Published:Updated:

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் - அறிவோம் பங்கு நிறுவனம்..!

மஹிந்திரா லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
News
மஹிந்திரா லிமிடெட்

(NSE SYMBOL: M&M, BSE CODE: 500520)

KNOW YOUR COMPANY

ஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனம் 1945-ம் ஆண்டில் ஜேசி மற்றும் கேசி மஹிந்திரா சகோதரர்கள், குலாம் முகமது என்பவருடன் இணைந்து மஹிந்திரா & முகமது என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

நிறுவனத்தின் வரலாறு...

ஆரம்ப காலத்தில் யுனைட்டெட் கிங்டமில் இருந்த சப்ளையர்களின் உதவியுடன் ஸ்டீல் டிரேடிங்கை ஆரம்பித்தது இந்த நிறுவனம். 1947-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான வில்லிஸ் ஓவர்லேண்ட் எக்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்திட மிருந்து 75 ஜீப்புகள் சிகேடி (உதிரி பாகங்களாக இறக்குமதி) ரூபத்தில் இறக்குமதி செய்யப்பட்டு மும்பைக்கு அருகே உள்ள மஸகன் எனும் இடத்தில் கட்டமைக்கப்பட்டது.

1948-ல் மஹிந்திரா & மஹிந்திரா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த நிறுவனம், 1950-ம் ஆண்டில் மிட்சுபிஷி நிறுவனத்திடமிருந்து 5,000 டன் ஸ்டீலை இறக்குமதி செய்து அதன்மூலம் வேகன்களைக் கட்டு மானம் செய்தது.

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் - அறிவோம் பங்கு நிறுவனம்..!

பொது பங்கு வெளியீடு...

1955-ம் ஆண்டில் பொதுப் பங்குகளை வெளியிட்டு, 1956-ம் ஆண்டில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம். பின்னர் 1961-ம் ஆண்டில் அமெரிக்க நிறுவனமான இன்டர்நேஷனல் ஹார்வெஸ்ட்டர் என்ற நிறுவனத் துடன் கூட்டணி அமைத்து டிராக்டர்கள் உற்பத்தியில் கால் பதித்தது. 1962-ம் ஆண்டில் பிரான்ஸ் நிறுவனமான யுஜின் குல்மேன் நிறுவனத்துடன் இணைந்து அல்லாய் ஸ்டீல் உற்பத்தியைத் தொடங்கியது. 1963-ம் ஆண்டில் இன்டர்நேஷனல் டிராக்டர் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தொடங்கப் பட்டது.

1965-ம் ஆண்டில் மஸகனில் உள்ள உற்பத்தி மையத்தில் உற்பத்தியை நிறைவடையச் செய்துவிட்டு மும்பைக்கு அருகே உள்ள கண்டி வாலி எனும் இடத்தில் டிராக்டர்கள் மற்றும் யுடிலிட்டி வெஹிள்ஸ் உற்பத்தியை ஒருங்கிணைத்து செய்ய ஆரம்பித்தது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம்.

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் - அறிவோம் பங்கு நிறுவனம்..!

1977-ம் ஆண்டில் இன்டர்நேஷனல் டிராக்டர் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிட்டெட் நிறுவனம், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. 1979-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு நிறுவனமான ப்யூஜியாட்டிடம் இருந்து எக்ஸ்டிபி 4.90 டீசல் இன்ஜின்களை உற்பத்தி செய்வதற்கான உரிமத்தைப் பெற்ற இந்த நிறுவனம் மும்பையில் உள்ள காட்கோபர் எனும் இடத்தில் இந்த இன்ஜின்களை அசெம்ப்ளி செய்ய ஆரம்பித்தது.

அதிக எண்ணிக்கையில் டிராக்டர் விற்பனை...

1983-ம் ஆண்டில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகும் டிராக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற நிலையை அடைந்த இந்த நிறுவனம், கடந்த மூன்று தசாப்தங்களாக அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 1999-ம் ஆண்டில் இந்த நிறுவனம் ஃபைனான்ஷியல் சர்விசஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்த இந்த நிறுவனம், அதன்மூலம் மஹிந்திரா & மஹிந்திராவின் யுட்டிலிட்டி வெஹிள்ஸ் வாங்குவோருக்கு கடன்வசதியை வழங்க ஆரம்பித்தது.

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் - அறிவோம் பங்கு நிறுவனம்..!

ஸ்கார்ப்பியோ அறிமுகம்...

2000-ம் ஆண்டில் மஹிந்திரா பொலிரோவை இந்த நிறுவனம், 2002-ம் ஆண்டில் மஹிந்திரா ஸ்கார்ப் பியோவை அறிமுகப்படுத்தியது. 2004-ம் ஆண்டில் மஹிந்திரா சிஸ்டம்ஸ் & ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் செக்டார் நிறுவப்பட்டது. 2005-ம் ஆண்டில் இந்த நிறுவனம் சீனாவில் கால்பதித்தது.

மேலும், அதே ஆண்டில் இந்த நிறுவனம் ரெனால்ட் நிறுவனத் துடன் கூட்டணியை அமைத்தது. 2008-ம் ஆண்டில் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளைப் புரிவதில் கல்பதித்த இந்த நிறுவனம், அதே ஆண்டில் டூ-வீலர்கள் உற்பத்தியிலும் கால்பதித்தது. மேலும், அதே காலகட்டத்தில் பூனாவுக்கு அருகே உள்ள சகன் எனும் இடத்தில் உற்பத்தி வசதியை அமைத்தது. 2009-ம் ஆண்டில் மஹிந்திரா குழுமம் ஏரோஸ்பேஸ் துறையில் கால்பதித்தது. 2010-ம் ஆண்டில் ரேவா எலெக்ட்ரிக் வெஹிள்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தி இந்த நிறுவனம், 2012-ம் ஆண்டில் சென்னையில் மஹிந்திரா ரிசர்ச் வேலியை நிறுவியது.

11 துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில்...

2016-ம் ஆண்டில் சாம்போ ரோஸ் னெல்யு நிறுவனத்தைக் கையகப்படுத்திய இந்த நிறுவனம், ஜாவா மோட்டார் சைக்கிளை 2018-ம் ஆண்டில் இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது. இன்றைக்கு இந்தக் குழுமம் 22 துறைகளில் கால்பதித்து, 11 துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் 2.50 லட்சத்துக்கும் மேலான பணியாளர்களுடன் இயங்கும் குழுமமாக இருக்கிறது. ஏரோஸ்பேஸ், ஆஃப்டர் மார்க்கெட் (வாகனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய பழுது நீக்கு மற்றும் ஏனைய சேவைகள்), விவசாயத்துறை, ஆட்டோ மொபைல், சூரிய ஒளியில் இருந்து மின் உற்பத்தி, கட்டுமானத்துக்கான உபகரணங்கள், கன்சல்டிங், டிபென்ஸ், பார்ம் எக்யுப்மெண்ட், ஹாஸ்பிடாலிட்டி, ஐ.டி, இன்ஷூரன்ஸ் புரோக்கிங், லாஜிஸ்ட்டிக்ஸ், மின்சார ஜெனரேட்டர் உற்பத்தி, ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர், ரீடெயில், கிராமப்புற வீட்டுவசதிக் கடன், ஸ்டீல், டிரக் மற்றும் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், வாகன மற்றும் உபகரணங்களுக்கான கடன் வசதிகளை வழங்குதல் போன்ற துறைகளில் இந்தக் குழுமம்தான் முதலீடு செய்திருக்கும் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக கால்பதித் துள்ளது.

72 உற்பத்தி மையங்கள்...

ஒரு குழுமமாக இந்த நிறுவனத்துக்கு உலகளாவிய அளவில் 72 உற்பத்தி மையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கதொரு விஷயமாகும். இந்தியாவில் மொஹாலி, ஜெய்ப்பூர், ஹரித்துவார், ருத்ராப்பூர், வடோதரா, இகாட்புரி, பிதாம்பூர், கண்டிவலி, நாக்பூர், சகன், நாசிக், பெங்களூரு, சஹீராபாத் ஆகிய இடங்களில் இந்தக் குழுமத்தின் உற்பத்தி மையங்கள் இயங்கி வருகின்றன.

இன்றைக்கு உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கை ரீதியாக உலகின் மிகப் பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமாகவும், இந்தியாவின் மிகப் பெரிய யுட்டிலிட்டி வெஹிள்ஸ் உற்பத்தி நிறுவனமாகவும் திகழ்கிறது இந்த நிறுவனம்.

நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு...

கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்த நிலவரப்படி இந்திய டிராக்டர்கள் சந்தையில் கிட்டத்தட்ட 41.2% சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

2019-20 நிதியாண்டில் 3,01,915 டிராக்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம் (மஹிந்திரா, ஸ்வராஜ் மற்றும் டிராக்ஸ்டார் பிராண்டு களில்). 2019-20 நிதியாண்டில் இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 4,71,141 ஆட்டோ மொபைல் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி விற்பனை) செய்துள்ளது. இந்தக் குழுமத்துக்கு உலகளாவிய அளவில் 10 நாடுகளில் 20 ஆராய்ச்சி மையங்கள் (R&D) இருக்கின்றன.

நிறுவனத்தின் ரிஸ்குகள்...

இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் துறை பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு வளர்ச்சி பெறும் குணாதிசயத்தை முழுமையாகக் கொண்டதாகும்.

கோவிட்-19-னால் உலகளாவிய அளவில் உருவாகியுள்ள பொருளாதாரரீதியான நிச்சயமற்ற நிலை, தொழில்ரீதியாக உருவாகும் புதிய போட்டிகள், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி, அவ்வப்போது நடைமுறைக்கு வருகிற பிஎஸ்-6 போன்ற வாகனங்களுக்கான சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு, மரபுசாரா எரிபொருள்களைக் கொண்டு இயங்கும் வாகனங்களின் அறிமுகம், மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பு, வாகனங்களுக்கான வரிகள் போன்ற அனைத்தும் இந்த நிறுவனத் துக்கான ரிஸ்க்குகளாகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளை பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்கு பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால் எந்த ஒரு பங்குதனை வாங்குவதற்கு முன்னாலும் ஒரு செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்து ஆலோசித்து அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே இந்தப் பங்கை வாங்கும் நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும்.

- நாணயம் விகடன் டீம்

பிட்ஸ்

லா நிறுவனம் ஓசூரில் ரூ.2,400 கோடி முதலீட்டில் இ-ஸ்கூட்டர் களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்க முடிவெடுத்து உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்!

பிட்ஸ்

ம் நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளது. கன்ஸ்யூமர் கடந்த நவம்பரில் ப்ரைஸ் இண்டெக்ஸ் (CPI) 7.61 சதவிகிதத்தில் இருந்து 6.93 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. உணவுப் பொருள் களுக்கான பணவீக்கம் 11 சதவிகிதத்தில் இருந்து 9.43 சதவிகிதமாகக் குறைந்துள்ளது!