Published:Updated:

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பங்குகள்! - முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

ஸ்பெஷாலிட்டி
கெமிக்கல்ஸ்
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பங்குகள்

சீன-அமெரிக்க வர்த்தகத்தில் அதிக உரசல்கள் எழுந்துள்ளதால் இறக்குமதி செய்யும் நாடுகளின் வியாபார உத்திகள் தற்போது மாறி வருகின்றன!

ச்சா எண்ணெய் விலைச்சரிவு, உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கங்களை உருவாக்கியிருக்கிறது. எனவே, இந்தத் துறையில் நிதி சார்ந்த முதலீடுகளுக்குப் பின்னால், சிக்கல்கள் பின்னிப் பிணைந்துள்ளன. இதனால், அவ்வப்போது பங்குச் சந்தைகளிலும் ஏற்ற இறக்கங்களைக் காண முடிகிறது.

தற்போதைய நிலையில் பங்குச் சந்தைகளில் முதலீடு என்பது, தொலைநோக்கில் முதலீடுகளைச் செய்தால் மட்டுமே ஆதாயங்களைப் பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து, அதற்கேற்றவாறு செயல்பட வேண்டிய தருணமாக இருக்கிறது. முதலீட்டாளர்கள், தத்தமது தேவைகளைக் கருத்தில்கொண்டு. அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பங்குகள்! - முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவிட் 19-ன் பாதிப்புகள் முடிவடைந்த பிறகுதான் தொழில் வளர்ச்சி என்பது சகஜ நிலைமைக்குத் திரும்ப வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்களின் முதலீட்டுக் காலம், நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் துறை

கச்சா எண்ணெயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் பெட்ரோலிய வேதிப்பொருள்கள் `ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. கச்சா எண்ணெய் விலை சரிந்து காணப்படுவது, இத்தகைய வேதியியல் பொருள்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருப்பதால், இத்தகைய நிறுவனங்களை அடையாளம் கண்டு, பங்குச் சந்தை இறக்கம் அடைந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், நீண்டகால அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்வது நிச்சயம் பயன்தரக்கூடிய சந்தர்ப்பமாகப் பார்க்கப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பல்துறைகளில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்கள்!

ஸ்பெஷாலிட்டி கெமிக்கலுக்கு பார்மா துறை, வாகனத்துறை, டெக்ஸ்டைல் துறை, அழகுசாதனப் பொருள்கள் துறை, விவசாயம் சார்ந்த வேதிப்பொருள்கள் என்று பல்வேறு துறைகளில் பங்களிப்பு இருக்கிறது. இந்தத் துறைசார் தயாரிப்புப் பொருள்களில், அந்தப் பொருள்கள் முழுமையடைவதற்கு முன்னர் கடைநிலைப் பயன்பாட்டில் இருப்பதால், அளவில் சிறியதாக இருந்தாலும், இதன் பயன்பாட்டைத் தவிர்த்துவிட முடியாது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இப்போது மூலப்பொருள்களின் விலை இறக்கம் கண்டிருப்பதால், ஒருசில நிறுவனங்களுக்கு தற்போதைய பொருளாதார முடக்கத்திலேயே, அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களுக்குத் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. ஒருசில நிறுவனங்களுக்கு, வரும் காலங்களில் நிலைமை சீரடைந்த பிறகு அந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிறுவனங்கள் எத்தகைய பொருள்களைத் தயாரிக்கின்றன, எந்தெந்தத் துறைகளில் இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு முதலீடுகளைத் தொடரலாம்.

பங்குச் சந்தையில் கோவிட் 19-ன் பக்கவிளைவுகள்!

கோவிட் 19-க்குப் பிறகு பொருளாதார மாற்றங்களை உலக நாடுகள் சந்திக்கவிருக்கின்றன. கோவிட் -19 கமாடிட்டிச் சந்தையில் ஒருசில நிரந்தர மற்றும் தற்காலிக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை, நுகர்வோருக்குக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. உற்பத்தி செய்பவருக்கும், வாங்குபவருக்கும் ஓர் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது.

2020-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளுமே சுமார் 25% சரிந்து காணப்படும் நிலையில், ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் நிறுவனங்களின் பங்குகள் சுமார் 10%-40% வரை அதிகரித்து வர்த்தகமாகிவருகின்றன. இதற்குக் காரணம், இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கான பணி ஆணைகள் (ஆர்டர்கள்) வலுவாக இருப்பதும், சீனாவைத் தவிர்த்து புதிய பணி ஆணைகள் இந்தியாவுக்கு வருவதற்கு முகாந்திரங்கள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதும்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக நாடுகள் சந்திக்கும் சவால்கள்!

உலக கெமிக்கல் சந்தையில் ஆசிய நாடுகளின் பங்கு 49 சதவிகிதமாகவும், அமெரிக்காவின் பங்கு 17 சதவிகிதமாகவும் இருக்கிறது. ஆப்பிரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

கெமிக்கல்ஸ்
பங்குகள்
கெமிக்கல்ஸ் பங்குகள்

சீனா தனது ஏற்றுமதியில் ஸ்டீல், விளையாட்டுப் பொருள்கள், தாதுப் பொருள்கள், மொபைல்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கெமிக்கல் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு கெமிக்கல் நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதிக அளவில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், இந்தத் துறையில் தொய்வு ஏற்பட்டது.

சீன-அமெரிக்க வர்த்தகத்தில் அதிக உரசல்கள் எழுந்துள்ள நிலையால், அத்தகைய நிறுவனங் களிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளின் வியாபார உத்திகளும் தற்போது மாறி வருகின்றன. இதை இந்திய நிறுவனங்கள் எவ்வாறு தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இருந்தாலும் அதற்கான விரிவாக்க முயற்சிகளை இந்திய நிறுவனங்கள் எடுத்துவருகின்றன.

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பங்குகள்! - முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

கோவிட் 19-ன் காரணமாக சீன நிறுவனங்கள் சந்தித்த ஒட்டுமொத்த உற்பத்தி நிறுத்தம், தரை, வான்வெளி, கடல் போக்குவரத்து இல்லாததால் மூலப்பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு நாட்டில் உற்பத்தி செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சீனாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்யும் நாடுகளை மிகவும் கவலையடையச் செய்துள்ளன. அதாவது, நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு ஒரே நாட்டைச் சார்ந்திருப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளன. ஒரு நாட்டின் உற்பத்தி இழப்பு என்பது சில நேரங்களில் மற்ற நாடுகளுக்குப் பயனளிக்கும் வகையில் மாறுகிறது.

இந்தியாவின் எதிர்பார்ப்புகள்!

சீனாவின் கெமிக்கல் துறையில் ஏற்பட்டிருக்கும் 25% வர்த்தக இழப்புகள், ஐரோப்பிய நாடுகளில் 17% மற்றும் ஜப்பானில் 7% என ஏற்பட்டுள்ள வர்த்தக இடமாற்றங்கள் இவை அனைத்தும் 3.3% மட்டுமே வர்த்தகத்தைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு நிச்சயம் பலனளிக்கும் என நம்பப்படுகிறது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்தியாவில் மொத்தமுள்ள சுமார் 700 கெமிக்கல் நிறுவனங்களின் உற்பத்தியில், முக்கிய 20 நிறுவனங்கள் 48 சதவிகிதத்தை ஒட்டியும், மீதமுள்ள 680 நிறுவனங்கள் 52 சதவிகிதத்தை ஒட்டியும் பங்களித்துவருகின்றன. நம் நாட்டில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்திய பிறகு முறைப்படுத்தப்பட்ட (ஆர்கனைஸ்டு) நிறுவனங்களின் வர்த்தகச் செயல்பாடுகள் முன்னுரிமை பெறத் தொடங்கின. இப்போது கோவிட்19-க்குப் பிறகு, சிறு நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம், அடிப்படைப் பொருள்கள், ஊழியர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்க வாய்ப்பிருப்பதாகவும், இதனால் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும் கருதப்படுகிறது. அடுத்த ஐந்து வருடங்களில், அதாவது 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஸ்பெஷாலிட்டி வர்த்தகத்தின் அளவு ஆண்டொன்றுக்கு 10% வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வர்த்தகத்தின் அளவு ஏறக்குறைய சீனாவின் வர்த்தகத்தில் 50 சதவிகிதமாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மொத்த வர்த்தகத்தில் 50 சதவிகிதமாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்திய நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், கோவிட்19-க்குப் பிறகு தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிகளை எடுத்து வருகின்றன.

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் துறையில் பெயின்ட் மற்றும் பூச்சு, அக்ரோ கெமிக்கல்ஸ், டை மற்றும் பிக்மென்ட்ஸ், ஸ்பெஷாலிட்டி பாலிமர், பிளாஸ்டிக் அடிட்டிவ்ஸ் ஆகியவை 60% பங்களிக்கின்றன.

இந்தியாவில் அதிகரிக்கும் தேவை!

கோவிட்19 தொடர்பான அச்சங்கள் நீங்கிய பிறகு, மேற்சொன்ன துறைகளின் தேவை இந்தியாவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த வருடம் ஜனவரி முதல் மே முதல் வாரம் வரையிலான காலத்தில் நிஃப்டி 24% இறக்கம் அடைந்திருப்பதையும், அதே சமயம் ஸ்பெஷாலிட்டி துறை பங்குகள் ஏற்றம் அடைந்திருப்பதையும்  விளக்கும் வரைபடம் இது.
இந்த வருடம் ஜனவரி முதல் மே முதல் வாரம் வரையிலான காலத்தில் நிஃப்டி 24% இறக்கம் அடைந்திருப்பதையும், அதே சமயம் ஸ்பெஷாலிட்டி துறை பங்குகள் ஏற்றம் அடைந்திருப்பதையும் விளக்கும் வரைபடம் இது.

1. உலக கெமிக்கல் துறையின் சராசரியான பயன்பாட்டில் இதுவரை இந்தியாவின் நுகர்வு 10% என்பதால், வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. 2019-ம் ஆண்டில் இந்திய ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் சந்தை, 35 பில்லியன் டாலரில் வர்த்தகமாகியிருக்கிறது.

