Published:Updated:

மே 4-ம் தேதி வெளியாகும் LIC IPO; பாலிசியுடன் PAN நம்பரை இணைத்த 6.5 கோடி பாலிசிதாரர்கள்!

எல்.ஐ.சி ஐ.பி.ஓ ( LIC IPO )

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் மொத்தம் ரூ.21,000 கோடி நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து அந்த நிறுவனம் திரட்டுகிறது. சுமார் 22.13 கோடி பங்குகள் இந்த ஐ.பி.ஓ-வில் வெளியிடப்படுன்றன.

மே 4-ம் தேதி வெளியாகும் LIC IPO; பாலிசியுடன் PAN நம்பரை இணைத்த 6.5 கோடி பாலிசிதாரர்கள்!

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் மொத்தம் ரூ.21,000 கோடி நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து அந்த நிறுவனம் திரட்டுகிறது. சுமார் 22.13 கோடி பங்குகள் இந்த ஐ.பி.ஓ-வில் வெளியிடப்படுன்றன.

Published:Updated:
எல்.ஐ.சி ஐ.பி.ஓ ( LIC IPO )

முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ. சி-யின் புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) வருகிற மே 4-ம் தேதி வெளியாகிறது. ஒரு பங்கின் விலை ரூ.902 - 949 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பங்கு வெளியீட்டில் 2.21 கோடி பங்குகள் பாலிசிதாரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கு பங்கு விலையில் ரூ.60 சலுகையும் வழக்கப்படுகிறது.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், மொத்தம் 6.48 கோடி பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசியை பான் நம்பருடன் இணைத்திருக்கும் நிலையில், 1.21 கோடி பேரிடம் மட்டுமே டீமேட் கணக்கு இருக்கிறது என எல்.ஐ.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டீமேட் கணக்குகள் இருந்தால்தான் இந்த ஐ.பி.ஓ-வில் பாலிசிதாரர்களால் கலந்துகொள்ள முடியும் என்பதால், டீமேட் கணக்கு ஆரம்பிக்காத பாலிசிதாரர்கள் உடனே டீமேட் கணக்கைத் துவங்கி, எல்.ஐ.சி ஐ.பி.ஒ-வில் கலந்துகொள்ள தயாராகுங்கள் என எல்.ஐ.சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

டீமேட் கணக்கு தொடங்குவது எளிது. உங்கள் பான் கார்டு, வங்கி அக்கவுண்ட் பாஸ்புக், கேன்சல்ட் செக்லீப்புடன் இரண்டு பாஸ்போர்ட் போட்டோக்களை கொடுத்து, பணம் செலுத்தினால், விரைவிலேயே டீமேட் கணக்கு உங்கள் பெயரில் திறக்கப்பட்டுவிடும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் மொத்தம் ரூ.21,000 கோடி நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து அந்த நிறுவனம் திரட்டுகிறது. சுமார் 22.13 கோடி பங்குகள் இந்த ஐ.பி.ஓ-வில் வெளியிடப்படுன்றன. இதில் 15.81 லட்சம் பங்குகள் எல்.ஐ.சி ஊழியர்களுக்காகவும், 9.88 கோடி பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்காகவும், 2.96 கோடி பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்காகவும் இதர பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐ.பி.ஓ-வில் எல்.ஐ.சி-யின் பங்கு விலையில் பாலிசிதாரர்களுக்கு மட்டுமல்லாமல், அதன் ஊழியர்களுக்கும் ரூ.45 தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மே 9-ம் தேதி வரை இந்த ஐ.பி.ஓ-வுக்கு விண்ணப்பிக்கலாம். மே 17-ம் தேதி பங்குச் சந்தையில் இந்தப் பங்கு பட்டியிலடப்படும் எனத் தெரிகிறது.

எல்ஐசி
எல்ஐசி
LIC

இந்த நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை அன்று கிரே மார்க்கெட்டில் எல்.ஐ.சி நிறுவனப் பங்கானது ரூ.969-க்கு வர்த்தகமானது. இது ஐ.பி.ஓ-வில் வெளியிடப்படும் பங்கு விலையைவிட 2% அதிகமாகும். எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் பங்கேற்பதற்கென்றே 6.5 கோடி பேர் பான் நம்பரை பாலிசியுடன் இணைத்தது போல, கடந்த மாதங்களில் பல கோடி புதிய முதலீட்டாளர்கள் புதிதாக டீமேட் கணக்குத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

பல தரப்பினர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியாவதால், நிச்சயமாக இதற்கு முதலீட்டாளர்கள் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism