அண்மையில் சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் சில முதலீட்டுத் திட்டங்களைப் பார்ப்போம்.

வேல்யூ ஃபண்ட்!

டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘டி.எஸ்.பி வேல்யூ ஃபண்ட்’ (DSP Value Fund) என்ற ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. இது ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு டிசம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். திரட்டப்படும் நிதி, ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களிலும் நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். இதில் முதலீடு செய்யும்போது நுழைவுக் கட்டணம் கிடையாது. 12 மாதங்களுக்குள் வெளியேறினால் வெளியேறும் கட்டணம் 1% வரை உண்டு. இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். அதிக ரிஸ்க் என்பதால், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களும் இளம் வயதினரும் முதலீடு செய்யலாம்.

குவான்ட் ஃபண்ட்!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ‘ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் குவான்ட் ஃபண்ட்’ (ICICI Prudential QUANT FUND) ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். டிசம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். திரட்டப்படும் நிதி, ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். மூன்று மாதங்களுக்குள் வெளியேறினால் வெளியேறும் கட்டணம் 1% உண்டு. இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்ட் அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களும் இளம் வயதினரும் முதலீடு செய்யலாம்.

கோட்டக் இ.எஸ்.ஜி ஃபண்ட்!

கோட்டக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘கோட்டக் இ.எஸ்.ஜி ஆப்பர்ச் சூனீட்டீஸ் ஃபண்ட்’ (Kotak ESG Opportunities Fund) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயி லிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். டிசம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதலீட்டாளர்களிடம் திரட்டப்படும் நிதி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத, சமூகத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் மற்றும் சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்டில் ஓரளவு ரிஸ்க் உண்டு என்பதால், ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் மற்றும் இளம் வயதினர் முதலீடு செய்யலாம்.

பேங்கிங் அண்டு ஃபைனான்ஷியல் சர்வீஸ் ஃபண்ட்!

மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘மிரே அஸெட் பேங்கிங் அண்ட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் மியூச்சுவல் ஃபண்ட்’ (Mirae Asset Banking and Financial Services Fund) என்ற ஃபண்டை வெளியிட்டி ருக்கிறது. இது, ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்தது. டிசம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். திரட்டப்படும் நிதி, பேங்கிங் மற்றும் ஃபைனான்ஷியல் சார்ந்த ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்ட் அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களும் இளம் வயதினரும் முதலீடு செய்யலாம்.