Published:Updated:

மினி தொடர் - 1 - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சூட்சுமங்கள்! - கொரோனாவுக்குப் பிறகான வழிகாட்டல்

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

உலக அளவில் எந்தெந்த நிறுவனம் பெரிய அளவிலான சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது பெரிய காரியமல்ல!

மினி தொடர் - 1 - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சூட்சுமங்கள்! - கொரோனாவுக்குப் பிறகான வழிகாட்டல்

உலக அளவில் எந்தெந்த நிறுவனம் பெரிய அளவிலான சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது பெரிய காரியமல்ல!

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை
லகப் பங்குச் சந்தைகள் 2019-ம் ஆண்டில் சிறப்பான வருமானத்தைத் தந்தன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். உலக அளவில் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகள் 10-25% வரையிலான ஏற்றத்தைக் கண்டிருந்தன.

அமெரிக்கக் குறியீடான டவ்ஜோன்ஸ் கிட்டத்தட்ட 22% அளவுக்கு முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை உயர்த்தியிருக்கிறது. எஃப்.டி.எஸ்.சி., ஹாங் செங் மற்றும் இந்தியாவின் முக்கியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட 12% அளவும், நிக்கி 18% அளவும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை உயர்த்தியிருந்தன.

மினி தொடர் - 1 - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சூட்சுமங்கள்! - கொரோனாவுக்குப் பிறகான வழிகாட்டல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், 2020-ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே கோவிட்-19 உலகச் சந்தையை எதிர்பாராதவிதமாகப் புரட்டிப்போட்டது. உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளின் உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் அசையாமல் சிலையென நின்றுபோயின. கொரோனா வைரஸின் தாக்கம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தவுடனேயே உலகப் பங்குச் சந்தைகள் சரிய ஆரம்பித்தன. முதல் காலாண்டு அளவீட்டில் பார்த்தால், பெரும்பாலான முன்னணிப் பங்குச் சந்தைக் குறியீடுகள் அதி வேகமான, மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தன.

முட்டுக்கட்டை போட்ட யெஸ் பேங்க்..!

இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாகவே நிறுவனங்களின் லாபம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி அடையாமல் இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் கோவிட்-19 வந்து முதலீட்டாளர்களுக்குப் பல புதிய பிரச்னைகளை உருவாக்கியது. இதற்கிடையில் யெஸ் பேங்க் பிரச்னை வேறு பூதாகரமாகக் கிளம்பியது. சில வாரங்களில் இந்தியப் பங்குச் சந்தையும் (உலகத்தின் பெரிய), பொருளாதாரமும் பெரிய அளவிலான சிக்கல்களைச் சந்திக்க ஆரம்பித்தன.

மினி தொடர் - 1 - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சூட்சுமங்கள்! - கொரோனாவுக்குப் பிறகான வழிகாட்டல்

சந்தையில் இந்த அளவுக்கான ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், எங்கள் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவான ‘கன்சிஸ்டென்ட் காம்பவுண்டர்ஸ்’ சந்தை இறங்கிய அளவில் பாதி என்ற அளவுக்கே வீழ்ச்சியடைந்தது. மார்ச், 2020-ல் நிறைவடைந்த 12 மாதங்களில் அந்த போர்ட்ஃபோலியோ 7.6% வருமானத்தைத் தந்திருந்தது. இதே காலகட்டத்தில் சந்தை கிட்டத்தட்ட 25% அளவிலான இறக்கத்தைச் சந்தித்திருந்தது. இது எப்படி சாத்தியம், இந்த போர்ட்ஃபோலியோ எப்படித் தேர்வு செய்யப்படுகிறது என்பது குறித்துத்தான் அடுத்த சில வாரங்களுக்குக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கப் போகிறோம். இந்த மினி தொடர் மூலம் கோவிட்-19 போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில்கூட பெரிய அளவில் பாதிப்படையாத போர்ட் ஃபோலியோவைத் தேர்வு செய்வது எப்படி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள உதவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோட்பாடு சொல்லும் உண்மை..!

