Published:Updated:

கைகொடுக்குமா ஹைபிரிட் ஃபண்டுகள்?

ஹைபிரிட் ஃபண்டு
பிரீமியம் ஸ்டோரி
News
ஹைபிரிட் ஃபண்டு

சந்தை வீழ்ச்சி... சரியான டிப்ஸ்

னவரி 14, 2020-ல் நிஃப்டி 50 குறியீடு 12362 புள்ளிகளாக இருந்தது. இது 38 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்து, மார்ச் 23-ல் 7,610 (27-03-2020-ல் 8660) புள்ளிகளில் இருக்கிறது.

பங்குச் சந்தை சரிந்திருக்கும் நிலையில், இது போன்ற சரிவுகளை எதிர்கொள்ள ஹைபிரிட் ஃபண்டுகள் சிறந்தவையா என்ற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

கைகொடுக்குமா ஹைபிரிட் ஃபண்டுகள்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏழு வகை ஹைபிரிட் ஃபண்டுகள்

ஹைபிரிட் ஃபண்டுகளைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். ஹைபிரிட் ஃபண்டுகள் செபியால் ஏழு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை...

1. கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்டுகள்

பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் 10 – 25%, கடன் சார்ந்த முதலீடுகள் 90 – 75%.

ஹைபிரிட் ஃபண்டு
ஹைபிரிட் ஃபண்டு

2. பேலன்ஸுடு ஹைபிரிட் ஃபண்டுகள்

பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் 40 – 60%, கடன் சார்ந்த முதலீடுகள் 60 – 40%. இதில் ஆர்பிட்ரேஜ் முதலீடுகளுக்கு அனுமதி இல்லை.

3. அக்ரெஸிவ் ஹைபிரிட் ஃபண்டுகள்

பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் 65 – 80%, கடன் சார்ந்த முதலீடுகள் 35 – 20%.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

4. டைனமிக் அஸெட் அலோகேஷன் அல்லது பேலன்ஸுடு அட்வான்டேஜ் ஃபண்டுகள்

பங்கு மற்றும் கடன் சார்ந்தவற்றில் முதலீடு (Dynamic Management).

ஹைபிரிட் ஃபண்டு
ஹைபிரிட் ஃபண்டு

5. மல்டி அஸெட் அலொகேஷன் ஃபண்டுகள்

`மினிமம் மூன்று சொத்து வகைகளில்’ என ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 10% முதலீடு.

6. ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள்

பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளில் குறைந்தபட்சம் 65% முதலீடு, ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளில் முதலீடு.

7. ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகள்

பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளில் குறைந்தபட்சம் 65% முதலீடு, கடன் சார்ந்த முதலீடு குறைந்தபட்சம் 10%. ஹெட்ஜுடு மற்றும் அன்ஹெட்ஜுடு (Hedged and Unhedged) முதலீடுகளைக் குறிப்பிட வேண்டும்.

கைகொடுக்குமா ஹைபிரிட் ஃபண்டுகள்?

எதில், எவ்வளவு ரிஸ்க்?

இந்த ஏழு வகைகளில் அதிக ரிஸ்க் உடையது அக்ரெஸிவ் ஹைபிரிட் ஃபண்டுகள். இவை முன்பு `பேலன்ஸுடு ஃபண்டுகள்’ என்று அழைக்கப்பட்டன. மிகவும் குறைவான ரிஸ்க் உடையவை ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள். ஹைபிரிட் ஃபண்ட் வகைகளில் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் பெரும்பாலான சமயங்களில் லிக்விட் ஃபண்ட் வருமானத்தைத் தரும். நெகட்டிவ் வருமானத்தைத் தருவது மிக மிகக் குறைவு.

இதற்கு அடுத்த லெவலில் கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்டுகளின் ரிஸ்க் லெவல் இருக்கும். பிற நான்கு ஹைபிரிட் கேட்டகரி ஃபண்டுகளின் (மல்டி அஸெட், பேலன்ஸுடு அட்வான்டேஜ் அல்லது டைனமிக் அஸெட் அலொகேஷன், ஈக்விட்டி சேவிங்ஸ் மற்றும் பேலன்ஸுடு ஹைபிரிட்) ரிஸ்க் லெவல், கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்டுகளின் ரிஸ்க் லெவலைவிட அதிகமாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தை இறக்கத்தில் செயல்பாடு...

சந்தை இறங்கும்போது ஹைபிரிட் ஃபண்டுகளின் செயல்பாடு எப்படியிருக்கும்?

ஹைபிரிட் ஃபண்டு
ஹைபிரிட் ஃபண்டு

இப்போது நாம் பார்த்த ஏழு வகைகளில், ஆர்பிட்ரேஜ் ஃபண்டைத் தவிர பிற கேட்டகரிகள் அனைத்தும் சந்தை இறங்கும்போது அதிகம் மதிப்பை இழக்கும். ஆனால், ப்யூர் ஈக்விட்டி ஃபண்டுகளைவிட மதிப்பிழப்பு குறைவாக இருக்கும்.

ஆகவே, லிக்விட் ஃபண்டுகளைப்போல நிரந்தர வருமானத்தை விரும்புபவர்கள் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளை நாடலாம்.

ரிஸ்க்கே எடுக்க விரும்பாதவர்கள் கடன் சார்ந்த ஃபண்டுகளை நாடுவதே சிறந்தது. ப்யூர் ஈக்விட்டி ஃபண்டுகளைவிட சற்றுக் குறைவான ரிஸ்க்கை விரும்புபவர்கள், குறைந்த ஏற்ற இறக்கத்தை நாடுபவர்கள், நீண்டகாலத்தில் எஃப்.டி-யைவிடக் கூடுதல் வருமானத்தைப் பெற விரும்புபவர்கள் ஹைபிரிட் ஃபண்டுகளை நாடலாம்.

ஹைபிரிட்டிலிருக்கும் வெவ்வேறு கேட்டகரிகளிலிருந்து கவனிக்க வேண்டிய சில ஃபண்டுகளை அட்டவணையில் தந்திருக்கிறோம். பேலன்ஸுடு ஹைபிரிட் கேட்டகரியில் பெரிய அளவு ஃபண்டுகள் இல்லையென்பதால், பிற கேட்டகரிகளிலுள்ள ஃபண்டுகளைத் தந்திருக்கிறோம். மல்டி அஸெட் மற்றும் ஈக்விட்டி கேட்டகரிகளிலுள்ள எந்த ஃபண்டையும் நாம் தரவில்லை.

அட்டவணையில் நாம் தந்திருக்கும் ஃபண்டுகளைப் பற்றிய சிறு குறிப்பு...

கனரா ராபிகோ ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட்

இந்த கேட்டகரியில் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டுவரும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. கனரா ராபிகோ நிறுவனத்தின் பல ஃபண்டுகள் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகளும், ஆர்.இ.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் போன்ற நிறுவனங்களின் பாண்டுகளும் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

பி.என்.பி பரிபாஸ் சப்ஸ்டேன்ஷியல் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட்

2017 ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட், அக்ரெஸிவ் ஹைபிரிட் கேட்டகரியில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. கார்த்திக்ராஜ் லட்சுமணன் என்பவர்தான் இந்த ஃபண்டின் ஃபண்ட் மேனேஜராக இருக்கிறார். சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், கிராஸிம், எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களின் பாண்டுகளையும், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் பங்குகளையும் டாப் ஹோல்டிங்ஸாகக் கொண்டிருக்கிறது.

எடெல்வைஸ் பேலன்ஸுடு அட்வான்டேஜ் ஃபண்ட்

ஒவ்வொரு பேலன்ஸுடு அட்வான்டேஜ் ஃபண்டும், பங்கு மற்றும் கடன் சார்ந்த முதலீடு ஒதுக்கீட்டுக்கு ஒரு மாடலை உபயோகிக்கின்றன. இந்த ஃபண்ட் சற்று வித்தியாசமான மாடலைப் பயன்படுத்துகிறது. அதாவது, சந்தை இறங்கும் போது, குறைவான பங்கு ஒதுக்கீட்டையும், உயரும்போது அதிகமான பங்கு ஒதுக்கீட்டையும் செய்துகொள்கிறது. ஆகவே, பியர் குரூப்புடன் ஒப்பிடும்போது குறைவாகவே கடந்த காலங்களில் குறைந்திருக்கிறது.

டி.எஸ்.பி டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட்

இந்த ஃபண்டும் தனது சொத்து ஒதுக்கீட்டுக்கு தனக்கே உரித்தான மாடலைப் பயன்படுத்துகிறது. இந்த ஃபண்டின் செயல்பாடும் பியர் குரூப்புடன் ஒப்பிடுகையில், கடந்த காலங்களில் நன்றாக இருக்கிறது. குறைந்தபட்சம் 20 சதவிகிதத்திலிருந்து அதிகபட்சம் 90% வரை பங்கு சார்ந்த முதலீட்டில் இந்த ஃபண்ட் தனது ஒதுக்கீட்டை வைத்துக்கொள்ளும். ஃபண்ட மென்டல் மற்றும் டெக்னிக்கல் சிக்னல்களை வைத்து ஒதுக்கீட்டை முடிவு செய்யும் இந்த ஃபண்ட்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட்

முன்பு `எம்.ஐ.பி’ (மன்த்லி இன்கம் பிளான்) என்று அழைக்கப்பட்ட கேட்டகரிதான் தற்போது `கன்சர்வேட்டிவ் ஹைபிரிட்’ என்று அழைக்கப்படுகிறது. ஈக்விட்டி குறைவான சதவிகிதத்தில் இருப்பதால், சந்தை இறங்கும்போது இந்த ஃபண்டின் வீழ்ச்சி குறைவாகவே இருக்கும். நீண்டகாலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கூடுதல் வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த வகை ஃபண்டுகள் நல்ல ஆப்ஷன்.

கனரா ராபிகோ கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட்

இந்த கேட்டகரியில் நன்றாகச் செயல்பட்டு வரும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று. இந்த வகை ஃபண்டுகள் எஸ்.டபிள்யூ.பி ஆப்ஷனுக்குச் சிறந்த ஃபண்டுகள்.

எடெல்வைஸ் ஆர்பிட்ரேஜ் மற்றும் எல் அண்ட் டி ஆர்பிட்ரேஜ் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டுகள்

அறவே ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் பொருத்தமானவை. ஓராண்டு எஃப்.டி வட்டி வருமானத்தை இந்த வகை ஃபண்டுகளில் எதிர்பார்க்கலாம். லிக்விட் ஃபண்ட் வருமானம் ஈக்விட்டி டாக்ஸேஷேனுடன் கிடைப்பது கூடுதல் வசதி. உங்களுக்கேற்ற ரிஸ்க் லெவலில், உங்கள் தேவைக்கேற்ற கேட்டகரியைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்!