யு.கே நிறுவனமான குளோரைடு எலெக்ட்ரிகல் ஸ்டோரேஜ் கம்பெனி என்ற நிறுவனம், 1920-ம் ஆண்டில் இந்தியாவில் இறக்குமதி வர்த்தகத்தை ஆரம்பித்ததன் மூலம் உருவானதுதான் இன்றைய எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம்.

நிறுவனத்தின் தொழில்...

தொகுத்து வைக்கப்பட்ட சக்திக்கான (packaged power) டெக்னாலஜி பிரிவில் இந்த நிறுவனம், இன்றைக்கு இந்தியாவில் மரபு சார்ந்த ஸ்டோரேஜ் பேட்டரிகள் மற்றும் அதிநவீன வால்வ் ரெகுலேட்டட் லெட்-ஆசிட் பேட்டரிகள் உற்பத்தியில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.

இந்தியா தவிர்த்து, இந்த நிறுவனம் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தன்னுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு வகைகளாக உபயோகப்படுத்தப் படுவதற்கான வகையிலான 2.5 ஏ.ஹெச் (AH) முதல் 20,600 ஏ.ஹெச் அளவு வரையிலான பேட்டரிகளை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் என்ற மூன்று விஷயங்களையும் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பு களான பேட்டரிகள் ஆட்டோ மொபைல், மின்சாரம், டெலிகாம், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் புராஜெக்ட் டுகள், கணினி உபயோகப்படுத்தும் நிறுவனங்கள், ரயில்வே மற்றும் ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் உபயோகிக்கப்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் சிறப்புகள்...

ஜப்பானிய நிறுவனமான புருக்கவா பேட்டரி கம்பெனி, ஹிட்டாச்சி, பிரேசில் நிறுவனமான மெளரா, ஆஸ்திரேலிய நிறுவனமான இகவுல்ட் மற்றும் அமெரிக்க நிறுவனங்களான ஈஸ்ட் பெஃன் மேனுஃபேக்சரிங் கம்பெனி மற்றும் அட்வான்ஸ்டு பேட்டரி கான்செப்ட் எல்.எல்.சி போன்ற நிறுவனங்களுடன் தொழில்நுட்பக் கூட்டணியை அமைத்துள்ள இந்த நிறுவனம், இதன் மூலம் உலகளாவிய தரத்துடன்கூடிய தொழில்நுட்ப ரீதியான உற்பத்தி வசதியைக் கொண்டு இயங்குகிறது.

உற்பத்தி வசதிகளின் அடிப் படையில் பார்த்தால், உலகில் இருக்கும் ஒருசில நிறுவனங்களே இந்த நிறுவனத்தின் அளவுக்கான வசதியைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மேற்கு வங்கம், ஹரியானா, மஹாராஸ்டிரா, தமிழ்நாடு, உத்தர்கண்ட் மாநிலங் களில் உற்பத்தி வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் ஒன்பது உற்பத்தி மையங்களில் ஏழு இடங்களில் பேட்டரிகள் உற்பத்தி செய்கின்றன.

எஞ்சியிருக்கும் இரண்டு உற்பத்தி மையங்களில் வீட்டு உபயோகத் துக்கான யு.பி.எஸ்-கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஏழு பேட்டரி உற்பத்தி மையங்களில் ஆண்டொன்றுக்கு எட்டு மில்லியன் யூனிட் அளவிலான ஆட்டோ மொபைல்களுக்கான (மோட்டார் சைக்கிள்களில் உபயோகிக்கப்படும் பேட்டரிகளையும் சேர்த்து) பேட்டரி களையும், 600 மில்லியன் ஆம்பியர்-ஹவர் அளவிலான இண்டஸ்ட்ரியல் பவருக்குத் தேவையான பேட்டரி களையும் உற்பத்தி செய்ய முடியும்.

அதி நவீன உற்பத்தி வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், தொடர்ந்து நவீன தொழில் நுட்பங்களுக்கு தன்னுடைய உற்பத்தி வசதிகளை மேம்படுத்திக்கொண்டும், வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்பு களுக்கு இணங்க புத்தம் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு களையும் செய்து வருகிறது.

இது தவிர, பேட்டரிகள் உற்பத்திக் கான தொழில்நுட்ப ஆராய்ச்சி வசதிகளையும் தன்வசத்தே கொண்டுள்ளது. இந்த ஆராய்ச்சி வசதி இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையின் அங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆராய்ச்சி மையத்தில் அறிவியல் மற்றும் டெக்னாலஜியில் ஆய்வு செய்து பட்டம் பெற்ற அறுபதுக்கும் மேற்பட்ட முனைவர்கள் மற்றும் தொழில்நுட்ப படிப்பை முடித்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நிறுவனத்தின் தொழில் பிரிவுகள்...