`போட்டி நிறைந்த ஒரு பொருளாதார அமைப்பில் எந்த நிறுவனமும் தொடர்ந்து அதன் ‘காஸ்ட் ஆஃப் கேப்பிட்டலை’விட (Cost of capital-முதலீட்டைத் திரட்டுவதற்கான செலவு) அதிக அளவிலான வருமானத்தைச் சம்பாதிக்க முடியாது’ என்று சொல்கின்றன பொருளாதாரக் கோட்பாடுகள். ஏனென்றால், ஒரு நிறுவனம் முதலீட்டைத் திரட்டுவதற்கான செலவைவிட அதிகமாகச் சம்பாதிக்கிறது என்று உலகுக்குத் தெரிந்த மறுகணமே பல்வேறு போட்டி நிறுவனங்கள் அந்தத் தொழில் துறையில் உருவாக ஆரம்பித்துவிடும். இவ்வாறு அந்தத் தொழில்துறையில் பல்வேறு போட்டி நிறுவனங்கள் தொடர்ந்து உருவாகும்பட்சத்தில் அந்தத் தொழிலின் லாபம் கணிசமாகக் குறைந்துவிடும். அதனால், சுதந்திரமான போட்டிக்கு அனுமதியிருக்கும் சந்தையில் ஒரு துறையில் பெரிய அளவிலான சந்தைப் பங்களிப்பைக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மொத்த முதலீட்டுத் (பங்கு மற்றும் கடன்) தொகைக்கு ஈடாகக் கிடைக்கும் வருமானம் (ROCE) அல்லது பங்கு முதலீட்டுக்கு (ROE) ஈடாகக் கிடைக்கும் வருமானம் அதனுடைய முதலீட்டைத் திரட்டுவதற்கு ஆகும் செலவை ஒட்டியோ அல்லது அதைவிடக் கொஞ்சம் அதிகமாகவோ இருக்கும்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

முதலீட்டுச் செலவைவிட அதிக வருமானம் இல்லை..!

உலக அளவில் பல்வேறு தொழில்துறைகளில் எந்தெந்த நிறுவனம் பெரிய அளவிலான சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதொன்றும் பெரிய காரியமல்ல. சில்லறை மளிகைப் பொருள்கள் விற்பதில் அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம், பிரான்ஸில் கேரிஃபோர் நிறுவனம், சிறிய கார்களை உற்பத்திசெய்து விற்பனை செய்வதில் ஜப்பானில் டொயோட்டா பெரிய சந்தைப் பங்களிப்பையும், உள்ளாடை விற்பனையில் ஐரோப்பாவில் ஹேன்ஸ் எனும் நிறுவனம் பெரிய அளவிலான சந்தைப் பங்களிப்பையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஒன்றுகூட முதலீட்டைத் திரட்டுவதற்கான செலவைவிடப் பங்கு முதலீட்டுக்கு ஈடாகக் கிடைக்கும் வருமானத்தை (ROE) கடந்த காலத்தில் ஈட்டவில்லை (பார்க்க, அட்டவணை-1).

மினி தொடர் - 1 - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சூட்சுமங்கள்! - கொரோனாவுக்குப் பிறகான வழிகாட்டல்

இந்தியாவைப் பொறுத்தவரை, பல துறைகளில் ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்களே பெரிய அளவிலான சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் பங்கு முதலீட்டுக்கு (ROE) ஈடாகப் பெறும் வருமானம் (ROE) அதன் மூலதனத்தைத் திரட்டுவதற்கான செலவைவிட கணிசமான அளவு அதிகமாகவே இருக்கிறது (பார்க்க, அட்டவணை-2).

தனது தயாரிப்புகளுக்கு (போட்டியாளர்களைவிட அதிகமான) விலை நிர்ணயம் செய்வதில் நல்ல உறுதியான நிலைமை, போட்டியாளர்களைவிடச் சந்தையில் கணிசமாக அளவில் முன்னணியில் இருக்கும் நிலை ஆகிய இரண்டுமே இந்தவித அதிக லாபத்துக்கு வழிவகை செய்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து வருமானம் ஈட்டும் நிறுவனங்கள்..!

