சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள முதலீடு மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் சில...

கொரோனா கவச், கொரோனா ரக்ஷக்!

வழக்கமான மருத்துவக் காப்பீட்டு பாலிசி, கொரோனா சிகிச்சைக்கும் பொருந்தும் என்றாலும், கொரோனா சிகிச்சைக்கான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட செலவுகள் இதன்கீழ் வராது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக, இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ), `கொரோனாவுக்காக என்று ‘கொரோனா கவச்’, ‘கொரோனா ரக்ஷக்’ ஆகிய இரண்டு பாலிசிகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது. இதில், கொரோனா கவச் பாலிசியில் மருத்துவமனைச் செலவுகளுக்கேற்ப இழப்பீடு கிடைக்கும். கொரோனா ரக்ஷக் பாலிசியில் `கொரோனா பாசிட்டிவ்’ எனத் தெரியவந்தால் கவரேஜ் தொகை மொத்தமாக வழங்கப்படும்.

இந்த பாலிசிகள் மூலம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெறலாம். தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் பாலிசியாகவும் பெறலாம். இவ்விரண்டு பாலிசிகளுமே குறைந்த காலத்துக்கான, ஒருமுறை பிரீமியம் கொண்ட, புதுப்பிக்கப்பட முடியாத பாலிசிகள்.

இவற்றின் காலம், 105 நாள்கள், 195 நாள்கள் மற்றும் 285 நாள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 18 முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம். பாலிசி எடுத்த 15 நாள்களுக்கு பிறகுதான் க்ளெய்ம் பெற முடியும்.

டி.சி.பி பேங்க் கோல்டு லோன்!

தொழில்முனைவோர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களின் தொழிலை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான நிதியை டி.சி.பி பேங்க் தங்க நகைக்கடன் வாயிலாக வழங்குகிறது. 10,000 ரூபாயிலிருந்து ரூ.20 லட்சம் வரை கடன் வாங்க முடியும். தங்கத்தின் விலையைப் பொறுத்து கடன் தொகையில் வித்தியாசம் இருக்கும். தங்க பிஸ்கட்கள் மற்றும் தங்கக் கட்டிகள் ஏற்றுக் கொள்ளப்படாது. தங்க நகைகள் மற்றும் நாணயங்களை மட்டுமே அடமானமாக வைத்து கடன் பெற முடியும்.

எல்.ஐ.சி ஹவுஸிங் - வரலாறு காணாத வட்டிக் குறைப்பு!

எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் அதன் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை இதுவரை இல்லாத அளவுக்குக் குறைத்துள்ளது.அதன்படி ரூ.50 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு, சிபில் ஸ்கோர் 700-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களுடன், கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் 6.90 சதவிகிதத்திலிருந்து தொடங்குவதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இவ்வளவு குறைவான வட்டிக்கு இந்த நிறுவனம் கடன் வழங்கியதில்லை.

வீட்டுக்கடன் ரூ.50 லட்சத்துக்கு மேல் சென்றால், 7% வட்டி என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. `சொத்துகள் வாங்குவதற்கும், கட்டுமானம் மற்றும் மறுகட்டுமானம் அல்லது அழகுபடுத்துதல் ஆகியவற்றுக்கும் இந்த வட்டி விகிதம் பொருந்தும்’ என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.