ஆட்டோமோட்டிவ் (இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், டிராக்டர்கள், இ-ரிக்ஷா, இன்வர்ட்டர், வீட்டு உபயோகத்துக்கான யு.பி.எஸ்.களுக்கானது), இண்டஸ்ட்ரியல் (பவர் மற்றும் புராஜெக்ட்களில் உபயோகப் படுத்தப்படுவது, டெலிகாம், ரயில்வே, டிராக்ஷன், சுரங்கங்களில் பணி புரிபவர்கள் அணியும் தலைக் கவசத்தில் இருக்கும் விளக்குக்கானது) மற்றும் ஏனைய தேவைகளுக்கான (நீர்மூழ்கிக் கப்பல்கள், சார்ஜர்ஸ் மற்றும் சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தியைச் செய்யும் மையத்தில் பயன்படுத்தப் படுவதற்கானது) பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் பொருள் களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக 150-க்கும் மேற்பட்ட வேர்ஹவுஸ்கள் மற்றும் விற்பனை அலுவலகங்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

50 நாடுகளுக்கு தன்னுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம் 5,300-க்கும் மேற்பட்ட பணியாளர்களையும், இந்தியாவில் 1,750-க்கும் மேற்பட்ட எக்ஸைட் கேர் டீலர்களையும், 1,500-க்கும் மேற்பட்ட எஸ்.எஃப் சோனிக் – எலைட் சேனல் பார்ட்னர்களை யும், இவர்களை உள்ளடக்கிய 48,000-க்கும் மேற்பட்ட நேரடி யான மற்றும் மறைமுகமான டீலர்களையும் கொண்டு செயல் பட்டுவருகிறது.

ஆட்டோமோட்டிவ் பிரிவில் 3 ஏ.ஹெச் முதல் 200 ஏ.ஹெச் வரையிலான பல்வேறு ரக பேட்டரிகளை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். 12 முதல் 77 மாதத்துக்கான பல்வேறு நிபந்தனைகளுடன்கூடிய வாரன்ட்டியை இந்த நிறுவனம் தயாரிக்கும் இந்த வகை பேட்டரி களுக்கு வழங்குகிறது. ஆண்டொன்றுக்கு 57 மில்லியன் எண்ணிக்கையிலான ஆட்டோ மோட்டிவ் பேட்டரிகளையும், ஐந்து பில்லியன் எண்ணிக்கை யிலான இண்டஸ்ட்ரியல் பேட்டரிகளையும் உற்பத்தி செய்யும் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதியைக் கொண்டிருக் கிறது இந்த நிறுவனம்.

வாடிக்கையாளர்கள்...

நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸூகி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, அசோக் லேலாண்ட், ஹோண்டா, ரெனால்ட், டொயோட்டா, வோல்க்ஸ்வாகன், நிசான், கியா, வோல்வோ, எம்.ஜி, ஃபோர்ஸ், ஜே.சி.பி, டாஃபே, ஜான் டீர், சொனாலிகா, எஸ்கார்ட்ஸ், ஏஸ், எஸ்.எம்.எல் இசூஸூ உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு புதிய வாகன உற்பத்தியாளர் களுக்கு (ஒ.இ.எம்) தன்னுடைய தயாரிப்புகளை சப்ளை செய்கிறது.

பஜாஜ், டி.வி.எஸ், பியாஜியோ, மஹிந்திரா, அதுல் உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் முக்கிய நிறுவனங்களும், ஹீரோ, டி.வி.எஸ், ஹோண்டா, யமஹா, ராயல் என்ஃபீல்டு, மஹிந்திரா டூ வீலர்ஸ், பஜாஜ், சுஸூகி, ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட பல இரண்டு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இந்த நிறுவனத்தின் வாடிக்கை யாளர்கள் என்பது குறிப்பிடத் தக்க விஷயமாகும்.

2019-ம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட கியா செல்டோஸ், எம்.ஜி ஹெக்டார், ஹூண்டாய் வென்யூ, டாடா மோட்டார்ஸ் கிராவிட்டாஸ் போன்ற வாகனங் களில் அந்த ஆண்டில் முழுக்க முழுக்க எக்ஸைட் இண்டஸ்ட் ரீஸின் தயாரிப்புகளே உபயோகப் படுத்தப்பட்டது.

என்ன ரிஸ்க்..?

இந்த நிறுவனத்தின் தயாரிப் புகள் உபயோகப் படுத்தப்படும் துறைகள் அனைத்துமே பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே வளர்ச்சி அடையும் துறைகளாகும்.

எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் தேக்கநிலையைச் சந்தித்தாலோ எதிர்பார்த்த அளவு வளர்ச்சியடையாது போனாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டையும் பாதிக்கலாம். தொழில்நுட்ப முன்னேற் றங்கள், மூலப்பொருள்கள் விலை உயர்வு, தொழில்ரீதியான போட்டி, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல் போன்ற வையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் என்றே சொல்ல வேண்டும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்கு பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்த ஒரு பங்கையும் வாங்குவதற்கு முன்னாலும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்து ஆலோசித்து அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

- நாணயம் விகடன் டீம்

பிட்ஸ்

பி.எம்.எஸ் (PMS) என சுருக்கமாக அழைக்கப் படும் போர்ட் ஃபோலியோ மேனேஜ் மென்ட் சர்வீசஸ் நிறுவனங்கள் கடந்த நவம்பரில் நிஃப்டி 50 இன்டெக்ஸை விட 62% குறைந்த வருமானம் தந்துள்ளது!

பிட்ஸ்

கோவிட்-19 காலத்தில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட டி.சி.எஸ் நிறுவனத்தின் ஏழு லட்சம் ஊழியர் களுக்கும் நன்றி சொல்லி கடிதம் எழுதியிருக் கிறார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன்!