Published:Updated:

எல் அண்ட் டி லிமிடெட்! - அறிவோம் பங்கு நிறுவனம்..!

எல் அண்ட் டி  லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
எல் அண்ட் டி லிமிடெட்

(NSE SYMBOL: LT, BSE CODE: 500510)

எல் அண்ட் டி லிமிடெட்! - அறிவோம் பங்கு நிறுவனம்..!

(NSE SYMBOL: LT, BSE CODE: 500510)

Published:Updated:
எல் அண்ட் டி  லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
எல் அண்ட் டி லிமிடெட்

KNOW YOUR COMPANY

லார்சன் & டியூப்ரோ (எல்&டி) நிறுவனம் டெக்னாலஜி, பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் ஃபைனான் ஷியல் சர்வீசஸ் துறையில் கால்பதித் திருக்கும் நிறுவனங்களைக் கொண்டிருக்கும் குழுமமாகும்.

நிறுவனத்தின் தொழில் பிரிவுகள்..!

கட்டுமானம், சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளுக்கான எந்திரங்கள் தயாரிப்பு, எலெக்ட்ரிக்கல் மற்றும் ஆட்டோ மேஷன், ரியாலிட்டி, ஹைட்ரோ கார்பன் இன்ஜினீயரிங், மெட்டலாஜிக்கல் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங், மின் பரிவர்த்தனை மற்றும் விநியோகம், தண்ணீர் & கழிவுப் பொருள்கள் சுத்திகரிப்பு மையங்கள், பெரிய அளவிலான கட்டுமானங்கள், போக்குவரத்து இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பது, ஹெவி இன்ஜினீயரிங் உள்ளிட்ட பல தொழில் பிரிவுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. புரொமோட்டர் இல்லாத நிறுவனம் என்பது இதன் தனிச் சிறப்பு.

எல் & டி பில்டிங் மற்றும் ஃபேக்டரி துறை கட்டுமான செயல்பாடுகளில் ஒரு முன்னணி இன்ஜினீயரிங், புரக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் (இ.பி.சி) நிறுவனமாகத் திகழ்கிறது. விமான நிலையங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள், கல்வி நிலையங்கள், ஐ.டி பார்க்குகள், அலுவலகம் செயல்படுவதற்கான கட்டுமானங்கள், டேட்டா சென்டர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மிகப்பெரிய அளவிலான குடியிருப்பு வசதிகள், சிமென்ட் உற்பத்தி ஆலைகள், இண்டஸ்ட்ரீயல் வேர்ஹவுஸ்கள், மற்றும் தொழிற்சாலைகளுக்கான கட்டுமானங்களை இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் செய்து தருகிறது எல் & டி நிறுவனம்.

எல் அண்ட் டி  லிமிடெட்! - அறிவோம் பங்கு நிறுவனம்..!

எல் & டி போக்குவரத்துக்கான கட்டுமானங்கள் பிரிவில் சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலையங் களுக்கான கட்டுமானங்களைச் செய்து தருகிறது இந்த நிறுவனம். இந்தக் கட்டுமானப் பிரிவில் எல் & டி நிறுவனம் சாலைகள், ஓடுதளங்கள் மற்றும் உயர்ந்த தாழ்வாரங்கள் (Elevated corridors) என்ற பிரிவு மற்றும் ரயில்வேக்கான கட்டுமானங்கள் செய்யும் பிரிவு என்ற இரண்டு ஸ்ட்ராட்டஜிக் பிசினஸ் பிரிவுகளைக் கொண்டு இயங்குகிறது.

கட்டுமானத் தொழில் பிரிவு...

எல் & டி நிறுவனம் ஹெவி சிவில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரிவில் ஒரு முன்னணி இன்ஜினீயரிங், புரக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் புராஜெக்டுகளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாகத் திகழ்ந்துவருகிறது. மெட்ரோ ரயில்கள், நியூக்ளியர் பிளான்டுகள், ஸ்பெஷல் ப்ரிஜ்கள், ஹைடல் மற்றும் சுரங்கங்கள், சிறிய மற்றும் பெரிய துறைமுகங்களைக் கட்டுமானம் செய்வதில் முன்னணியில் இருக்கிறது எல் & டி நிறுவனம். இந்த வகை புராஜெக்டுகள் நாட்டின் பொருளா தாரத்துக்கு வலுச்சேர்க்க வல்லவை யாகும். கடந்த நிதியாண்டில் எல் & டி நிறுவனம் ஹைதராபாத் மெட்ரோ வைக் கட்டுமானம் செய்து முடித்தது.

எல் அண்ட் டி  லிமிடெட்! - அறிவோம் பங்கு நிறுவனம்..!

எல்&டி நிறுவனத்தின் பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் கட்டுமானப் பிரிவு இன்ஜினீயரிங், புரக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் புராஜெக்ட்டு களை பவர் டிரான்ஸ்மிஷன் & டிஸ்ட்ரிப்யூஷன் மற்றும் சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சாரக் கட்டமைப்புகளை அமைத்துத் தருவதில் முன்னணியில் இருக்கிறது.

இந்தத் தொழில் பிரிவில் ஒருங்கிணைந்த வசதிகளாக டிசைன், தேவையான உபகரணங்களின் உற்பத்தி மற்றும் சப்ளை, டிரான்ஸ் மிஷன் லைன்கள், சப்ஸ்டேஷன்கள், நிலத்தின் அடியில் செல்லும் கேபிள்கள், டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க்குகள், மின்சார மேலாண்மைக்கான கட்டுமானங்கள், இவற்றுக்குப் பின்புலமாக இருக்கும் பைபர் ஆப்டிக் பேக்போன் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் உள்ளிட்ட பல விஷயங்களை நிறுவுதல் மற்றும் மின்சார சப்ளையை ஆரம்பித்து வைத்தல் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்துதருகிறது.

எல் அண்ட் டி  லிமிடெட்! - அறிவோம் பங்கு நிறுவனம்..!

எல் & டி நிறுவனத்தின் தண்ணீர் மற்றும் சுத்திகரிப்பு நிலையப் பிரிவு தண்ணீர் சப்ளை மற்றும் சுத்தி கரிப்புக்கான இன்ஃப்ராஸ்டரக்சரைத் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கித் தருவதில் முன்னணி நிலைமையில் இருக்கிறது. இந்தத் தொழில் பிரிவைப் பொறுத்தவரை, இந்தியா மற்றும் அயல்நாடுகளிலும் எல் & டி நிறுவனம் முன்னணி நிலையைக் கொண்டிருக்கிறது.

பாதுகாப்பான நகரங்கள்...

2016-ம் ஆண்டு எல் & டி நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட் வேர்ல்டு மற்றும் கம்யூனிக்கேஷன் பிரிவு வளர்ந்து வரும் இந்தியாவின் தேவைகளான பாதுகாப்பு, ஸ்மார்ட் மற்றும் டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வசதிகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரிவு ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஸ்மார்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், சேஃப் சிட்டி (மக்கள் பாதுகாப்பு, நகரங்களில் உள்ள முக்கியமான இன்ஃப்ராஸ்ட்ரக்சர்களின் பாதுகாப்பு, இன்டெலிஜென்ட் டிராஃபிக் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல சேவை களை உள்ளடக்கியது), கம்யூனிகேஷன் மற்றும் டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சரை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்கிறது.

எல் & டி நிறுவனத்தின் மெட்டலர் ஜிக்கல் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங் தொழில் பிரிவில் உலோக உற்பத்திக்கான தொழிற் சாலைகளுக்கான இன்ஜினீயரிங், புரக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தாதுக்களை எடுப்பதில் ஆரம்பித்து அவை கடைசி நிலை உலோகங்களாக ஆகும் வரை யிலான அனைத்துப் படிநிலை களுக்கும் தேவையான கட்டு மானம் மற்றும் உபகரணங்கள் அனைத்தையும் இந்தப் பிரிவு செய்துதருகிறது.

