கும்பகோணம் பேங்க் லிமிடெட் என்ற பெயரில் 1904-ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட வங்கிதான் இன்றைய சிட்டி யூனியன் பேங்க் லிமிடெட் ஆகும்.

நிறுவனத்தின் வளர்ச்சி

ஆரம்ப காலத்தில் ஒரு பிராந்திய வங்கியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தஞ்சை டெல்டா பகுதி முழுவதுமாக கால்பதித்தது. இந்த வங்கியின் முதல் கிளை 1930-ம் ஆண்டு மன்னார்குடியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்த 25 ஆண்டு காலகட்டத்தில் நாகப்பட்டினம், சன்னநல்லூர், அய்யம்பேட்டை, திருக்காட்டுப் பள்ளி, திருவாரூர், மணப்பாறை, மயிலாடுதுறை மற்றும் பொறையார் போன்ற ஊர்களில் கிளைகள் தொடங்கப்பட்டன.

1945-ம் ஆண்டில் இந்த வங்கி மத்திய ரிசர்வ் வங்கியின் இரண்டாவது ஷெட்யூலில் சேர்க்கப் பட்டதன் மூலம் ஒரு ஷெட்யூல்டு வங்கியாக அங்கீகரிக்கப்பட்டது. 1957-ம் ஆண்டு கும்பகோணம் பேங்க் லிமிடெட் அந்தச் சமயத்தில் ஆடுதுறை, கொடவாசல், வலங்கை மான், ஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களில் கிளைகளைக் கொண்டு இயங்கிவந்த காமன் வெல்த் பேங்க் லிமிடெட் எனும் வங்கியின் சொத்துகள் மற்றும் நிதி ரீதியான பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது.

1965-ம் ஆண்டில் ‘தி சிட்டி ஃபார்வெட் பேங்க் லிமிடெட்’ மற்றும் ‘தி யூனியன் பேங்க் லிமிடெட்’ என்ற இரண்டு உள்ளூர் வங்கிகளைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது இந்த வங்கி. இதன்மூலம் கும்ப கோணம் - டவுன், நன்னிலம், கொரடாச்சேரி, திருவிடைமருதூர், திருப்பனந்தாள் மற்றும் குத்தாலம் போன்ற ஊர்களில் ஆறு கிளைகளைப் பெற்றது. மேலும், இந்த இணைப்புக்குப் பின் இந்த வங்கியின் பெயர் ‘தி கும்பகோணம் சிட்டி யூனியன் பேங்க் லிமிடெட்’ என்று மாற்றம் செய்யப் பட்டது.

சென்னையில் முதன்முதலாக...

1965-ம் ஆண்டில் இந்த வங்கியின் கிளை சென்னையில் தியாகராய நகரில் திறக்கப்ட்ட்டது. 1965-ம் ஆண்டில் ஓ.ஆர்.சீனிவாசன் என்பவர் (முந்தைய ரிசர்வ் வங்கி அதிகாரி) இந்த வங்கியின் சி.இ.ஓ-வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவருடைய தலைமையின் கீழ் வேகமான கிளை விரிவாக்கம் செய்யப்பட்டது. 1968 முதல் 1973-ம் ஆண்டு காலகட்டத்தில் இரவஞ்சேரி, செம்பனார்கோயில், திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், கீழபலூர், திருமக்கோட்டை, கோட்டூர், திருவாரூர் டவுன் மற்றும் கோயம் புத்தூரில் கிளைகள் திறக்கப்பட்டன. 1974 முதல் 1976 வரையிலான கால கட்டத்தில் பெரியகுளம், மந்தை வெளி (சென்னை), பட்டுக்கோட்டை, திருவல்லிக்கேணி (சென்னை), கடலூர், புதுக்கோட்டை, சிதம்பரம் ஆகிய இடங்களில் இந்த வங்கி தன்னுடைய கிளைகளைத் தொடங்கியது.

1980-ம் ஆண்டில் முதல்முறையாக தமிழகம் தாண்டி வேறு மாநிலமான கர்நாடகாவில் பெங்களூருவில் உள்ள சுல்தான்பேட் எனும் இடத்தில் கிளையைத் தொடங்கியது இந்த வங்கி. இதற்குப் பின், ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத்தில் கிளைகள் தொடங்கப்பட்டன. அகில இந்திய ரீதியாகச் செயல்பட ஆரம்பித்த நிலையில் அதற்கேற்ப இந்த வங்கியின் பெயர் 1987-ம் ஆண்டில் ‘சிட்டி யூனியன் பேங்க் லிமிடெட்’ என்று மாற்றி அமைக்கப்பட்டது.

வேகமெடுத்த பணிகள்...

1990-ம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி இந்த வங்கிக்கு ஆதரைஸ்டு ஃபாரெக்ஸ் டீலர் அங்கீகாரத்தை வழங்கியது. 1990-களிலேயே இந்த வங்கி தன்னுடைய செயல்பாடுகளை கணினிமயமாக்கத் தொடங்கி கோர் பேங்கிங் நடைமுறையில் அனைத்து கிளைகளையும் இணைத்தது. மாறிவரும் தேவைகளுக்கேற்ப ஏ.டி.எம் மெஷின்களையும் அறிமுகப்படுத்தத் தொடங்கியது இந்த வங்கி. சிட்டி யூனியன் வங்கி இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிடம் இருந்து இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகம் செய்வதற்கான அங்கீ காரத்தைப் பெற்று எல்.ஐ.சி மற்றும் நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டது. அதேபோல, சிட்டி யூனியன் வங்கி எக்ஸ்போர்ட் கிரெடிட் & கியாரன்டி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஏற்றுமதி வர்த்தகத்துக்கான கிரெடிட் இன்ஷூரன்ஸ் புராடெக்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டுள்ளது. மேலும், அந்நிய செலாவணியைக் குறுகிய காலகட்டத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கணக்கில் பெற்றுத் தருவதற்கு ஏதுவாக பேங்க் ஆஃப் இந்தியா, தோஹா பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் யு.ஏ.இ எக்ஸ்சேஞ்ச் அண்ட் பைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் போன்ற நிறுவனங் களுடன் ஃப்ரான்சைஸ் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது இந்த வங்கி.

