Published:Updated:

`இதுல வீடு கட்டிக்கோங்க!' - ஊழியர்களுக்கு 9 லட்சம் பங்குகளை பரிசாக வழங்கிய வைத்தியநாதன்

V.Vaidyanathan

தனது பணியாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக 9,00,000 பங்குகளை பரிசாக வழங்கியுள்ளார். பயிற்சியாளர், டிரைவர், வீட்டு உதவியாளர் என மொத்தம் 5 பேருக்கு `ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் பேங்க்' நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன் பங்குகளை வழங்கியுள்ளார்.

`இதுல வீடு கட்டிக்கோங்க!' - ஊழியர்களுக்கு 9 லட்சம் பங்குகளை பரிசாக வழங்கிய வைத்தியநாதன்

தனது பணியாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக 9,00,000 பங்குகளை பரிசாக வழங்கியுள்ளார். பயிற்சியாளர், டிரைவர், வீட்டு உதவியாளர் என மொத்தம் 5 பேருக்கு `ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் பேங்க்' நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன் பங்குகளை வழங்கியுள்ளார்.

Published:Updated:
V.Vaidyanathan

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கிய வைத்தியநாதன், பிற்பாடு பர்ஸ்ட் பேங்க்கைத் தொடங்கினார். பின்னர், இந்த நிறுவனத்தை ஐ.டி.எஃப்.சி நிறுவனம் வாங்கியது. பார்ஸ்ட் பேங்கின் நிர்வாக இயக்குநராக இருந்த வைத்தியநாதன், தனது பணியாளர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாக ஐ.டி.எஃப்.சி நிறுவனத்தின் பங்குகளை அன்பளிப்பாக அளித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு உதவிய ஆசிரியருக்கு கைம்மாறாக பல லட்சம் ரூபாயைத் தந்தார். இப்போது, கஷ்டப்பட்ட காலத்தில் தனக்கு உதவிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள், முன்னாள் ஊழியர்கள் என நேரடியாக உதவியவர்களுக்கு கைம்மாறு செய்யும் விதமாக பலருக்கும் பங்குகளை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார். குறிப்பாக, தனது பணியாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக 9,00,000 பங்குகளைப் பரிசாக வழங்கியுள்ளார் வைத்தியநாதன்.

V.Vaidyanathan
V.Vaidyanathan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்னுடைய பயிற்சியாளர், டிரைவர், வீட்டு உதவியாளர் என மொத்தம் 5 பேருக்கு ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் பேங்க் நிர்வாக இயக்குனர் வைத்தியநாதன் பங்குகளை வழங்கியுள்ளார்.

பிப்ரவரி 21, 2022 அன்று வைத்தியநாதன் தனது பயிற்சியாளர் ரமேஷ் ராஜுவுக்கு 3 லட்சம் பங்குகளையும், வீட்டு உதவியாளர் பிரஞ்சல் நர்வேகர் மற்றும் டிரைவர் அழகர்சாமி, சி முனாபர் ஆகியோருக்கு தலா 2 லட்சம் பங்குகளையும், அலுவலக உதவி ஊழியர்கள் தீபக் பதரே மற்றும் சந்தோஷ் ஜோகலே ஆகியோருக்கு தலா 1 லட்சம் பங்குகளையும் பரிசாக வழங்கினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ருக்மணி சமூக நல அறக்கட்டளையின் சமூகப் பணிகளுக்கு ஆதரவாக 2 லட்சம் பங்குகளை அளித்துள்ளார் என வங்கி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பங்குகளை பெறுபவர்கள் நிறுவனத்தின் சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில், எந்த வகையிலும் அவருடன் தொடர்புடையவர்கள் இல்லை என்பதால், இந்தப் பரிவர்த்தனைகள் கருத்தில் கொள்ளப்படாது எனவும் வங்கி குறிப்பிட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பங்கின் விலை 43.90 ரூபாய் என்ற நிலையில், இவற்றின் மதிப்பு சுமார் 3.95 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

V.Vaidyanathan
V.Vaidyanathan

ஏற்கெனவே, பஞ்சாபிலிருந்து ஜார்க்கண்டில் இருக்கும் ராஞ்சிக்கு ரயிலில் பயணம் செய்வதற்கு தேவையான 500 ரூபாயைத் தந்து உதவிய பதன்கோட் பள்ளி கணித ஆசிரியர், குர்தியால் சரூப் சாய்னிக்கு தனக்குள்ள பங்குகளில் இருந்து ஒரு லட்சம் பங்குகளைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தனக்கு உதவியாக இருந்தவர்களை மறக்காமல் கைம்மாறு செய்யும் வைத்தியநாதனை ஒரு வித்தியாசமான தொழிலதிபர் என்று சொல்லலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism