Published:Updated:

எல்.ஐ.சி பங்கு விலை மட்டுமல்ல... நிறுவனத்தின் நிகர லாபமும் 18% சரிவு!

எல்.ஐ.சி ஐ.பி.ஓ

சமீபத்தில் வெளியிட்ட காலாண்டு முடிவில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டில், அதன் நிகர லாபம் 18% சரிவைக் கண்டு 2,372 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது முந்தைய ஆண்டில், இதே காலாண்டில் 2,893 கோடி ரூபாயாக இருந்தது.

எல்.ஐ.சி பங்கு விலை மட்டுமல்ல... நிறுவனத்தின் நிகர லாபமும் 18% சரிவு!

சமீபத்தில் வெளியிட்ட காலாண்டு முடிவில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டில், அதன் நிகர லாபம் 18% சரிவைக் கண்டு 2,372 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது முந்தைய ஆண்டில், இதே காலாண்டில் 2,893 கோடி ரூபாயாக இருந்தது.

Published:Updated:
எல்.ஐ.சி ஐ.பி.ஓ
நாட்டின் முன்னணி பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு முதன்முறையாக, கடந்த நிதி ஆண்டு மற்றும் 4-ம் காலாண்டு முடிவை வெளியிட்டிருக்கிறது.

இந்நிறுவனம் அரசின் முழு கட்டுப்பாட்டில் இருந்தவரை அதன் லாப நஷ்ட கணக்குகள் பொதுவெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால், பங்குச் சந்தையில் பட்டியல் ஆன பிறகு அனைத்து நிறுவனங்களும் அதன் முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும் என்பதால், தற்போது எல்.ஐ.சி நிறுவனம் காலாண்டு நிதி நிலை முடிவை வெளியிட்டிருக்கிறது.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில் வெளியிட்ட அதன் காலாண்டு முடிவில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டில், அதன் நிகர லாபம் 18% சரிவினைக் கண்டு, 2,372 கோடி ரூபாயாக குறைந்துள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது முந்தைய ஆண்டில், இதே காலாண்டில் 2,893 கோடி ரூபாயாக இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே சமயத்தில் இதன் நிகர பிரீமியம் வருவாய் 1.44 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் ஒருங்கிணைந்த நிகர லாபமானது 17% சரிவைக் கண்டு 2,409 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,917 கோடி ரூபாயாக இருந்தது.

பங்குச்சந்தை சரிவு
பங்குச்சந்தை சரிவு
vikatan

மேலும் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்குக்கு 1.50 ரூபாய் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது. இதன் பங்கு வெளியீட்டு விலை 949 ரூபாயாக நிர்ணயம் செய்திருந்த நிலையில், மே-17 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட முதல் நாளே தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டது. ஏற்கெனவே இப்பங்கின் விலையானது ஐபிஓ விலையிருந்து கிட்டத்தட்ட 15% சரிவைக் கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சுமார்ரூ.820-க்கு வர்த்தகமானது. தற்போதைய நிலையில் இதன் 52 வார உச்ச விலை ரூ.949-ஆகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை ரூ.801-ஆகவும் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism