டு, மீண்டும் ஏற்றம் கண்டிருக்கிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

தற்போது நிஃப்டி 54% மீண்டுவந்திருக்கிறது. தொழில்நுட்பரீதியாக சந்தை வலுவான நிலையில் இருப்பதையே இது காட்டுகிறது. நிஃப்டி 10500-10865-ஐ கடந்தவுடன் இந்த ஏற்றம் இன்னும் சாதகமாக மாறலாம்.

கவனிக்க வேண்டிய பாதகமான விஷயங்கள்

கோல்ட்மேன் சாக்ஸ் `இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (ஜி.டி.பி) எதிர்பாராதவிதமாக மிகவும் குறையும்’ என்ற முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூடீஸ் சமீபத்தில் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து, தர மதிப்பீடு செய்திருக்கிறது. இதே போன்ற நிலைப்பாட்டில்தான் ஃபிட்ச் மற்றும் எஸ் அண்ட் பி தர மதிப்பீடுகளும் இருக்கின்றன.

ஏற்றத்துக்குத் திரும்பிய சந்தை..! - இனி எப்படி இருக்கும்..?

வங்கிகளின் மீதான அழுத்தம் அதிகரித்தல், சீர்திருத்தங்களை பலவீனமாக நடைமுறைப் படுத்துதல், அரசாங்கத்தின் நிதி நிலையில் சரிவு மற்றும் நீண்டகாலத்துக்கு ஒப்பீட்டளவில் குறைந்த பொருளாதார வளர்ச்சி (சமீபத்திய ஐ.ஐ.பி வளர்ச்சி மைனஸ் 16.7%) போன்றவை சந்தை தொடர்ந்து மேலே ஏறுமா என்பதில் கவலையைப் பதிவு செய்திருக்கின்றன.

பணப்புழக்கம் பங்குச் சந்தையின் திசையை நிர்ணயிக்கிறது. பங்குச் சந்தைக்குப் புதிய முதலீடுகள் தொடரும் வரை முக்கியக் குறியீடுகள் அதன் தற்போதைய பாதையை நிச்சயமாக நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் இயற்கைப் பேரழிவுகள், புவி-அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறைவு ஆகியவை பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவது குறித்த கவலைகளை நாம் காணலாம். ரிஸ்க் குறைவாக இருப்பதால், சந்தைகள் ஒரு பெரிய பணப்புழக்கப் பாய்ச்சலுக்கு காத்திருக்கிறது. ஆனால், வைரஸ் தொற்றுநோயின் இரண்டாம் அலை நம்மீது வீசும்போது இது திடீரென தலைகீழாக மாறக்கூடும்.

இன்று நம் வாழ்க்கை சமூக விலகல் மூலம் எச்சரிக்கையாக இருப்பதுபோல, பங்குச் சந்தையின் இந்த அலையை கவனமாகவும் எச்சரிக்கையுடனும் அணுகி, பயணத்தை மேற்கொண்டால் நம்மால் நிச்சயம் லாபம் பார்க்க முடியும் என்பதில் சந்தேகமில்லை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism