Published:Updated:

மினி தொடர் - 6 - ரிஸ்க் குறைவான நிறுவனங்களைக் கண்டறிவது எப்படி?

பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
பங்கு முதலீடு

லாபத்துக்கு வழிகாட்டும் பங்கு முதலீடு!

ழைய முதலீட்டுக் கோட்பாடுகள் இன்றைய சூழலில் நம் நாட்டுக்கு ஏன் உதவாது எனக் கடந்த வாரம் பார்த்தோம். இன்றைய சூழலில், நம் நாட்டில் முதலீடு செய்ய எந்த மாதிரியான நவீன அளவீடுகள் உதவும் என்பதை இந்த வாரம் பார்ப்போம்.

லாபத்துக்கு வழிகாட்டும் அளவுகோல்கள்..!

கணக்கியல்ரீதியான ரிஸ்க், விற்றுவரவில் வளர்ச்சி விகித ரிஸ்க், நிகர லாப வளர்ச்சி ரிஸ்க் போன்றவற்றைக் கண்டறிவதற்கு ஒரு சிறந்த ஃபில்டர் (வடிகட்டும் முறை) இருக்கிறது. பத்து ஆண்டுக் காலத்துக்கும் மேலான காலகட்டத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்துவரும் விற்றுவரவு வளர்ச்சி, தொடர்ந்து 15 சதவிகிதத்துக்கும் மேலான ரிட்டர்ன் ஆன் கேப்பிட்டல் எம்ப்ளாயிடு (RoCE) மற்றும் பங்குச்சந்தை குறியீடான நிஃப்டியில் எதிர்கொள்ளும் ஏற்ற இறக்கத்தில் பாதி அளவுக்கும் குறைவான ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் ஆகிய மூன்று பண்புகளை ஒன்றாகக்கொண்டிருக்கும் நிறுவனங்களெல்லாம் மேலே சொன்ன மூன்று வகை ரிஸ்க்குகளைக் குறைவாகவே கொண்டிருக்கின்றன.

மினி தொடர் - 6 - ரிஸ்க் குறைவான நிறுவனங்களைக் கண்டறிவது எப்படி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த மாதிரியான நிறுவனங்களை மட்டுமே கொண்டிருக்கும் போர்ட்ஃபோலியோவில் செய்யப்படும் முதலீடுகள் நிஃப்டியை விடச் சிறந்த ரிட்டர்னைத் தருவதாக இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், இது போன்ற ஒரு போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வது இந்தியாவிலிருக்கும் ஏனைய முதலீட்டு வாய்ப்புகளான ரியல் எஸ்டேட், பிரைவேட் ஈக்விட்டி, அரசுக் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதைக் காட்டிலும் சிறந்த ரிட்டர்னைத் தருவதாக இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரை, இந்தவித அதிகப்படியான ரிட்டர்னைப் பெறப் பழங்கால நடைமுறையான சி.ஏ.பி.எம் (CAPM) சொல்லும் அளவுக்கான அதிகப்படியான ரிஸ்க்கை எடுக்க வேண்டாம் என உங்களுக்குப் புரிகிறதா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

என்ன காரணம்?

ஒரு நிறுவனம் தொடர்ந்து பத்து ஆண்டுகள் இரண்டு இலக்க (சதவிகிதத்தில்) விற்பனை வளர்ச்சியை எட்டுகிறது எனில், அது பொருளாதார ஏற்ற / இறக்கச் சுழற்சியையும் தாண்டி, மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களையே உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது என்றுதான் அர்த்தம். மேலும், தொடர்ந்து 15 சதவிகிதத்துக்கும் மேலாக ஆர்.ஓ.சி.இ-யைக் கொண்டிருக்கிறது என்றால், அது செயல்படும் துறையில் நிச்சயமாக மிகப்பெரியதாகவும் போட்டியாளர்களைவிட அதிக அனுகூலங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.

பங்கு முதலீடு
பங்கு முதலீடு

`நிஃப்டியில் இருக்கும் கம்பெனிகளில் பெரும்பாலானவை கடந்த 10 ஆண்டுகளில் ஒரு தடவைகூட 15 சதவிகிதத்துக்கும் மேலான ஆர்.ஓ.சி.இ-யைச் சம்பாதிக்கவில்லை’ என்பது ஒரு கூடுதல் தகவல். இந்த மாதிரியான ரிஸ்க்குகளைத் தவிர்ப்பது நல்லதே தவிர, இவற்றை எதிர்கொள்வதால், எந்தவித நன்மையும் நமக்குக் கிடைக்காது.