முதலீடு செய்யப்பட்டிருக்கும் மொத்த முதலீட்டுத் (பங்கு மற்றும் கடன்) தொகைக்கு ஈடாகக் கிடைக்கும் வருமானம் (ROCE) மூலதனச் செலவைவிட அதிகமாகக் கிடைக்கும் வருமானம்தான் முதலீட்டாளர்களுக்காக நிறுவனம் சம்பாதிக்கும் ‘ஃப்ரீ கேஷ் ஃப்ளோ.’ இந்த வகை நிறுவனங்கள் நீண்டகால அடிப்படையில் பெரிய வித்தியாசத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, (தேவைக்கேற்ப முதலீட்டைத் தொடர்ந்து அதிகரித்தும்) வருகின்றன.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்த நிறுவனங்களால் நிறுவனத்தின் உள்ளேயும் வெளியேயும் எந்த மாதிரியான சூழல்கள் நிலவினாலும் (சாதகம்/பாதகம் என) இந்த லாப வித்தியாசத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடிகிறது என்பதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது. இதனாலேயே இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து, `வருமானத்தை அதிகரிக்கும் நிறுவனங்கள்’ (Consistent computers) என்று அழைக்கிறோம்.

முதலீட்டாளர் ஒருவர் இதுபோன்ற நிறுவனங்களைத் தேர்வுசெய்து ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்க முயலும்போது, அதில் நீண்ட நாள்கள் முதலீடு செய்து காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அப்போது மட்டுமே ‘பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ தத்துவத்தின்படி, நல்லதொரு லாபத்தை அவர் ஈட்ட முடியும். இது பார்க்க மிகச் சுலபமாகத் தோன்றினாலும், இதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு ஒன்றும் சுலபமில்லை.

முதலீடு
முதலீடு

முதலில் ஒரு நிறுவனம் ஏனைய போட்டியாளர்களைவிட முன்னணியில் இருப்பதையும், அதன் மூலம் அதிக அளவில் லாபம் சம்பாதிக்கக் காரணமாக இருப்பது எது என்பதையும் நீங்கள் கண்டறிய வேண்டும். இரண்டாவதாக, தொடர்ந்து நீண்ட நாள்களுக்கு அந்த நிறுவனத்தால் சம்பாதிக்க முடியுமா என்பதையும் நீங்கள் கணிக்க வேண்டும். அதாவது, அதிக சந்தைப் பங்களிப்பு, அதிக லாபம், முதலீடு திரட்ட ஆகும் செலவைவிட மிக அதிக அளவிலான ஆர்.ஓ.இ., ஃப்ரீ கேஷ் ஃப்ளோ போன்றவை நீண்ட நாள்கள் அடிப்படையில் இருக்குமா என்பதைக் கண்டறிய முயல வேண்டும்.

இதை எப்படிக் கண்டறிவது என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் அடுத்த வாரம் பார்ப்போம்.

(முதலிடுவோம்)

பங்குச் சந்தை ஏற்றம் பெற என்ன காரணம்?

‘‘கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டின் கடைசியில் கொரோனாநோய்த் தொற்று ஏற்பட்டு, எல்லோரையும் பயமுறுத்தி வீட்டுக்குள் முடங்கவைத்தது. பிற்பாடு இந்த பயத்திலிருந்து அனைவரும் கொஞ்சம் விடுபட்டதால், சந்தை மீண்டும் ஏற்றத்தின் போக்கில் இருப்பதை இயற்கையான விஷயமாகவே பார்க்கலாம். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் காசநோய் உட்பட பல்வேறு தொற்று நோயால் 25 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள மரணம் மிகக் குறைவுதான்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

ஊரடங்கு நிலை படிப்படியாகத் தளர்த்தப்பட்ட பிறகு, எல்லாப் பொருள்களுக்கான தேவையும் அதிகரிக்கும். முக்கியமாக, குழந்தைகளுக்கான பால் பவுடர், மருந்துப் பொருள்கள், காலணிகள், உள்ளாடைகள் உள்ளிட்ட பல பொருள்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். மேலும், ஊரடங்குக்குப் பிறகு தொழிலாளர்கள் பற்றாக்குறையையும், பொருள்களைச் சந்தைக்குக் கொண்டு செல்லும்போது ஏற்படும் பிரச்னைகளையும் எளிதாகச் சமாளிக்கும் பலம் வாய்ந்த நிறுவனங்கள் சந்தையில் தங்களது பங்கை அதிகப்படுத்திக்கொள்ளும்.

தவிர, ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் மிகப்பெரிய அளவிலான பண உதவி, மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் நிதிக்கொள்கை தொடர்பான உதவிகள், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 60 சதவிகிதத்துக்குமேல் குறைந்திருப்பது போன்ற காரணங்கள் இந்த நிதியாண்டின் இரண்டாம் பகுதியில் நமது பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism