Published:Updated:

லாபத்துக்கு வாய்ப்புள்ள பார்மா பங்குகள்!

பார்மா பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பார்மா பங்குகள்

கொரோனாகால ‘பளிச்’ டிப்ஸ்

லாபத்துக்கு வாய்ப்புள்ள பார்மா பங்குகள்!

கொரோனாகால ‘பளிச்’ டிப்ஸ்

Published:Updated:
பார்மா பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பார்மா பங்குகள்
ச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பார்மா துறை மட்டும் ஆரோக்கியமாகச் செயல்பட்டுவருகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் விலை அண்மைக் காலத்தில் ஏற்றம் பெறத் தொடங்கியுள்ளன.

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்காவுக்கு, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine) மாத்திரைகளை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இதனால் பார்மா துறை சார்ந்த பல நிறுவனப் பங்குகளின் விலை கடந்த வாரம் 10% - 25% வரை ஏற்றம்கண்டன. சில பங்குகள் அவற்றின் 52 வார உச்ச விலையை எட்டியிருக்கின்றன. அதிக விலை ஏறிய பங்குகளென்றால் சிப்லா, கெடிலா ஹெல்த்கேர் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சற்று விலை ஏறிய பங்குகளாக அஜந்தா பார்மா, ஸ்ட்ரைட்ஸ் (Strides) பார்மா, பிலிஸ் (Bliss) ஜி.வி.எஸ் பார்மா ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மாத்திரை
மாத்திரை

``தற்போதைய நிலையில், ஒருவர் பார்மாசூட்டிக்கல் நிறுவனப் பங்குகளை வாங்கலாமா?’’ என்று பிரபல பங்குச் சந்தை நிபுணரும் ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவருமான ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் விரிவாக விளக்கினார்.

“இதற்கு முன்னர் உலக மக்களை பாதித்த வைரஸ் கிருமிகளைவிட கோவிட் 19 வைரஸ் அதிக பாதிப்பையும் மரணங்களையும் ஏற்படுத்திவருகிறது. இதற்கு இப்போது பயன்படுத்தும் மருந்துகள் தற்காலிகத் தீர்வாகவே இருக்கின்றன. உதாரணமாக, மலேரியாவுக்குப் பயன்படுத்தும் மருந்துகள், ஹைட்ராக்ஸி குளோரோகுயின்ஆகியவற்றின் தேவை அதிகரித்திருக்கிறது. கோவிட் 19 வைரஸுக்கு மிகச் சரியான மருந்து கண்டுபிடிக்கக் குறைந்தது இரண்டு முதல் ஐந்தாண்டுகள் ஆகக்கூடும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) இந்திய மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை எளிதாக்கப்போகிறது என்ற சூழல் உருவாகியிருக்கிறது. கோவிட் 19 அவசரநிலை இருக்கும்வரை முக்கியமான ஜெனரிக் மருந்துத் தயாரிப்புகளுக்கு விரைந்து எஃப்.டி.ஏ அங்கீகாரம் கொடுத்துவருகிறது.

பார்மா பங்குகள்
பார்மா பங்குகள்

எஃப்.டி.ஏ-வுடன் நீண்டகாலமாகச் சர்ச்சையிலிருந்த சன் பார்மாவின் ஹாலோல் (Halol) மருந்து தயாரிப்பு ஆலைக்குக்கூட இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது. `இத்தகைய அனுமதிகள் தற்காலிகமானவை’ என்று எஃப்.டி.ஏ தெளிவுபடுத்தி யிருந்தாலும், கோவிட் 19 நெருக்கடி முற்றிலும் தீர நீண்டகாலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கலாம்.

கோவிட் 19 பாதிப்பு சுட்டிக் காட்டியிருக்கும் முக்கிய விஷயங்கள், அடிப்படை ஆரோக்கியம், சுகாதாரத்தின் முக்கியத்துவம், மலிவான மருந்துகள் கிடைப்பதற்கான வழிமுறை உள்ளிட்டவை. மிகப்பெரிய அளவில் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் மருந்து உற்பத்தியாளர்களால் மட்டுமே சாத்தியமாகும். இந்தத் திறன்களைச் சிறப்பாகக் கொண்டிருக்கும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இப்போதும் இனிவரும் காலத்திலும் உலகம் இத்தகைய தொற்றுநோய்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டுமானால், அடிப்படை மருந்துகளின் (Generics) ஆதரவு இல்லாமல் அது சாத்தியமில்லை. குறைந்த விலை மருந்துதான் `அடிப்படை மருந்து’ எனப்படுகிறது.

ஜெனரிக் மருந்துகளை நோக்கிய ஒரு புதிய உலகளாவிய மாற்றத்தைக் காண முடிகிறது.

