இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடுகளில் ஈடுபடுவது, கடந்தகாலத்தைவிட மிகச் சுலபமானதாக மாறிவிட்டது என்பது உண்மை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த மாற்றம் சாத்தியமாகியிருக்கிறது. அதே வேளையில், பங்குச் சந்தைகளில் இன்னும் பல சிக்கல்கள் தொடர்ந்து இருந்துவருவதும் வருந்தத்தக்கது.

இந்தத் தொழிலில், `நாணயம்’ என்பது ஒரு தாரகமந்திரமாக இருக்க வேண்டும். ஆனால், அண்மைக்கால நிகழ்வுகளைப் பார்த்தால், நிலைமை வேறுவிதமாக இருக்கிறது என்பதே நிஜம். பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் விதிமீறல்களும் ஏமாற்று வேலைகளும் அதிகரித்துவருவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் அமைப்பான செபியின் தீவிர கண்காணிப்பு இருந்தும் விதிமீறல்களும் ஏமாற்று வேலைகளும் நடந்துவருகின்றன. இந்தச் செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் பெரும்பாலும் அதிக ரிஸ்க் உள்ள வர்த்தகங்களில், முக்கியமாக டெரிவேட்டிவ் (Derivative) வர்த்தகத்தில் ஈடுபடுவதும், அதில் ஏற்படும் இழப்புகளைச் சரிகட்ட, தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் இதர முதலீட்டாளர்களின் கணக்குகளில் கைவைப்பதும் வாடிக்கையாகிவருகிறது.

`நஷ்டஈடு வழங்குதல்’ போன்ற தீர்வுகள் இருந்தாலும், மோசடிகள் நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்!

நிறுவனங்களின் பேராசைதான் இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். நேர்மையற்ற, ஏமாற்று வேலைகளைச் செய்யும் நிறுவனங்களால் அதிகம் பாதிக்கப்படுவது நீண்டகால முதலீட்டாளர்களே. பல முதலீட்டாளர்கள் தங்கள் டீமேட் கணக்கிலிருக்கும் பங்குகளை வர்த்தகம் செய்யாமல் வைத்திருப்பதால், அது போன்ற கணக்குகள் குறிவைக்கப்படுகின்றன. இந்த மோசடிகளுக்கு உடனடியாகத் தீர்வு கிடைப்பதில்லை என்பது மற்றுமொரு குற்றசாட்டாக வைக்கப்படுகிறது.

இது போன்ற சூழலில் முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

முதலீட்டாளர்கள் எப்போதுமே தங்களுடைய கணக்குகள்மீது ஒரு கண்காணிப்பை வைத்திருக்க வேண்டும். நீண்டகாலப் பங்குகளை வாங்கினாலும், தொடர் கண்காணிப்பு அவசியம். மேலும், ஏதாவது சந்தேகமான பரிவர்த்தனை நிகழ்ந்தால் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விசாரிக்க வேண்டும். உரிய வகையில் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படியே முறைகேடுகள் நடந்துவிட்டால் உடனடியாக செபியிடம் முறையிட வேண்டும்.

புகார் கொடுப்பதுடன் நின்றுவிடாமல், தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இன்றைய அவசரச் சூழலில், மற்றவர்களின் நேரத்தையும் கணக்கில்கொண்டு நடத்த வேண்டிய இது போன்ற போராட்டங்கள் சற்று கடினமானதாகத்தான் இருக்கும். என்றாலும், நம்முடைய பணத்துக்காக நாம் அதைச் செய்துதான் ஆக வேண்டும். `செபி, இது போன்ற மோசடி நிறுவனங்கள்மீது கடுமையான, துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற குரல் இப்போதெல்லாம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. `முக்கியமாக செபி, ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளுக்கு அழுத்தம் கொடுத்து, மோசடி நிறுவனங்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்க வேண்டும்’ என்ற குரல் ஒலித்துவருகிறது.

முதலீட்டாளர்களின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்டிருக்கும், `முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி’யின் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், `உரிய வகையில், குறித்த நேரத்தில் அவை வழங்கப்படுவதில்லை’ என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அந்த வழிமுறை சீர்செய்யப்பட்டால் முதலீட்டாளர்களுக்குத் தீர்வுகள் கிடைப்பது எளிதாக இருக்கும். `நஷ்டஈடு வழங்குதல்’ போன்ற தீர்வுகள் இருந்தாலும், இது போன்ற மோசடிகள் நடக்காதவண்ணம் மேலும் பல தடுப்பு நடவடிக்கைகளை செபி செயல்படுத்த வேண்டும். நிறுவனங்கள் மோசடிகளில் ஈடுபட்டால், அவற்றை உடனடியாகத் தடை செய்து, வர்த்தகம் செய்யாதபடி முடக்க வேண்டும்.

`முதலீட்டாளர்களுக்குப் பங்கு வர்த்தகத்தில் நம்பகத்தன்மை குறைந்துவிட்டால், துறையே ஆட்டம் காண நேரிடும்’ என்பதைக் கடந்தகால படிப்பினைகள் உணர்த்துகின்றன. கவனத்தில் கொள்வோம்!

கார்வியில் நடந்தது என்ன?

கார்வி நிறுவனத்தின் ஆவணங்களை என்.எஸ்.இ ஆய்வு செய்து, முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் கார்வி நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு செபி தடை விதித்துள்ளது. மேலும், கார்வி நிறுவனம் பவர் ஆஃப் அட்டார்னி அடிப்படையில் கொடுக்கும் பங்கு வர்த்தக ஆணைகளை பங்குச் சந்தைகள் ஏற்றுக்கொள்ளவும் தடை விதித்திருக்கிறது. கார்வி நிறுவனத்தில் டீமேட் வைத்திருந்தவர்களின் பங்குகளை, அவர்களுக்கு தெரியாமல் கார்வி நிறுவனத்தின் சுயலாபத்துக்காக முறைகேடாகப் பயன்படுத்தியிருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் கார்வி குழும நிறுவனத்துக்குத் திருப்பி விடப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.2,000 கோடி அளவில் மோசடி நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.