இந்தத் தொழில் பிரிவில் பிளான்ட்கள், மினரல் க்ரஷ்ஷிங் எக்யூப்மென்ட்கள், சர்பேஸ் மைனர்கள், பிரீமியம் சாண்ட் பிளான்ட்கள், மெட்டீரியல் ஹேண்ட்லிங் எக்யூப்மென்ட்கள் போன்றவற்றை சப்ளை செய்கிறது இந்த நிறுவனம்.

சிமென்ட், சுரங்கம், மின்சாரம், கட்டுமானம், ஸ்டீல், உரம், கெமிக்கல் உற்பத்தி போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை களுக்கான உபகரணங்கள் மற்றும் அவை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்கிறது மெட்டலர் ஜிக்கல் மற்றும் மெட்டீரியல் ஹேண்ட்லிங் தொழில் பிரிவு எனலாம்.

எல் & டி நிறுவனத்தின் ஹெவி இன்ஜினீயரிங் பிரிவு ரிபைனரி, பெட்ரோகெமிக்கல், ஆயில் மற்றும் கேஸ், ஃபெர்டிலைசர், தெர்மல் மற்றும் நியூக்ளியர் பவர் உற்பத்தி நிலையங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்து தலுக்குத் தேவையான அனைத்து வகை உபகரணங்களையும் உற்பத்தி செய்தும் இந்த வித ஆலைகளை நிர்மாணம் செய்தும் தருகிறது.

நிறுவன செயல்பாடுகள்!

கடந்த நிதியாண்டின் இறுதியில் எல் & டி குழுமத்தின் விற்றுவரவானது ரூ.1,45,500 கோடி என்ற அளவில் இருந்தது. கடந்த நிதியாண்டின் இறுதியில் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த நிறுவனத்துக்குக் கிடைத்திருந்த ஆர்டர்கள் 4% அளவு (ஆர்டர் புக்) அதிகரித்தும், வரிக்குப் பிந்தைய லாபம் 7% அளவு அதிகரித்தும், விற்றுவரவு 8% அளவு அதிகரித்தும் இருந்தது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் எல் & டி நிறுவனம் இந்திய அரசு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய ராணுவத்துக்காக நிலம், ஆகாயம் மற்றும் கடலில் பயன்படுத்தக் கூடிய அளவிலான உபகரணங் களைத் தயாரித்து வருகிறது.

எல் & டி நிறுவனம் (ஸ்டாண்ட்-அலோன்) கடந்த நிதியாண்டின் இறுதி நிலவரப்படி 82,384 கோடி ரூபாய் அளவிலான விற்றுவரவையும் ரூ.51,175 கோடி அளவிலான நெட்வொர்த்தையும் கொண்டிருந்தது. கடந்த நிதியாண்டின் இறுதியில் எல் & டி நிறுவனம் 45,467 பணியாளர்களைக் கொண்டிருந்தது.

எல் & டி நிறுவனம் இயங்கிவரும் துறை பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே முழுக்க முழுக்க வளர்ச்சியடையும் துறையாகும். எனவே, பொருளாதார வளர்ச்சி தேக்க நிலையைச் சந்தித்தால் அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும். மூலப்பொருள்கள் விலை உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், அரசின் கொள்கை முடிவுகள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளேயாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்கு பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால் எந்த ஒரு பங்கை வாங்குவதற்கு முன்பும் ஒரு செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்து ஆலோசித்து அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

- நாணயம் டீம்

பிட்ஸ்

ருகிற திங்கள்கிழமை முதல் (14-ம் தேதி) ஆர்.டி.ஜி.எஸ் முறையில் ஒரு நாளில் 24 மணி நேரமும் அனுப்பும் வசதி மக்களுக்குக் கிடைக்க வழிசெய்து தந்திருக்கிறார் ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகந்த தாஸ்!

பிட்ஸ்

பி.எம் வாணி (PM-Wani) திட்டத்தின்கீழ் இந்தியா முழுக்க ஒரு கோடி டேட்டா சென்டர்கள் அமைக்கப் படும் என்று அறிவித்திருக் கிறார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இதற்கு எந்த அனுமதி வாங்கத் தேவையில்லை எனவும் அவர் சொல்லி இருக்கிறார்!