ஏனென்றால், மேலே சொல்லப்பட்ட ரிஸ்க்குகள் நெருக்கடியான காலகட்டங்களில் பிரமாண்டமாக உருவெடுத்து, முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை உருவாக்கும் பாதகங்களைச் செய்வதில் மிக முக்கியமானவையாக ஆகிவிடுகின்றன. எப்போதுமே சந்தை பெரிய அளவிலான சரிவைச் சந்தித்து, சந்தையில் நிதி திரட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலையிலேயே மிகப்பெரும் நிறுவனங்களின் கணக்கியல் சார்ந்த ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும்.

பங்கு முதலீடு
பங்கு முதலீடு

உதாரணமாக, 2001-ல் டாட்காம் ஏற்றம் முடிவடைந்து சந்தை சரிய ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா தீவிரவாதிகளால் விமானம் மூலம் தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த சந்தைச் சரிவின் பின்னாலேயே ஜூலை 2002-ல் வேர்ல்டுகாம் நிறுவனம் திவாலானதாக அறிவித்தது.

லெஹ்மென் பிரச்னை வெளிவந்த பிறகுதான் அதாவது, டிசம்பர் 2008-ம் ஆண்டு பெர்னி மெட்ஆஃப், தான் நடத்திவந்த வெல்த் மேனேஜ்மென்ட் திட்டத்தை ஒரு மோசடித் திட்டம் (Ponzi scheme) என ஒப்புக்கொண்டார். இதேபோல, லெஹ்மென் பிரதர்ஸ் பிரச்னை வெளிவந்த நான்கு மாதங்கள் கழித்து, ஜனவரி 2009-ல் சத்யம் கம்ப்யூட்டர் பிரச்னை வெளிவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தைச் சரிவில் மோசடிகள் வெளிவருவது ஏன்?

சந்தைச்சரிவில் ஏன் இந்தவித ரிஸ்க்குகள் பூதாகரம் எடுக்கின்றன? கணக்கியலில் புரொமோட்டர்களின் தேவை மற்றும் ஆசையின் பொருட்டு கம்பெனியிலிருந்து எடுத்துச் செல்வதால்தான் நிறுவனங்களின் கணக்குகளில் தகிடுதத்தங்கள் செய்யப்படுகின்றன. சந்தை நன்றாகச் செயல்படும்போது நிறுவனத்திலிருந்து பணத்தை வெளியே எடுப்பது, திருப்பிவைப்பது என்பதெல்லாம் சாதாரணமாக நடந்து, யாருடைய கவனத்துக்கும் வராமலேயே போய்விடும். ஏனென்றால், தேவைப்படும்போது புரொமோட்டர்கள் அவர்களுக்கு வேண்டிய பணத்தைச் சந்தையில் (கடனாக) திரட்டிக் கொள்ள முடியும் அல்லது கம்பெனியே தனக்குத் தேவையான பணத்தைக் குறுகிய காலத்துக்குச் சுலபத்தில் திரட்டிக்கொள்ள முடியும்.

மினி தொடர் - 6 - ரிஸ்க் குறைவான நிறுவனங்களைக் கண்டறிவது எப்படி?

பணம் அபரிமிதமாகக் கிடைக்கும்போது, என்னதான் தகிடுதத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலுமே கணக்கு வழக்கெல்லாம் சரியாகப் போவதைப் போன்ற ஒரு தோற்றம் இருக்கவே செய்யும். தேவைப்படும் பணம் சந்தையில் உடனடியாகக் கிடைக்காமல் போகும்போதுதான் நிறுவனத்தின் பணியாளர்கள், சப்ளையர்கள், நிறுவனத்துக்குக் கடன் தந்தவர்கள் போன்றவர்களுக்குப் பணத்தைச் சரியான நேரத்தில் நிறுவனத்தால் திருப்பித் தர முடியாமல் போகிறது. அந்தச் சூழ்நிலையில்தான் புரொமோட்டர்கள் ஓட்டம் எடுக்கின்றனர்.

இரண்டாவதாக, புரொமோட்டர்கள் நிறுவனங்களிலிருந்து எடுத்த பணம் ரியல் எஸ்டேட்டிலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டு அந்தச் சொத்துகளின் பெயரிலும் (ஈடாகக் கொடுத்து) கடன் பெறப்பட்டிருக்கும். சந்தையில் சரிவு வரும்போது அந்தச் சொத்துகளுக்கு ஈடாகக் கடன் கொடுத்தவர்கள் மார்ஜின் பணம் கேட்க (சந்தை விலைக்கும் கடன் கொடுத்த தொகைக்கும் இடையே உள்ள நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியைப் பூர்த்தி செய்யும் பொருட்டு), அந்த மார்ஜின் பணத்தைக் கட்ட முடியாமலும், அடகுவைத்த சொத்தை மீட்பதற்காகக் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த முடியாமலும் புரொமோட்டர்கள் ஓட்டம் எடுக்கின்றனர். ஆகஸ்ட் 2017-க்குப் பிறகு இரண்டு முக்கிய ஜுவல்லரி அதிபர்கள் ஓட்டம் எடுத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏதாவது அதிசயம் நடந்து ரியல் எஸ்டேட்டின் விலையும், அந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளின் விலையும் ஏற்றம் காணாவிட்டால் ரியல் எஸ்டேட் துறையிலும் இது போன்ற சில விஷயங்கள் நடந்துவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

இறுதியாக, பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது தொழில் விரிவாக்கத்துக்கும், நடப்புக்கும் (Working Capital) தேவையான அதிகப்படியான பணத்தை நிறுவனம் அவ்வப்போது திரட்டிக்கொள்வதை பங்குதாரர்களோ, ஆடிட்டர்களோ அல்லது கடன் வழங்குபவர்களோ ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை. அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சி சீர்குலையும்போது மேலே சொன்ன நபர்கள் அனைவருமே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு இதைப் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர்.

கணக்குவழக்குகளைச் சரியாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம்!

பி.எஸ்.இ-500 குறியீட்டு எண்ணில் இருக்கும் பங்குகளில் 12% பங்குகள் (கிட்டத்தட்ட 60 நிறுவனங்கள்) ஆண்டுக்கு ஒரு முறை வெளியேறி புதிய நிறுவனங்கள் உள்ளே வருகின்றன. நிறைய நிறுவனங்களால் குறியீட்டு எண்ணில் இருக்கத் தேவையான தகுதிகளைத் தக்கவைத்துக்கொள்ள முடிவதில்லை என்பதையே இந்த மாற்றங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்தக் குறியீட்டு எண்ணைக் கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுக் காலகட்டத்தில் கூர்ந்து நோக்கினால், நிறுவனங்கள் பலவும் இந்தக் குறியீட்டை விட்டு வெளியேறுவதற்குப் பொருளாதார சுழற்சி என்பது ஒரு காரணம் இல்லை என்பது புரியும்.

பங்கு முதலீடு
பங்கு முதலீடு

பெரும்பாலான நிறுவனங்கள் பி.எஸ்.இ-500 குறியீட்டு எண்ணைவிட்டு வெளியேறியதற்குக் காரணமாக இருப்பது, கார்ப்பரேட் கவர்னன்ஸ் குறைபாடுகளும், கணக்கியல்ரீதியான குறைபாடுகளுமே.

டிசம்பர் 2009-ம் ஆண்டிலிருந்து பத்து ஆண்டுகள் என்ற ரீதியில் கணக்கீடு செய்தால், பி.எஸ்.இ500-ல் இருந்த 500 நிறுவனங்களில் 274 நிறுவனங்களே இன்னும் குறியீட்டில் பங்கெடுத்துக்கொண்டு இருக்கின்றன. அதாவது, கடைசி பத்து வருடங்களில் 45% நிறுவனங்கள் பி.எஸ்.இ500-ஐ விட்டு வெளியேறியுள்ளன. இப்படி வெளியேறிய பங்குகள் அனைத்துமே முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான இழப்பை ஏற்படுத்திவிட்டே சென்றுள்ளன. சுமார் 40% அளவிலான மதிப்பை இழந்தன. அதாவது, பி.எஸ்.இ-500-ல் இருந்துகொண்டு வெற்றி பெற்று லாபம் ஈட்டித் தந்த பஜாஜ் ஃபைனான்ஸ் அல்லது எய்ச்சர் மோட்டார்ஸ் போன்ற நிறுவனத்துக்கும் சமமாக ஒரு எஜுகாம்ப் மற்றும் லான்கோ இன்ஃப்ராடெக் போன்ற பங்குகள் படுதோல்வியைத் தழுவி, முதலீட்டாளருக்கு நஷ்டத்தை (பெரும்பாலும் கார்ப்பரேட் கவர்னன்ஸ்/கணக்கியல் குறைபாடுகள் காரணமாக) ஏற்படுத்திய நிறுவனம் இருந்திருக்கிறது.

பங்கு முதலீடு
பங்கு முதலீடு

இன்னும் தீவிரமாக இதை ஆராய்ந்தால், இந்தப் பத்து ஆண்டுகளில் பெரும் வெற்றி பெற்று அளவு கடந்த லாபத்தை முதலீட்டாளர்களுக்குத் தந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும், மிகப்பெரும் நஷ்டத்தைத் தந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவுமே இருந்துவந்துள்ளன. இதிலிருந்து முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நல்ல நிறுவனங்களைக் கண்டுபிடித்து முதலீடு செய்வதற்கான திறமையைவிட, மோசமான நிறுவனங்களைக் கண்டறிந்து தள்ளி நிற்கும் திறமையே முதலீட்டாளர்களுக்கு மிக மிக அவசியம் என்பதைத்தான்.

(முதலிடுவோம்)