இப்போது சந்தைக்கு வந்திருக்கும் சில திட்டங்கள்...
மல்டிகேப் ஃபண்ட்!
இந்தியாபுல்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘இந்தியாபுல்ஸ் மல்டிகேப் ஃபண்ட்’ (Indiabulls Multi Cap Fund) என்ற புதிய ஃபண்டை வெளியிட்டிருக்கிறது. இது, ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு மார்ச் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். திரட்டப்படும் நிதி, ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். நுழைவுக் கட்டணம், வெளியேறும் கட்டணம் ஆகியவை கிடையாது. இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்ட் அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களும் இளம் வயதினரும் முதலீடு செய்யலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎல்.ஐ.சி-யின் புதிய பாலிசிகள்!
எல்.ஐ.சி நிறுவனம் ‘நிவேஷ் ப்ளஸ்’, ‘எஸ்.ஐ.ஐ.பி’ ஆகிய இரண்டு புதிய பாலிசிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இவை பங்குச் சந்தையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டங்கள். நிவேஷ் ப்ளஸ் பாலிசி சிங்கிள் பிரீமியம் திட்டம். இதன் குறைந்தபட்ச தொகை ரூ.1 லட்சம். அதிகபட்சமாக பாலிசிதாரர்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம். பாலிசியின் முதிர்வுக்காலம் 10 முதல் 25 ஆண்டுகள்.
இந்தத் திட்டத்தில் 55 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டு பிரீமியம் தொகை போல் 10 மடங்கு கவரேஜ் கிடைக்கும். 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இந்த கவரேஜ் ஏழு மடங்காக இருக்கிறது.
நிவேஷ் ப்ளஸ் பாலிசி சிங்கிள் பிரீமியம் திட்டம். இதன் குறைந்தபட்ச தொகை ரூ.1 லட்சம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
புரொட்டக்ஷன் ஓரியன்டடு ஃபண்ட்!
எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘எஸ்.பி.ஐ கேப்பிட்டல் புரொட்டக்ஷன் ஓரியன்டடு ஃபண்ட் - சீரிஸ் ஏ (பிளான் 8)’ (SBI Capital Protection Oriented Fund - Series A (Plan 8) என்ற ஃபண்ட் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. குளோஸ்டு எண்டடு வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் ரூ.5,000-லிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். மார்ச் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த ஃபண்ட்டில் ஓரளவுக்கு ரிஸ்க் இருக்கும் என்பதால், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் மற்றும் இளம் வயதினர் முதலீடு செய்யலாம்.

மிட்கேப் ஃபண்ட்!
யூனியன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘யூனியன் மிட்கேப் ஃபண்ட்’ (Union Midcap Fund) என்ற ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு மார்ச் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். இந்த ஃபண்ட் அதிக ரிஸ்க்கொண்டது என்பதால், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் மற்றும் இளம் வயதினர் முதலீடு செய்யலாம்!