வங்கியின் நிதி பலம்...

இன்றைக்கு இந்த வங்கி எம்.எஸ். எம்.இ, ரீடெயில்/ஹோல்சேல் டிரேட் முதலிய துறைகளுக்கு வங்கி சேவைகளை அளிப்பதில் முக்கியத்துவத்தை அளித்து செயல்பட்டு வருகிறது. மேலும், விவசாயத்துக்கான குறுகியகால மற்றும் நீண்டகால கடன் வசதிகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

செப்டம்பர் 30, 2020 நிலவரப் படி, இந்த வங்கி ரூ.41,421 கோடி அளவிலான வைப்பு நிதிகளையும், ரூ.35,437 கோடி அளவிலான கடன்களை வழங்கியும் உள்ளது. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் இறுதி நிலவரப்படி, 4.12% அளவிலான நெட் இன்ட் ரெஸ்ட் மார்ஜினைக் கொண் டுள்ளது இந்த வங்கி.

700 கிளைகள் (தென் இந்தியாவில் மட்டும் 628. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 485), 5,769 பணியாளர்கள், 1,780 ஏ.டி.எம்- களைக் கொண்டு செப்டம்பர் 30, 2020 நிலவரப்படி இயங்கி வருகிறது இந்த வங்கி. நிகர என்.பி.ஏ இந்தக் காலகட்டத்தில் 1.81 சதவிகிதமாக இருந்தது.

எஸ்.எம்.இ மற்றும் எம்.எஸ்.எம்.இ-க்கான சேவைகளை வழங்குதல் பிரிவில் சிறப்பு கவனத்துடன் செயல்பட்டு வருகிற இந்த வங்கி இந்தப் பிரிவில் சீரான லாபத்தை ஈட்டி வருகிறது. இந்த வங்கி சேவைப் பிரிவில் சிறப்பான சேவையை வழங்கி வருவதன் மூலம் அதிக அளவிலான வாடிக்கையாளர் களைத் தன்வசத்தே நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது. இந்தவித செயல்பாட்டால் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான செலவினமும் இந்த வங்கியைப் பொறுத்தவரை குறைவாகவே இருக்கிறது.

எஸ்.எம்.இ துறையில் கவனம் செலுத்துவதால், இந்த வங்கி வழங்கியுள்ள கடன்கள் சிறிய அளவிலானதாகவே (granular) இருக்கிறது. மேலும், இந்த வகைக் கடன்கள் தனிநபர் உத்தரவாதம் மற்றும் வீட்டு அடமானம் போன்ற கூடுதல் பாதுகாப்புடன் வழங்கப்படுவதால், என்.பி.ஏ அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாகவே இருக்கிறது.

100 சதவிகித கோர் பேங்கிங் சொல்யூஷனை அறிமுகப் படுத்தியுள்ள நிலை மற்றும் பணியாளர்களைச் சிறப்பாகப் பணிபுரியச் செய்வதற்கான பயிற்சிகளை வழங்கும் பயிற்சி மையம் (ஸ்டாஃப் ட்ரெயினிங் காலேஜ்) போன்றவற்றையும் இந்த வங்கி கொண்டிருப்பது தனிச்சிறப்பாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரிய அளவிலான டெபாசிட்டு களை சார்ந்தில்லாது இருப்பதும், சர்ட்டிஃபிக்கேட் ஆஃப் டெபாசிட்டுகளை வழங்கா திருப்பதும் இந்த வங்கி ரீடெயில் டெபாசிட்டுகளைக் கருத்தில் கொண்டே செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதொரு விஷயமாகும்.

நல்லதொரு திடமான ‘கேப்பிடல் அடிக்வசி ரேஷியோ’வான 17.36% என்ற நிலையை இந்த வங்கி கொண்டிருக்கிறது (இதில் 16.29% டயர்-1 கேப்பிட்டல்).

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

வங்கித்துறையில் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத் துக்கும் பொருந்தும். பொதுவாக, வங்கித் துறை என்பது பொருளாதார முன்னேற் றத்தைச் சார்ந்தே வளர்ச்சி அடையக்கூடிய ஒன்றாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் தேக்க நிலையையோ, எதிர்பார்த்த அளவிலான வளர்ச்சியையோ அடையாமல்போனால் அது இந்த வங்கியின் செயல்பாட்டையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்கு பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்த ஒரு பங்கை வாங்குவதற்கு முன்னாலும் ஒரு செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்து ஆலோசித்து, அந்தப் பங்குகளில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே,, நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

- நாணயம் விகடன் டீம்

பிட்ஸ்

சிமென்ட் தேவை அதிகரித்து இருப்பதால், டால்மியா சிமென்ட்ஸ் அதன் வங்காள தொழில் துறையின் உற்பத்தித் திறனை 2.3 மில்லியன் டன் அதிகரிக்கிறது!

பிட்ஸ்

வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்ட்அப் அக்ரோமலின்(Aqgromalin), ஏஞ்சல் முதலீட்டாளர் களிடமிருந்து ரூ.2 கோடி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 400 நுண் பண்ணைகளை அமைக்கிறது!