பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பங்குச் சந்தை மற்றும் அதுசார்ந்த திட்டங்களில் கிடைக்கும் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியும். ஆனால் இந்த ஒரு தகவலை மட்டுமே வைத்துக்கொண்டு பங்குச் சந்தையை அணுகினால் நஷ்டம் மட்டுமே மிஞ்சும். இன்னும் சிலர் `பங்குச் சந்தையில் எளிதாகப் பணம் பண்ணலாம் என நண்பர்கள் கூறினார்கள், பேசிக்கொண்டார்கள்’ என்று அடுத்தவர்கள் சொன்னதை நம்பி முதலீடு செய்வார்கள். இப்படிச் செய்தால் நஷ்டம் நிச்சயம் என்பதைச் சொல்லவே தேவையில்லை. நான் பங்குச் சந்தைத் தரகு நிறுவனம் நடத்திவருவதால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்கள் எப்படிப் பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லது எப்படிப் பணத்தை இழக்கிறார்கள் என்பதை தினமும் பார்த்துவருகிறேன்.

உபரித் தொகையை முதலீடு செய்யுங்கள்!

முதலில் உபரித்தொகை இருப்பவர்கள் மட்டும் பங்குச் சந்தைக்கு வருவது நல்லது. கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, குறுகியகால அவகாசத்தில் தேவைப்படும் முக்கிய இலக்குகளுக்கான (கல்வி, மருத்துவம், திருமணம்) தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது உள்ளிட்டவற்றைச் செய்யக் கூடாது. இது போன்ற தேவைகளை வைத்துக்கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு அல்லது வர்த்தகம் செய்தால் பதற்றம் அதிகரிக்கும். இந்தப் பதற்றத்தால் நஷ்டமடையும்நிலை ஏற்படும். எனவே, உடனடியாகத் தேவைப்படாத தொகையை மட்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் அல்லது வர்த்தகம் செய்யலாம்.

யாருக்கு, எது ஏற்றது?

யார் முதலீட்டாளர், யார் வர்த்தகர் என்பதை எப்படிக் கண்டறிவது. அடுத்துவரும் கேள்விக்குக் கிடைக்கும் பதிலைப் பொறுத்து நீங்கள் யார் என்பதை முடிவு செய்யலாம். உங்களிடமிருக்கும் உபரித் தொகை நீண்டகாலத் தேவைக்குப் பயன்படும் என நினைப்பவராக இருந்தால் நீங்கள் முதலீட்டாளர். உபரித் தொகையை வைத்துக்கொண்டு ஏதாவது கூடுதல் வருமானம் ஈட்ட முடியுமா என யோசிப்பவராக இருந்தால் நீங்கள் வர்த்தகர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

உபரித் தொகை வைத்திருக்கும் அனைவரும் முதலீட்டாளராக இருக்க முடியும். ஆனால், அத்தனை பேரும் வர்த்தகர்களாக இருக்கும் வாய்ப்பு குறைவு. வர்த்தகராக இருப்பதற்கான மனநிலை வேறு. தாங்கள் யார் என்பதிலுள்ள குழப்பம் காரணமாகவே பெரும்பாலானவர்கள் பங்குச் சந்தையில் தங்களுடைய பெரும் முதலீட்டை இழக்கிறார்கள்.

முடிவு செய்யும் மூன்று விஷயங்கள்

பொதுவாக முதலீட்டை மூன்று விஷயங்கள் முடிவு செய்கின்றன. வருமானம், ரிஸ்க் மற்றும் பணப்புழக்கம். முதலீட்டில் அதிக வருமானமும் வேண்டும், பணப்புழக்கமும் இருக்க வேண்டும், ரிஸ்க்கும் குறைவாக இருக்க வேண்டும் என நினைத்தால் எந்த முதலீட்டு வாய்ப்பைக் குறித்தும் நீங்கள் யோசிக்கவே முடியாது.

`ஏதாவது இரண்டுதான் நமக்குக் கிடைக்கும். என்னால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடியும் ; அதற்கேற்ற வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என நினைத்தால், பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். `நான் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறேன். அதனால் எனக்கு அதிக வருமானம் கிடைக்குமா?’ என்றால் அது சரியான எண்ணமாக இருக்காது. ஆண்டுக்கு, சராசரியாக நீண்டகாலத்தில் (சி.ஏ.ஜி.ஆர்) 15% வருமானத்தை எதிர்பார்ப்பது நியாயமான எதிர்பார்ப்பு. இதைவிட அதிகமாக வருமானம் பங்குச் சந்தையில் கிடைக்கக்கூடும். ஆனால், எப்போதும் நிலையாகக் கிடைக்காது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில ஆண்டுகளில் அதிக லாபம் கிடைக்கலாம். சில ஆண்டுகளில் நஷ்டம் ஏற்படலாம். அதனால் ஆண்டுக்கு எவ்வளவு தேவை என்பதை முடிவு செய்த பிறகு தகுந்த ஆய்வின் அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

வர்த்தகர்கள் மனநிலை

ஏற்கெனவே கூறியதைப்போல, `இருக்கும் தொகையை வைத்து, கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும்’ என நினைப்பதுதான் வர்த்தகம். `கூடுதலாக பணத்தைச் சம்பாதிக்க வேண்டும்’ என்று முடிவெடுத்துவிட்டால், மற்ற தொழில்களைப்போல இதுவும் ஒரு தொழில் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வர்த்தகத்தைத் தொழிலாக நினைத்து, அதற்குத் தேவையானவற்றைச் செய்தால் மட்டுமே ஒரு வர்த்தகராக வெற்றியடைய முடியும். இல்லையெனில் தொழில்களை மூடுவதுபோல வர்த்தகத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் நிலை ஏற்படும். தொழிலாகப் பார்க்காமல், வர்த்தகத்தை விட்டு விட்டுச் சென்ற பலரைப் பார்த்திருக்கிறோம். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் பலர் தவறான நடவடிக்கைகளால் பங்குச் சந்தையிலிருந்து நஷ்டத்துடன் வெளியேறியிருக்கிறார்கள்.

இந்தத் தொழிலுக்குத் தேவையானவை மூன்று விஷயங்கள். பணம், அறிவு, செயல்படுத்தும் திறன். இவை மிக மிக முக்கியம். இவற்றில் ஒன்று இல்லையென்றாலும் அதைத் திரட்டிக்கொண்டு அல்லது கற்றுக்கொண்ட பிறகே வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். குறைந்த தொகையில் டீமேட் கணக்குத் தொடங்க முடியும், டிரேடிங் கட்டணம் குறைவு என்பதாலேயே டிரேடிங் என்பது எளிதான விஷயம் என நினைத்துக்கொண்டு பலர் பணத்தை இழக்கிறார்கள். அதேபோல பணம் சம்பாதிக்க எளிதான வழி பங்குச் சந்தை என்ற எண்ணமும் பரவலாக இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல.

பல வெற்றிபெற்ற டிரேடர்களுடன் உரையாடியிருக்கிறேன். அவர்களுக்கெனச் சில பிரத்யேக குணங்கள் உள்ளன. சில வர்த்தகர்கள் தங்களுக்கென சில இலக்குகளை நிர்ணயம் செய்திருப்பார்கள். அவை பூர்த்தியானால் மட்டுமே வர்த்தகம் செய்வார்கள். வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் இல்லையெனில் அன்றைக்கு வர்த்தகம் செய்ய மாட்டார்கள். `டிரேட் செய்தாக வேண்டும்’ என்ற எந்த அழுத்தமும் அவர்களிடம் இருக்காது. அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு தொழில். அந்தத் தொழிலில் அன்றைக்கு வாய்ப்பு இல்லை என்கிற மனநிலையில் இருப்பார்கள்.

அதேபோல டிரேடிங் செய்வதால் வரும் லாப நஷ்டம் குறித்தும் அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். லாபம் குறித்து அதிக கவலை வரும்போது, குறைந்த லாபத்தில் வெளியேறிவிடுவார்கள். அதேபோல நஷ்டம் வந்தாலும், உடனடியாக அந்த நஷ்டத்தைக் குறைக்காமல் லாபத்துக்காகக் காத்திருப்பார்கள். `அனைவரும் முதலீட்டாளர்கள்’ என ஆரம்பத்தில் கூறியது இதைத்தான். நீங்கள் டிரேடராக இருந்தாலும், சமயத்தில் முதலீட்டாளர் மனநிலையில் சில முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். இது போன்ற முடிவுகள் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஒரு நாளில் கோடி ரூபாயை இழந்தவர்கள் ஏராளம்.

நீங்கள் டிரேடராக இருந்தாலும், சமயத்தில் முதலீட்டாளர் மனநிலையில் சில முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். இது போன்ற முடிவுகள் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஒரு நாளில் கோடி ரூபாயை இழந்தவர்கள் ஏராளம்.

`தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்’ என்ற பழமொழி இங்கு பொருந்தாது. `தொலைத்த பணத்தை மீட்க வேண்டும்’ என்று முடிவெடுத்து மேலும் அதிக பணத்தைத் தொலைத்தவர்கள் அதிகம். ஒரு முறை நஷ்டமடைந்தால் மீண்டும் வெற்றி பெற முடியாது என்பதல்ல. ஆனால், ஏற்கெனவே கூறிய அறிவு மற்றும் செயல்படுத்தும் திறனை வளர்த்துக்கொண்ட பிறகுதான் வெற்றியடைய முடியும்.

வாரன் பஃபெட் கூறியிருப்பதைப்போல `என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்வதில்தான் அதிக ரிஸ்க் இருக்கிறது.’ நன்றாகத் தெரிந்துகொண்டு, ரிஸ்க்கைப் புரிந்துகொண்டு செய்வதால் ரிஸ்க்கைக் குறைக்கலாம்; லாபத்தையும் அதிகரிக்கலாம்.