சென்செக்ஸ் மார்ச் 23-ல் 25000-க்கு வந்தது. நவம்பர் 6-ம் தேதி 42000 இப்போது 46000. இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு விரைவாக சந்தை மீளும் என்று பெரும்பாலானோர் எதிர்பார்க்காததுதான்.
சந்தையின் இந்த உச்சியில், பொருளாதார மந்தத்தில் நாம் என்ன செய்யலாம்? இந்தப் புதிய சூழலுக்கு ஏற்ப பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த ஃபண்டுகளை வைத்துக்கொள்ளலாம். இனி லாபம் அதிகம் வரப்போவதில்லை என்ற முதலீடுகளை விற்று லாபத்தை நிரந்தரமாக்கிக்கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.

பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த ஃபண்டுகளை வாங்குவதுபோலவே விற்பதும் ஒரு முக்கியமான வேலை. இது விற்பதற்கான நேரம் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் சந்தைக்கு வந்த புதிய முதலீட்டாளர்கள் அதிகம். இவர்கள் லாபம் இருக்கும் தருணத்தில் அந்தப் பங்குகளை, ஃபண்டுகளை விற்று நிரந்தரமாக்கிக்கொள்வது நல்லது. பங்கு சார்ந்த ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்களுக்கு தற்சமயம் பணம் தேவையில்லை என்று தோன்றும்பட்சத்தில் ஃபண்டுகளைத் தொடர்ந்து வரலாம். கிடைத்த லாபம் போதும் என்ற எண்ணம் உள்ளவர்கள் ஓரளவு லாபத்தில் உள்ள ஃபண்டுகளை விற்கலாம்.
பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த ஃபண்டுகளை குறுகிய காலத்தில் விற்கும்போது மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.