2. அடுத்த பத்து வருடங்களில் இந்தியாவின் நடுத்தர வருமானத்தில் உள்ளவர்களின், அதாவது, 23% பேரின் செலவுகள் வாகனத்துறை, அழகுசாதனப் பொருள்கள், நீர் சுத்திகரிப்பு மற்றும் கட்டுமானம் போன்றவற்றில் அதிகமாக இருக்கும் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

3. நூறு சதவிகித வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மத்திய அரசாங்கம் சட்டத்தைத் திருத்தியிருப்பது சாதகமான வளர்ச்சி.

4. உள்நாட்டு கெமிக்கல் துறையில் (ஃபெர்ட்டிலைசர் நீங்கலாக) 3% அதாவது, 1.3 மில்லியன் டாலர் மட்டுமே 2018-ம் நிதியாண்டில் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டிருக்கின்றன.

இந்திய நிறுவனங்களின் துறை சார்ந்த பங்களிப்பும், அதன் செயல்பாடுகளும்...

பெயின்ட் துறை

இதில் வீட்டு உபயோகத்துக்கான வண்ணப் பூச்சு, வார்னிஷ் மற்றும் எனாமல் போன்றவையும், தொழில்துறையில் வாகனத்துக்கான பூச்சு, தொழில் நிறுவனங்களுக்கான பவுடர் பூச்சு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பூச்சு ஆகியவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்திய நிறுவனங்கள் 2019-ம் நிதியாண்டில் ரூ.5,000 கோடி களுக்கு மேல் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளன. இந்தத் துறையிலுள்ள முக்கியமான பங்கு நிறுவனங்கள்: ஏசியன் பெயின்ட்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ், கன்சாய் நெரோலெக் (kansai nerolac), அக்ஜோநோபல் (akzo nobel).

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பங்குகள்! - முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

ஒட்டுப்பசை & கசிவு நீக்கும் பிசின்

கட்டுமானத்துறை, வாகனத்துறை, லேமினேட்ஸ், காலணி தயாரிப்புகள், பேக்கேஜிங் ஆகிய அனைத்துத் துறைகளுக்கும் தேவைப்படும் ஒட்டுப்பசையாகவும், சில பொருள்களுக்கு சேர்க்கைகளாகவும் அடிட்டிவ்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் துறை வர்த்தகத்தின் அளவு 2025-ம் ஆண்டு வரையிலான காலத்தில், ஆண்டொன்றுக்கு 5.6 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப் பட்டிருக்கிறது. இந்தத் துறையிலுள்ள முக்கியமான பங்கு நிறுவனங்கள்: பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், ஹென்கல்.

நீர் மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு

குடிநீர், விவசாயம், தொழில்துறை ஆகியவற்றில் பல்வேறு கட்டங்களில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. குடிநீர் சுத்திகரிப்பு, பாலிமர், தொழில்துறை சந்திக்கும் கழிவுநீர் மாசகற்றுதல் மற்றும் கட்டுமானம் ஆகியவை முக்கியமானவையாக இருக்கின்றன.இந்தத் துறையிலுள்ள முக்கியமான பங்கு நிறுவனங்கள்: கெம்பாண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட், வா டெக் வபாக், இயான் எக்சேஜ்.

சாயம் மற்றும் நிறமிகள் போன்ற இடைமாற்றிகள்

இந்தத் துறை 2016-ம் ஆண்டு முதலே வளர்ச்சிப்பாதையில் இருக்கிறது. 2016-ம் ஆண்டில் 1,800 டாலராகவும், 2017-ம் ஆண்டில் 2,000 டாலராகவும், 2018-ம் ஆண்டில் 2,210 டாலராகவும் ஏற்றுமதி அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. டெக்ஸ்டைல் துறை, காகிதம் போன்றவற்றில் நிறமிகளின் பயன்பாடு காணப்படுகிறது. உலக அளவில் சாயம் மற்றும் நிறமிகள் உற்பத்தியில், இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 16 சதவிகிதமாக இருக்கிறது. இந்தத் துறையிலுள்ள முக்கியமான பங்கு நிறுவனங்கள்: பாதல் கெமிக்கல்ஸ், சுதர்ஷன் கெமிக்கல்ஸ்.

அக்ரோ கெமிக்கல்ஸ்

அக்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மொத்த உற்பத்தியில் 50% ஏற்றுமதியாக இருக்கும் நிலையில், அந்த ஏற்றுமதியில் துறை சார்ந்த முக்கிய பொருள்களைக் கொண்டிருப்பது முக்கிய அம்சம். பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், களைக்கொல்லிகள், குறிப்பிட்ட வகை பூச்சிக்கொல்லிகள் என்று நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் துறையிலுள்ள முக்கியமான பங்கு நிறுவனம்: ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ்.

மேற்கண்ட அனைத்து அம்சங்களையும் முதலீட்டாளர்கள் கருத்தில்கொண்டு முடிவுகளை எடுப்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கே சொல்லப்பட்டுள்ள பங்குகள் முதலீட்டுக்கான பரிந்துரை அல்ல.