இது, இந்திய பார்மா துறைக்கு மிகப்பெரிய லாபம். காசநோய் வராமல் தடுக்க பி.சி.ஜி (BCG) எனும் தடுப்பூசியை இந்தியர்கள் பெரும்பாலானோர் போட்டிருக்கிறார்கள். `அப்படிப் போட்டிருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும்’ என்கிறார்கள். அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவுதான். அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு அளிக்கப்படும் மருந்துகள் தற்காலிகத் தீர்வாகத்தான் இருக்கின்றன. எனவே, கொரோனா தடுப்பு மற்றும் அதற்கான சிகிச்சைக்கு பயன்படும் மருந்து, மாத்திரைகளுக்குத் தேவை அதிகமாக இருக்கிறது” என்ற ஏ.கே.பிரபாகர், இந்தத் துறையிலுள்ள பங்குகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

“பங்கு முதலீடு எனும்போது, பல பங்குகளின் விலை ஏற்கெனவே ஏறிவிட்டன. இன்னும் உயரச் சாத்தியக்கூறு உண்டு. அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதியாகும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைக்கான மூலப் பொருள்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் டாக்டர் ரெட்டீஸ், இப்கா லேப்ஸ், பயோகான், டிவிஸ் லேப்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இந்த மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் வசதி பெற்றுள்ளன. இது இந்த நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமான அம்சம்.

பார்மா பங்குகள்
பார்மா பங்குகள்

முதலீட்டுக்குப் பங்குகளைத் தேர்வு செய்யும் போது அடிப்படையில் வலுவான நிறுவனங்கள், மற்றும் கவர்ச்சிகரமான மதிப்பீட்டிலிருக்கும் நிறுவனங்களைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். நீண்டகால முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய ஐந்து பங்குகளை பரிந்துரை செய்கிறேன். அந்தப் பங்குகள் பற்றிய சிறு குறிப்புகள்...

லாபத்துக்கு வாய்ப்புள்ள பார்மா பங்குகள்!

இப்கா லேப்ஸ் (IPCA Labs)

இந்த நிறுவனம், மருந்துகள் தயாரிப்பதில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் ஏ.பி.ஐ என்ற மூலப்பொருளைத் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. மேலும், இந்த மூலப்பொருளை சுமார் 25% ஏற்றுமதி செய்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நடந்துவருகிறது. இந்தியாவைச் சேர்ந்த முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்களான அபாட், ஃபைஷர், ரான்பாக்ஸி, வோக்கார்ட், அஸ்ட்ராஜெனிகா உள்ளிட்டவை இந்த நிறுவனத்திடமிருந்து மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்துவருகின்றன். அண்மையில் இந்த நிறுவனம் அவுரங்காபாத்துக்கு அருகில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவுகொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றைக் கையகப்படுத்தியது. இது, இந்த நிறுவனத்துக்கு நீண்டகாலத்தில் லாபகரமாக அமையும்.

சிப்லா

முன்னணி மருந்து தயாரிப்பு பன்னாட்டு நிறுவனம் இது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயர்தரமான மருந்துகளை உற்பத்தி செய்துவருகிறது. 1,300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுடன் ஆறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட உலகம் முழுக்க 46 உற்பத்தி மையங்களைக்கொண்டிருக்கிறது. 1,500-க்கும் மேற்பட்ட மருந்து வகைகளைத் தயாரிக்கும் இந்த நிறுவனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் இயங்கிவருகிறது.

லாபத்துக்கு வாய்ப்புள்ள பார்மா பங்குகள்!

டிவிஸ் லேப்ஸ் (Divi’s Lab)

கடந்த 30 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த நிறுவனமும் மருந்துகள் தயாரிப்புக்கான மூலப்பொருள்களை உற்பத்தி செய்துவருகிறது. மேலும், அதன் தயாரிப்புகளை 96-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. 350-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுடன் மூன்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. 25-க்கும் மேற்பட்ட மருந்து வகைகளைத் தயாரிக்கிறது.

பயோகான்

நாற்பது ஆண்டுகளுக்குமேலாக இயங்கிவரும் இது, இந்தியாவின் மிகப்பெரிய உயிரி தொழில்நுட்ப நிறுவனம். இதற்கு 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கை நிறுவனங்கள் உள்ளன. மருந்து தயாரிப்பு மூலப்பொருளான ஏ.பி.ஐ மூலப்பொருளை அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

டாக்டர் ரெட்டீஸ்

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான இது, கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. வாங்கக்கூடிய விலையில் மருந்துகளைத் தயாரித்து அளிப்பதே இதன் நோக்கம். இந்த நிறுவனத்தில் 20,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா தொடங்கி 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவருகிறது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பங்கு விலை ஏற்றம்..!

பார்மா பங்குகள்
பார்மா பங்குகள்

தற்கு முன்னர், 2015-ம் ஆண்டில் பார்மா பங்குகளின் விலை வேகமாக அதிகரித்தன. அதன் பிறகு ஒழுங்குமுறை நடவடிக்கை, நிர்வாகப் பிரச்னை, மருந்து விலை நிர்ணயத்தில் அழுத்தம் போன்றவற்றால் பார்மா நிறுவனப் பங்குகளின் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கின. இப்போது கோவிட் 19-ஆல் சில மருந்துகளின் அதிக தேவை காரணமாகப் பல பார்மா நிறுவனப் பங்கு விலை ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது.

தேவை அதிகரிப்பும், லாப அதிகரிப்பும்!

லாபத்துக்கு வாய்ப்புள்ள பார்மா பங்குகள்!

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், மலேரியா காய்ச்சலுக்கான மாத்திரைகள், மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள், கை உறைகள், சானிடைஸர்கள் போன்றவற்றின் தேவை அதிகரித்திருக்கின்றன. இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களின் லாபமும் நிச்சயம் அதிகரிக்கும்.