Published:Updated:

பங்குச் சந்தையில் நிலவும் தொடர் நெருக்கடி... நிஃப்டி 6,220 புள்ளிகள் வரை சரியுமா?!

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, இந்த நடப்பாண்டில் அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படும் நிலுவைத் தொகையின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்திய நிதி சந்தைகள் வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பி.எஸ்.இ -யின் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த டிசம்பர் மாதம் 155.53 லட்சம் கோடியாக இருந்துவந்த நிலையில், தற்போது அது, சுமார் 52 லட்சம் கோடி ரூபாய் சரிவைக் கண்டு, 103.69 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, இந்த நடப்பாண்டில் அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படும் நிலுவைத் தொகையின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், சந்தையின் அடித்தளத்தை ஆராய்வது சாத்தியமில்லாத மற்றும் தேவையற்ற வேலையாகக் கருதும் நிபுணர்கள், வரும் நாள்களில் நிஃப்டியின் அளவு 7200 - 6220 வரை சரியும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

பங்குச் சந்தை - கொரோனா
பங்குச் சந்தை - கொரோனா

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தி வாய்ந்த நாடாகக் கருதப்படும் இந்தியாவில், அனைத்து மாநிலங்களும் முடங்கி மக்கள் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சந்தைகளில் தொடரும் சரிவும் நெருக்கடியும் மிக பெரிய அளவில் உள்நாட்டு பங்குகள் சரணடைதலை நிகழ்த்தியிருக்கிறது.

இது, முன்னதாக 2008-ல் நடந்ததை நமக்கு நினைவூட்டுகிறது. கடந்த திங்கள் வரை மட்டும் சந்தைகளின் முக்கியக் குறியீடுகள் 37% குறைந்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் இதற்கு முன் இரண்டு தடவை இதுபோன்ற நிலையைச் சந்தித்திருக்கிறது. 2008 ல் முக்கியக் குறியீடுகள் 66% குறைந்ததும், 2011ல் 28% குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

ஒருவேளை இதே நிலை தொடரும் பட்சத்தில், விளைவுகள் பயங்கரமாக இருக்கும். இந்த (sell-off) நிகழ்வால் நாட்டில் சிறிய முதலீட்டாளர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு