Published:Updated:

பங்குகளைத் தேர்வு செய்யும் சூட்சுமங்கள்! - வீழ்ச்சியில் கவனிக்க வேண்டியவை

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ஒரு நிறுவனப் பங்கின் விலை 90% இறங்கியிருக்கிறது என்பதற்காக அந்தப் பங்கில் முதலீடு செய்யக் கூடாது!

பங்குகளைத் தேர்வு செய்யும் சூட்சுமங்கள்! - வீழ்ச்சியில் கவனிக்க வேண்டியவை

ஒரு நிறுவனப் பங்கின் விலை 90% இறங்கியிருக்கிறது என்பதற்காக அந்தப் பங்கில் முதலீடு செய்யக் கூடாது!

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை
லக மற்றும் இந்தியப் பங்குச் சந்தைகள் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தொடர்ந்து இறங்கிவருகின்றன.

முன்னணி நிறுவனப் பங்குகளின் விலைகூட 30%, 40% என இறக்கம் கண்டிருக்கிறது. இந்த நிலையில், பங்குச் சந்தைகளின் இறக்கம் தொடர்பாக நாணயம் விகடன் இதழுக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார் ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகர்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து இறங்கக் காரணங்கள் என்னென்ன?

“உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் காணப்படுகிறது. கூடவே, இந்தியப் பொருளாதாரமும் மந்தநிலையில் உள்ளது. இப்போது கொரோனா வைரஸ் தாக்குதலால், நம் முக்கிய நிறுவனங்களின் பங்குகளின் விலைகூட 30%, 40% வீழ்ச்சிகண்டிருக்கிறது. இது வலியை ஏற்படுத்தக்கூடியதுதான். நிலைமை எப்போது மாறும் என்றோ, சந்தை இறக்கம் எங்கே போய் நிற்கும், எந்தத் துறை, எந்த நிறுவனப் பங்கு எந்த அளவுக்கு இறங்கும் என்றோ சொல்ல முடியாது. இதை, `பங்குச் சந்தை சுனாமி, சூறாவளி’ என்றுகூடச் சொல்லலாம்.

ஒவ்வொரு நாட்டின் பங்குச் சந்தைக்கும் ஒரு முதலீட்டுச் சுழற்சி (சைக்கிளிங்) இருக்கிறது. இந்தச் சுழற்சி, சுமார் பத்து ஆண்டுகளாக இருக்கிறது. உதாரணமாக, 1970-80-களில் கச்சா எண்ணெய் முதலீடு நல்ல லாபம் தந்தது. 1980-1990-களில் ஜப்பான் பங்குச் சந்தையும், 1990-2000-களின் அமெரிக்கப் பங்குச் சந்தையும், 2000-2010-களில் இந்தியா உள்ளிட்ட எமெர்ஜிங் சந்தைகளும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.

பொதுவாக, பங்குச் சந்தை சிறப்பாகச் செயல்படுவதற்கு முன்னர் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் அது இறக்கத்தில் (Correction) ‌இருந்திருக்கும். 2000 முதல் 2003-ம் ஆண்டு வரை இந்தியப் பங்குச் சந்தை பெரிய கரெக்‌ஷனில் இருந்தது. 2000–ம் ஆண்டில் சென்செக்ஸ் 6000 புள்ளிகளாக இருந்தது. இது பத்து ஆண்டுகளில் அதாவது, 2010-ல் 21000 புள்ளிகளுக்கு அதிகரித்தது. இது 2020, ஜனவரி 14-ல் 41950-ஆக அதிகரித்தது. அந்த வகையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்துவிட்டுக் காத்திருந்தால் நல்ல லாபம் பார்க்கலாம். இறக்கத்தில் முதலீடு செய்துவிட்டுக் காத்திருந்தால் கூடுதல் லாபம் ஈட்ட முடியும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீனாவில் ஏற்பட்ட பாதிப்பால் இந்தியாவுக்கு நன்மையா?

“உலகப் பொருளாதாரத்தில் சீனாவின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. உலக உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 28 சதவிகிதமாகவும், அமெரிக்காவின் பங்களிப்பு 16 சதவிகிதமாகவும் இருக்கின்றன. இந்தியாவின் பங்களிப்பு வெறும் 3 சதவிகிதமாக உள்ளது. மாத்திரைத் தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 40 சதவிகிதத்துக்குமேல் உள்ளது. இதனால்தான் கொரோனா வைரஸ் பாதிப்பால், பெரும்பாலான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஜவுளி மற்றும் ஸ்டீல் உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு சுமார் 60 சதவிகிதமாக உள்ளது. ஸ்டீல் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால், அதன் பங்களிப்பு வெறும் 5.9% மட்டுமே.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

சீனா இப்படி உலக உற்பத்தி மையமாக இருப்பதால், அதற்கு ஆபத்து என்றால் உலக நாடுகள் பதறிப்போகின்றன. உதாரணமாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் சீனாவில்தான் அதிகம் உற்பத்தியாகிறது. சீனாவில் உற்பத்தி தடைப்பட்டதால் ஆப்பிள் நிறுவனம் திண்டாடிப்போனது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான பொருள்களுக்கு சீனாவைத்தான் நம்பியிருக்கின்றன. இந்த நிலையில், சீனாவில் பொருளாதா பாதிப்பு தொடரும்பட்சத்தில் ஒரு சில பொருள்களை மற்ற நாடுகளிலிருந்து உலக நாடுகள் இறக்குமதி செய்ய வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவும் பலன் அடையக்கூடும்.’’

பங்குச் சந்தை இறக்கத்தைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

“இந்தியப் பங்குச் சந்தை இறங்குவதைத் தடுக்க மத்திய அரசு, தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம், நிலச் சீர்திருத்தம் போன்றவற்றை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிவிடெண்ட் பெறும் வெளிநாட்டினருக்கு இருக்கும் சலுகை இந்தியர்களுக்கு இல்லை. கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டதால், ஏராளமான நிறுவனங்கள் லாபமடைந்துள்ளன. அதே நேரத்தில், லாபத்தில் வழங்கப்படும் டிவிடெண்டுக்கு சுமார் 43% வரி என ஒரு தொழிலதிபர் சுமார் 58% வரி செலுத்த வேண்டிய நிலையிலிருக்கிறார். `இந்த டிவிடெண்ட் வரி மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் முன் நீக்கப் படலாம்’ என்ற எதிர்பார்ப்பும் சந்தையில் பரவலாகக் காணப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் சந்தை மீண்டும் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகமாக விலை இறங்கிய பங்குகளை வாங்கலாமா?

“ஒரு நிறுவனப் பங்கின் விலை 90% இறங்கியிருக்கிறது என்பதற்காக அந்தப் பங்கில் முதலீடு செய்யக் கூடாது.

நிகர இழப்பில் இருக்கும் நிறுவனப் பங்குகளின் விலை தாறுமாறாக வீழ்ச்சிகண்டிருக்கிறது. அதற்காக, அந்த நிறுவனப் பங்குகளை வாங்கினால் நஷ்டமே வரும். கடந்த ஐந்து வருடங்களாக அதன் நிதிநிலைச் செயல்பாடு எப்படியிருக்கிறது, பணவரத்து எப்படியிருக்கிறது, நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது, கடன் எவ்வளவு போன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலீட்டுக் காலம் குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகளாக இருந்தால் முதலீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது பிரமாதமான வருமானம் கிடைக்கும். இந்த முதலீடுகளில் குறுகியகாலத்தில் இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்போது பங்குகளை விற்றுவிட்டு வெளியேறக் கூடாது.

ஏ.கே.பிரபாகர்
ஏ.கே.பிரபாகர்

இப்போது பங்கு விலை இறக்கத்தில் முதலீடு செய்யும் நிறுவனம், கடன் இல்லாத நிறுவனமாக இருக்க வேண்டும். அடுத்த ஓரிரு ஆண்டுகள் மூடப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டால் சிறப்பாகச் செயல்படுகிற நிறுவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஜூபிளியன்ட் ஃபுட், டிரென்ட் (டாடா குழும நிறுவனம்), ஹெச்.யூ.எல்., டாபர், ஏசியன் பெயின்ட்ஸ் போன்ற நிறுவனங்களைக் குறிப்பிடலாம். தற்போதைய நிலையில், முதலீட்டாளர்களுக்கு மிகவும் பொறுமை தேவை. நிஃப்டி 7000-க்குக் கீழே வர வாய்ப்பிருக்கிறது. அதன் பிறகு சந்தை ஏறும்போது, ரெக்கவரி பிரமாதமாக இருக்கும்’’ என்று பேட்டியை முடித்தார்.

முதலீட்டாளர்கள் இந்த அம்சங்களைக் கவனித்துச் செயல்படுவது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism